ஆமா பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தோம்.. பயத்தில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் ராணுவ அமைச்சர்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் தாக்குதலுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் இப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தோம் என்பதை அந்த நாட்டின் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புகொண்ட வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது தீவிரமாகி உள்ளது. இருநாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகின்றன. இன்று காலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நம் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச்சூட்டுடன் சண்டை நடந்தது.

இந்த சண்டையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது. கடந்த 22ம் தேதி காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் கடந்த 22ம் தேதி 26 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை பிரிவான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் தான் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் தான் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது.
ஆனால் நம் நாட்டின் பதிலடிக்கு பயந்துபோன பாகிஸ்தான் எங்களுக்கும், காஷ்மீர் தாக்குதலுக்கு சம்பந்தம் இல்லை. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறியது. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலை நடத்திவிட்டு தொடர்பு இல்லை என்று கூறுவது வழக்கமான ஒன்று தான்.
இதனால் மத்திய அரசு நம்பவில்லை.
இந்நிலையில் தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரளிப்பதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும் வீடியோ வெளியாகி பாகிஸ்தான் - பயங்கரவாதிகளின் கூட்டு சதியை அம்பலமாக்கி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்ஸ்கை நியூஸில் பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது பரவி வருகிறது.
அதில், ‛‛பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குகிறது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது பயங்கரவாதிகளின் பின்னால் இருந்து பாகிஸ்தான் செயல்படுகிறது?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ‛‛ நாங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்காக அமெரிக்காவிற்கும், பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளுக்காகவும் இந்த மோசமான வேலைகளை செய்து செய்தோம். அது தவறு. அதற்காக நாங்கள் துன்பப்பட்டோம்.
சோவியத் யூனியன் மற்றும் 9/11 தாக்குதலில் நாங்கள் பங்கேற்காமல் இருந்து இருந்தால் பாகிஸ்தானின் டிராக் ரெக்கார்ட் என்பது சரியாக இருந்திருக்கும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் ஒப்பு கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி அதனை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பே ஒப்புக்கொண்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications