எல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு!
டெக்ஸாஸ்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் கடுமையாக செயல்பட்டு வருகிறது என்று ஹவுடி மோடி நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
ஹவுஸ்டன் நகரில் இன்று ஹவுடி மோடி விழா நடந்தது. மொத்தம் 50000 இந்தியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி இந்த விழாவில் முன்னிலை வகித்தார். முதலில் மோடி இதில் மக்கள் முன்னிலையில் பேசினார். அதன்பின் ஹவுடி மோடி விழாவில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப் நீண்ட நேரம் பேசினார்.

என்ன சொன்னார்
டிரம்ப் தனது பேச்சில், இந்திய அமெரிக்க மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள்.மருத்துவ துறையில் இந்திய அமெரிக்கர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.புதிய தொழில்நுட்பங்களை இந்தியர்கள் உருவாக்கி வருகிறார். பிரதமர் மோடியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.

என்ன போட்டி
இந்தியாவில் என்பிஏ பாஸ்காட் பால் போட்டி விரைவில் உள்ளோம். இந்தியா உடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை செய்து இருக்கிறோம். எரிசக்தி துறையில் இரண்டு நாடுகளும் பெரிய அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகில் பெரிய எரிசக்தி உற்பத்தி நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

ஒப்பந்தம்
பாதுகாப்பு துறையிலும் இரண்டு நாடுகள் இடையிலான நட்பு உலக அளவில் பெரிதாக மாறியுள்ளது. அமெரிக்காவின் ஸ்பேஸ் பாதுகாப்பு படை தொடர்பாகவும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். இரண்டு நாடுகளும் இந்த கருத்தில் ஒரே நிலைப்பாடு கொண்டுள்ளது.

எல்லை முக்கியம்
2 நாடுகளும் தங்கள் எல்லையை பாதுகாக்க வேண்டும்.எல்லை பாதுகாப்பு இரண்டு நாட்டிற்கும் மிக மிக முக்கியமானது ஆகும். அமெரிக்காவின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல்தான் இந்தியாவும் தனது எல்லைகளை பலப்படுத்தி உள்ளது, என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications