ஒரே ஒரு முத்தம்... எவ்வளவு பெரிய "லாஸ்" பாருங்க... இந்த டைரக்டருக்கு!
லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ரூபர்ட் சாண்டர்ஸ் செய்த காரியத்தால் அவருக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது.
நடிகை கிறிஸ்டன் ஸ்டூவர்ட்டுடன் அவர் நெருக்கமாக, இறுக்கி அணைத்தபடி முத்தமிட்டது போல வெளியான ஒரு புகைப்படம் அவருக்கு இந்த இழப்பைக் கொண்டு வந்து விட்டது.
இந்த புகைப்படம் வெளியானதால் கோபமடைந்த அவரது மனைவியும், மாடல் அழகியும், நடிகையுமான லிபர்ட்டி ராஸ் கோர்ட்டுக்குப் போய் விட்டார். கோர்ட் விவாகரத்து கொடுத்தது. கூடவே, 3 வீடுகள், மாதம் 23,000 பவுண்டு பராமரிப்புத் தொகை மற்றும் அவரது புதிய படத்தின் வசூலில் ஒரு பகுதியையும் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது கோர்ட்.
அது மட்டுமா, ரூபர்ட்டின் கிரெடிட் கார்டின் ரிவார்ட் பாயிண்டுகளில் பாதியும் ராஸுக்குப் போய்ச் சேர வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது ரூபர்ட்டுக்கு கையில் மிச்சம் இருப்பது மாலிபுவில் உள்ள ஒரு வீடும், 1970 மாடல் வோக்ஸ்வேகன் கேம்பர் வேனும் மட்டுமே.
மறுபக்கம், ரூபர்ட்டுடன் நெருக்கமாக இருந்ததால் கோபமாகிப் போன கிறிஸ்டனின் காதலர் அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார்.

வெளியான படம்... சிதறிப் போன மனம்..
இத்தனைக் குழப்பத்துக்கும் காரணம் அந்த புகைப்படம்தான். படு நெருக்கமாக ரூபர்ட்டும், கிறிஸ்டனும் இருப்பது போன்ற படம் அது.

இறுக்கி அணைச்சு உம்மா.. எல்லாம் போச்சு!
அந்தப் படத்தில் நடிகை கிறிஸ்டனை பின்னால் இருந்து இறுக்கி அணைத்து அவருக்கு முத்தமிடுகிறார் ரூபர்ட். மிகுந்த பரவச நிலையில் காணப்படுகிறார் கிறிஸ்டன்.

கார் பார்க்கில் வைத்து
2012ம் ஆண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஹாலிவுட்டில் உள்ள ஒரு ஸ்டுடியோவின் கார் பார்க்கில் வைத்து இப்படி கட்டிப் பிடித்து முத்தமிட்டுள்ளார் ரூபர்ட்.

செமத்தியான நஷ்டம்
இந்தப் புகைப்படத்தால் இப்போது பல நஷ்டங்களைச் சந்தித்துள்ளார் ரூபர்ட். அவரது கதைதான் ஹாலிவுட்டில் இப்போது கேலியாக பேசப்படுகிறது.

கிறிஸ்டனுக்கு அம்மாவாக நடித்தவர்
என்ன வேடிக்கை என்றால், தி ஹன்ஸ்ட்மேன் என்ற படத்தில் கிறிஸ்டனுக்கு அம்மா வேடத்தில் நடித்துள்ளார் ராஸ் என்பதுதான். இந்தப் படபடம் 230 மில்லியன் பவுண்டு வசூலை வாரிச் சுருட்டியதாகும்.

மகன் - மகள் அப்பா, அம்மா வசம்
இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது மகள் ஸ்கைலர் மற்றும் மகன் டென்னிசனை பராமரிக்கவுள்ளனராம். இதில் பள்ளிக்கூட பீஸ், மருத்துவ செலவுக்கு ரூபர்ட் 75 சதவீதத் தொகையைத் தர ஒப்புக் கொண்டுள்ளார்.

ராஸின் வக்கீலுக்கு இதே வேலைதானாம்
ராஸுக்காக ஆஜரான வக்கீலின் பெயர் லாரா வாசர். இவர் விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட்டாம். ஏற்கனவே மரியா ஷிரீவருக்கும், அர்னால்ட் ஸ்வர்ஸனீகருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கிலும் இவர்தான் மரியாவுக்காக ஆஜரானவர். இதேபோல ஏஞ்செலீனா ஜூலிக்கும் இவர் வக்கீலாக இருந்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications