சிரிச்சி சிரிச்சி பேசிய பெண்.. கவிழ்ந்த 62 வயது தாத்தா.. கடைசியில பார்த்தால் டேபிள் மேல "தலை".. ஐயோ

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: பாத்ரூமில் குளித்த அந்த நபருக்கு தலையை காணோமாம்.. இதை பார்த்து அந்த லாட்ஜ் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடிவந்துள்ளனர்.. இந்த செய்திதான் ஜப்பான் முழுக்க பரபரப்பையும் அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

ஜப்பானின் சப்போரோவில் உள்ள சுசுகினோ மாவட்டத்தில், ஒக்கைடோ தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. சுற்றுலா பயணிகள் அதிக அளவு செல்லும் தீவு இதுவாகும். அதனால் இங்கு ஏராளனமான ரிசார்ட்களும், லாட்ஜ்களும் காணப்படும்.

Were the parents complicit in their daughters brutality and what happened in Japan

அந்தவகையில், "லவ் ஹோட்டல்" என்று லாட்ஜ் இயங்கி வருகிறது.. இந்த லாட்ஜிலேயே ரெஸ்ட்டாரண்ட்டும் உள்ளது.. இந்நிலையில், இந்த லாட்ஜூக்கு 62 வயது நபர், பெண்ணுடன் வந்திருக்கிறார். அந்த நபர் பெயர் ஹிட்டோஷி.. இவர்கள் 2 பேரும் அந்த ரெஸ்டாரெண்ட்டில் சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு சென்றுவிட்டனர்.

லாட்ஜ் ஊழியர்கள்: இந்நிலையில், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவரது ரூம் கதவு திறக்கப்படாததால், லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகப்பட்டு, நிர்வாகத்திடம் சொன்னார்கள்.. இதையடுத்து லாட்ஜ் நிர்வாகமும், அந்த ரூம் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த பாத்ரூம், உள்ள குளியல் தொட்டியில், ஹிட்டாஷி உடல் நிர்வாணமாக இருந்தது.. ஆனால் அவருக்கு தலை இல்லை.. தலையில்லாத முண்டத்தை பார்த்த ஊழியர்கள், அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர்.

இதற்கு பிறகு, போலீசாருக்கு விஷயம் சொல்லப்பட்டது.. அவர்களும் விரைந்து வந்து, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அந்த கேமராவில், கடந்த ஜூலை 1ம் தேதி, இரவு 10.50 மணியளவில் ஹிட்டாஷி அந்த பெண்ணுடன் ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிட சென்றுள்ளது பதிவாகியிருந்தது. அப்போது இருவருமே கேஷூவலாகவும், சிரித்தபடியும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

விடிகாலை : இதற்கு பிறகுதான் ஒரு ஆணும், பெண்ணும் புதிதாக வந்திருக்கிறார்கள்.. இவர்கள் நேராக ஹிட்டாஷி ரூமுக்கு சென்றிருக்கிறார்கள்.. ஆகமொத்தம் 4 பேர் அன்றைய தினம் இரவு ரூமில் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்... பிறகு, மறுநாள் ஜூலை 2ம் தேதி விடிகாலை 2 மணிக்கு, ஹிட்டாஷியை தவிர, மற்ற 3 பேரும் ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.. அப்போது அந்த 3 பேருமே கறுப்பு அங்கியை அணிந்து கொண்டு சென்றிருப்பது அந்த கேமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, விசாரணை ஆரம்பமானது.. ஹிட்டோஷியுடன் வந்த பெண்ணின் பெயர் ரூனா தாமுரா.. 29 வயதாகிறது.. இந்த பெண்ணை போலீஸார் அடையாளம் கண்டு, உடனடியாக கைது செய்தனர்.. அன்றைய தினம் இரவு மூருக்கு சென்றது வேறு யாருமில்லை.. ரூனா தாமுராவின் அம்மாவும், அப்பாவும்தான்.

மனநலம்: ஹிட்டாஷியை, அம்மா - அப்பா - மகள் என 3 பேருமே சேர்ந்து கொடூரமாக கொன்றிருக்கிறார்கள்.. இந்த ரூனா தாமுரா, சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராம்.. சைக்கோ பாதிப்பு இருந்திருக்கிறது.. முக்கியமாக, கொடூரமாக கொலை செய்வதுதான், ரூனா தாமுராவுக்கு பிரச்சனையாக இருந்திருக்கிறது. இவர் அப்பா ஒரு மனநல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அதனால், தன் சைக்கோ மகளுக்கு, இவரே வைத்தியம் பார்த்தும் வந்துள்ளார்..

எனினும், தங்கள் மகளின் கட்டுக்கடங்காத கொலை வெறியை போக்குவதற்காக, குடும்பமே சேர்ந்து ஹிட்டோஷியை கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள் போலீசார்.

ரூனா தாமுராவுக்கு இப்படி ஒரு பயங்கரமான பிரச்சனையில் சிக்கி உள்ளதால், இதுவரை அவர் எத்தனை பேரை கொன்றிருக்கிறார் என்றே தெரியவில்லை.. மகளின் கொலை வெறியை போக்குவதற்காக, அவரது அம்மாவும், அப்பாவும் எத்தனை பேரின் உயிரை காவு வாங்கியிருக்கிறார்களோ அதுவும் தெரியவில்லை.. இப்போது குடும்பமே ஜெயிலில் உள்ளது.

நிர்வாண உடல்: நிர்வாண உடலை மட்டும் போலீசார் கண்டுபிடித்த நிலையில், ஹிட்டாஷியின் தலையை காணாமல் தேடினார்கள்.. ஒருவேளை, கொலை செய்துவிட்டு, கையோடு தலையை அவர்கள் வேறு இடத்திற்கு அவர்கள் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் சந்தேகித்தனர்.. ஆனால், அந்த ரூமை லாட்ஜ் ஊழியர் ஒருவர் சுத்தப்படுத்துவதற்காக போயிருக்கிறார்.. அப்போதுதான், அங்கிருந்த ஒரு டேபிளில் "தலை" கிடந்துள்ளது..

ஆனால் ரூமில் தகராறுகள், கலவரம், சண்டைகள் நடைபெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், இறந்த நபர் தன்னைத் தற்காத்து கொண்டதற்கான அடையாளங்களும் காணப்படவில்லை என்றும் விசாரணை அறிக்கை கூறுகிறது.

விசாரணை: ரூனா தாமுராவுக்கு, ஹிட்டாஷி எப்படி பழக்கமானார்? இவர்களுக்குள் என்ன உறவு? என்று தெரியவில்லை.. அதையெல்லாம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? என்று ஜப்பான் அதிர்ந்து கிடக்கிறது.. அதைவிட, தன் மகளின் கொலை வெறியை அடக்குவதற்காக, குடும்பமே சேர்ந்து, கொலையை செய்துள்ளது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+