தன்னை விட 21 வயது இளையவரை மணந்தார் புடினின் முன்னாள் மனைவி!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் முன்னாள் மனைவியான லூத்மிலா தன்னை விட 21 வயது இளையவரை திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று செய்திகள் கூறினாலும் கூட லூத்மிலாவின் மறுமணம் உண்மைதான் என்று கூறப்படுகிறது.

புடினின் முன்னாள் மனைவி லூத்மிலா. இருவரும் 30 வருடம் தாம்பத்தியம் நடத்தியவர்கள். கடந்த 1983ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் கடந்த 2013ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதற்குக் காரணம், புடின் தன்னை விட மிக மிக இளம் வயதுப் பெண்ணான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை கபயேவாவுடன் தொடர்பு வைத்திருப்பதால்தான் என்று செய்திகள் வெளியாகின.

மறுமணம் செய்யும் வரை

மறுமணம் செய்யும் வரை

லூத்மிலாவை பிரிந்த பின்னர் புடின் - கபயேவா குறித்து அதிக செய்திகள் வெளியாகின. மறுமணம் செய்வீர்களா என்று புடினிடம் செய்தி நிறுவனங்கள் கேட்டபோது, லூத்மிலா முதலில் மறுமணம் புரியட்டும். அதன் பிறகு பார்க்கலாம் என்று கூறி வந்தார் புடின்.

லூத்மிலாவின் மறுமணம்

லூத்மிலாவின் மறுமணம்

இந்த நிலையில்தான் லூத்மிலாவின் மறுமணச் செய்தி வெளியாகியுள்ளது. அவர் மறுமணம் செய்திருப்பது ஒரு கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான 37 வயதான ஆர்தர் ஆச்செர்டினி என்பவரை.

'சர்நேம்' மாறியது

'சர்நேம்' மாறியது

இதுவரை லூத்மிலா புடினா என்று அறியப்பட்டு வந்த லூத்மிலா தனது சர்நேமையும் கூட மாற்றி விட்டாராம். அவர் புதிதாகப் பெற்றுள்ள பாஸ்போர்ட்டில் தனது புதிய கணவரின் பெயரை சர்நேமாக சேர்த்துள்ளாராம்.

21 வயது இளையவர்

21 வயது இளையவர்

லூத்மிலாவுக்கு தற்போது வயது 58 ஆகிறது. அவர் மணந்துள்ள ஆர்தருக்கு 37 வயதாகிறது. அதாவது 21 வயதுக் குறைந்தவரை திருமணம் செய்துள்ளார் லூத்மிலா.

ரகசியத் திருமணம்

ரகசியத் திருமணம்

இருவரும் எங்கு வைத்துத் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரியவில்லை. இருவரும் அதைத் தெரிவிக்கவும் இல்லை. ஆனால் திருமணம் பதிவு செய்யப்பட்டு விட்டதாம்.

அடுத்து புடினும் மறுமணம்?

அடுத்து புடினும் மறுமணம்?

லூத்மிலா மறுமணம் புரியும் வரை நான் மறுமணம் செய்ய மாட்டேன் என்று கூறி வந்தார் புடின். தற்போது அவர் மறுமணத்திற்குத் தயாராகி விட்டாரா என்று தெரியவில்லை. இருப்பினும் அவரும் விரைவில் தனது மறுமணத்தை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+