மூன்று பேரும் உல்லாசமாக இருக்கலாம்.. சக பெண் ஊழியரை அழைத்த இத்தாலி பிரதமரின் முன்னாள் காதலன்
ரோம்: இத்தாலி பிரதமர் மெலோனியின் முன்னாள் பார்ட்னர் ஜியாம்ப்ருனோ லீலைகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி தன்னுடன் பணி செய்யும் சக பெண் ஊழியரை குரூப் பாலியல் உறவுக்கு அழைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இத்தாலி நாட்டின் பிரதமராகப் பொறுப்பிற்கு வந்தார். பதவியேற்று ஓராண்டு நிறைவு அடைய உள்ள நிலையில், சொந்த வாழ்க்கையில் அவருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. அதாவது, 46 வயதான ஜார்ஜியா திருமணம் செய்து கொள்ளாமல் தனது ஆண் நண்பருடன் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தார்.

இந்த ஜோடிக்கு 7-வயதில் ஒரு மகள் உள்ளார். இத்தாலியில் உள்ள மிகப்பெரிய மீடியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்ஜியா மெலோனியின் பார்ட்னர் அண்மையில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். "டியாரியோ டெல் ஜியோர்னோ" என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வந்த மெலோனியின் பார்ட்னர், நிகழ்ச்சியின் இடையே பேசிய சில கருத்துகள் இணையத்தில் விவாதத்திற்கு உள்ளானது.
வேறு ஒரு பெண்ணுடன் உறவு: கூட்டுப் பலாத்காரம் தொடர்பாகப் பேசும் போது, பெண்கள் அதிகமாகக் குடிக்காமல் இருந்தால் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறினார். மேலும், "நீங்கள் பார்ட்டிக்கு சென்றால்.. கண்டிப்பாக மது குடிப்பீர்கள். ஆனால் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு உங்கள் உணர்வை இழக்கும் போதுதான் பிரச்சினை வருகிறது. இதைச் செய்யாமல் இருந்தால் எல்லா பிரச்சினையையும் தவிர்க்கலாம்" என்று கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி ஆக்குவது போல இவரது கருத்துகள் இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. கடந்த அக்டோபர் மாதம் இந்தச் சம்பவம் நடந்தது. ஜியாம்ப்ருனோவின் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பது போலவும் ஆபாசமாகவும் அவர் பேசும் பேச்சு வெளியான நிலையில், அவரை விட்டுப் பிரிவதாக மெலோனி அறிவித்தார். இது தொடர்பாக இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சொல்வதற்கு ஒன்றுமில்லை: "சுமார் 10 ஆண்டுகள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ உடனான எனது உறவு இப்போது முடிகிறது. கடந்த சில காலமாகவே எங்கள் பாதைகள் பிரிந்துவிட்டன. அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நாங்கள் கழித்த இந்த காலத்தையும் எங்கள் நட்பையும் நான் பாதுகாப்பேன்.. தனது தாய் மற்றும் தந்தையை நேசிக்கும் எனது ஏழு வயது சிறுமியை நான் நிச்சயம் பார்த்துக் கொள்வேன். இதைப் பற்றி நான் சொல்வதற்கு வேறொன்றுமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
போர்சம் கூட ஓகேதான்: இதற்கிடையே ஜியாம்ப்ருனோ தொடர்பான வேறு சில வீடியோக்களும் வெளியாகி உள்ளது. அதில் தனது பெண் ஊழியரிடம் ஆபாசமாக நடந்து கொள்கிறார். அது மட்டும் இன்றி குரூப் செக்ஸ்க்கு அழைப்பு விடுக்கும் வகையில் அந்த பெண்ணிடம் பேசுகிறார். இது தொடர்பாக பரவும் வீடியோவில் , உனக்கு தெரியுமா? நாங்கள் இருவரும்(பெயர் சொல்லவில்லை) உறவில் இருக்கிறோம்.
ஒட்டுமொத்த மீடியாசெட் நிறுவனத்திற்கும் இது தெரியும். தற்போது உங்களுக்கும் தெரிந்து விட்டது. ஆனால், நாங்கள் மூன்றாவது ஒரு நபரை எதிர்பார்க்கிறோம். நாம் த்ரீசம்ஸ் செய்யலாம்... போர்சம் கூட ஓகேதான்.. எங்கள் பணிக்குழுவில் பங்கெடுக்க விரும்புகிறீர்களா" என கேட்கும் ஆடியோ அதில் இடம் பெற்றுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications