Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

93,40,43,55,22,800 ரூபாய்! டிரம்ப் முதலடி அடித்தால்.. 2வது அடி பயங்கரமா இருக்கும்! கனடா வைத்த செக்

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: அமெரிக்கா தங்கள் மீது கூடுதல் வரிகளை விதித்தால் அமெரிக்கா மீது நாங்கள் 9 லட்சம் கோடி ரூபாய்க்கு கூடுதல் வரிகளை விதிப்போம் என்று கனடா எச்சரித்து உள்ளது.

கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

canada justin trudeau

அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கனடா, பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும் கனடாவிற்கு கூடுதல் வரி விதிப்போம் என்றும் கூட டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

கனடா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை:

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கனடாவின் பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தால், அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரியை விதிப்போம் என்று கனடா எச்சரித்து உள்ளது.

டிரம்ப் முதல் அடி அடித்தால்.. கனடா இரண்டாவது அடி அடிக்கும். அது பயங்கரமான அடியாக இருக்கும் என்று கனடா கூறி உள்ளது. இதற்கான ஆரம்பப் பட்டியலை கனடா ஏற்கனவே தயாரித்துள்ளது. அமெரிக்கா என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து கனடா அமெரிக்காவிற்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கும் என்று என்று கனடா கூறி உள்ளது.

அமெரிக்கா பொருட்கள் மீது விதிக்க வேண்டிய வரிக்கான பட்டியலை கூட கனடா ரெடி செய்துவிட்டது. விஸ்கி மற்றும் வாஷிங் மெஷின்கள் போன்ற அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்க கனடா திட்டமிட்டு வருகிறதாம். மொத்தமாக 9 லட்சம் கோடி ரூபாய் வரியை கூடுதலாக விதிக்கும் வகையில் அமெரிக்கா பட்டியலை தயாரித்து உள்ளதாம்.

கனடா வைக்கும் செக்:

ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது. 2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60% ஆகும். அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பி உள்ளது.

2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 7.1 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க இயற்கை எரிவாயு இறக்குமதியில் குறிப்பிடத்தக்க அளவு ஆகும்.

2022 ஆம் ஆண்டில், கனடா சுமார் 53 டெராவாட் (TWh) மின்சாரத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. கணக்குப்படி பார்த்தால் மின்சாரம், கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு என்று அனைத்திற்கும் கனடாவையே அமெரிக்கா நம்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+