"வேர்ல்டு வார் 3".. அப்படியே காலி செய்திருப்பேன்.. டென்சனில் விளாசிய அதிபர் புடின்.. தகிக்கும் ரஷ்யா
மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அமெரிக்கா, பிரிட்டன் உடன் நேரடி மோதலுக்கு ரஷ்யாவின் அதிபர் புடின் தயாராகி உள்ளார்.
Recommended Video
ரஷ்யாவில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. அங்கு கொரோனா இரண்டாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே ரஷ்யாவில் மக்களிடையே வேக்சின் போடும் ஆர்வம் இல்லை.
அந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி வேக்சினை போட்டுக்கொள்ள ரஷ்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ரஷ்யாவில் இன்னொரு பக்கம் யூரோ 2020 கால்பந்து தொடரும் நடந்து வருகிறது.

கேஸ்கள்
அங்கு நடந்த யூரோ கால் பந்து தொடர் காரணமாக கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் செயின்ட் பீட்டர்பெர்க்கில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் பல்லாயிரம் பேர் ரசிகர்களாக கலந்து கொண்டதால் அங்கு புதிய கிளஸ்டர் தோன்றியது. இது ரஷ்யாவில் கொரோனா பரவலை வேகப்படுத்தியது. கிட்டத்தட்ட ரஷ்யா நிலைகுலையும் அளவிற்கு அங்கு கேஸ்கள் வேகமாக உயருகிறது.

எப்படி
ரஷ்யாவில் நேற்று 663 மரணங்கள் பதிவாகின. அதற்கு முந்தைய நாட்களில் 400 என்ற அளவிலேயே பலி எண்ணிக்கை பதிவான நிலையில், ரஷ்யாவில் இப்போது கேஸ்கள், மரணங்கள் மிக வேகமாக உயர தொடங்கி உள்ளது. ரஷ்யாவில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 5,538,142 ஆக உயர்ந்துள்ளது. அதோடு புதிய கேஸ்களில் எண்ணிக்கை நீண்ட காலத்திற்கு பின் 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ரஷ்யா
ரஷ்யாவில் பலி எண்ணிக்கையும் 135,886 தாண்டி உள்ளது. ஒரு பக்கம் கொரோனா டென்ஷனில் மொத்த ரஷ்யாவும் தகித்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் அதிபர் புடின் மக்கள் யாரும் வேக்சின் போட முன் வரவில்லை என்ற கோபத்திலும், அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம் காரணமாகவும் விரக்தியில் இருக்கிறார். இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில்தான் ரஷ்யா பிரிட்டன் உடன் கிட்டத்தட்ட 3ம் உலகப்போரை தொடங்கும் அளவிற்கு சென்றுள்ளது.

என்ன நடந்தது
கருங்கடல் மோதல் காரணமாக மீண்டும் ஒரு போர் வெடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. ரஷ்யா இதன் இன்னொரு எல்லையில் உள்ளது. இந்த கடல் பகுதியை ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், கருங்கடலில் ரஷ்யாவின் கடல் பகுதிக்குள் பிரிட்டனின் கப்பல் எல்லை தாண்டி வந்ததாக ரஷ்யா தெரிவிக்கிறது. இன்னொரு முறை கடற்படை கப்பல் வந்தால் குண்டு போட்டு உடனே தாக்குவோம் என்று ரஷ்யா வார்னிங் கொடுத்துள்ளது.

குற்றம்
பிரிட்டனின் Royal Navy destroyer Defender என்ற போர் கப்பல் இங்கே ரோந்து பணியை மேற்கொண்டு வந்தது. அப்போது ரஷ்ய எல்லைக்குள் பிரிட்டன் கப்பல் சென்றுள்ளதாக ரஷ்யா கூறுகிறது. இந்த சம்பவம் நடந்து முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், அதிபர் புடின் தற்போது பிரிட்டன், அமெரிக்கா மீது கோபமாக புகார்களை அடுக்கி உள்ளார். இன்று புடின் அளித்த பேட்டியில், பிரிட்டன் கப்பல் மீது சத்தமின்றி நாங்கள் குண்டு போட்டு இருப்போம்.

குண்டு
சத்தமின்றி மூன்றாம் உலகப்போரை தொடங்காமலே பிரிட்டன் கப்பலை நாங்கள் மூழ்கடித்து இருப்போம். சிலரின் தூண்டுதலால் இதுபோன்ற எல்லை அத்துமீறல்கள் நடக்கின்றன. அவர்களுக்கு தெரியும் மூன்றாம் உலகப்போரை தொடங்கினால், அவர்கள் தோல்வி அடைந்துவிடுவார்கள் என்று. அவர்களால் மூன்றாம் உலகப் போர் வந்தால் வெற்றிபெற முடியாது.

அமெரிக்கா
அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவைதான் இந்த மோதலை தூண்டி விடுகிறது. ஜி7 மாநாட்டில் அதிபர் பிடனை சந்தித்த பின் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. மோதலை தூண்டிவிட வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. கிரீமியா கடல் பகுதியில் பிரிட்டன் அத்துமீறி உள்ளது. கிரீமியா ரஷ்யாவுடன் இணைவதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் இப்படி செய்கிறார்கள்.

மோசம்
இந்த அத்துமீறல்களை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். இதற்கு முன்பு இதுபோன்ற அத்துமீறல்களை நாங்கள் எப்படி எதிர்கொண்டோம் என்பது அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் நினைவிருக்கட்டும், இதை விட்டுவிட மாட்டோம் என்று அதிபர் புடின் சவால் விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இரண்டு நாடுகளும் கிரீமியா அருகே இருக்கும் கருங்கடல் பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது.

மோதல் காரணம்
இந்த பகுதியை ரஷ்யா சொந்தம் கொண்டாடினாலும் அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கிரீமியா கடல் பகுதி உக்ரைனுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது. இங்கு கடந்த வாரம் பிரிட்டன் கப்பல் உள்ளே சென்றது மோதலை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் ரஷ்ய அதிபர் புடின் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக ரஷ்யா மிக மோசமான நிலையில் இருக்கும் போதும் கூட இப்படி ஒரு மோதல் வெடித்து இருப்பது ரஷ்ய மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications