எவண்டா ரோட்டுல இப்படி கோடு போட்டது...??
ஸ்டிர்லிங், ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தில் ஒரு சாலையைப் பார்த்தால் செம 'லந்தாக' இருக்கிறது...அதாவது சாலைக்கு நடுவே போடப்படும் வெள்ளைக் கோட்டை தாறுமாறாக போட்டு வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் குழம்பி குண்டக்க மண்டக்கப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் நகருக்கு அருகே உள்ள ஆர்ன்பிரியர் என்ற கிராமத்தில் செல்லும் சாலையில்தான் இந்த கோடு.
சாலைப் போக்குவரத்து விதிகளை முறையாக அனைவரும் கடைப்பிடிக்க வசதியாகத்தான் பல நடவடிக்கைகளை ஸ்டிர்லிங் நகராட்சி செய்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக போடப்பட்ட கோட்டால் அனைவரும் குழம்பிப் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அப்டி .. இப்டி...
இந்த சாலைக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் ஒரு நிமிடம் டென்ஷனாகிப் போய் விடுகிறார்கள். கோட்டுக்குள்ளேயே போக வேண்டும் என்றால் குண்டக்க மண்டக்கத்தான் வண்டியை ஓட்டியாக வேண்டும். அப்படி வளைந்து வளைந்து போகிறது இந்த வெள்ளைக் கோடு.

மார்க்கர் சரியில்லையேப்பா...
சாலை நடுவே போடப்பட்ட இந்த மார்க்கிங் கோட்டை வித்தியாசமாக தீட்டியுள்ளன் பெயிண்ட் அடித்த புண்ணியவான்கள்.

அட, மஞ்சக் கோடும் அப்படித்தான்...!
அதேபோல சாலையின் இரு மருங்கிலும் போடப்படும் மஞ்சள் கோட்டையும் கூட இப்படித்தான் விளையாட்டுத்தானமாக வரைந்து விட்டுப் போயுள்ளனர்.

பயபுள்ள தண்ணியடிச்சிருக்கும் போல...
வாகன ஓட்டிகள் இந்தக் கோட்டைப் பார்க்கும்போது, குடித்து விட்டு போதையில் போடப்பட்ட கோடு போல என்று கமெண்ட் அடிக்கிறார்களாம் அந்த ஊரில்.

வெட்டி வேலை
அந்த ஊர் எதிர்க்கட்சியினருக்கு வாயில் அவலை அள்ளித் திணித்து மெல்லுங்கப்பா நல்லா என்று எடுத்துக் கொடுத்தது போலாகி விட்டது. நகராட்சி நிர்வாகத்தை சரமாரியாக விமர்சித்துத் தள்ளுகிறார்கள். இதெல்லாம் வெட்டி வேலை என்று அவர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

கோடு சரிதான் பாஸ்...
ஆனால் நகராட்சி நிர்வாகமோ இந்தக் கோடு வேண்டும் என்றேதான் போடப்பட்டது. காரணம், வாகன ஓட்டிகள் படு வேகமாக செல்வதை இது தடுக்கும். மேலும் சாலையில் வாகனத்தை திறமையாக ஓட்டிச் செல்லவும் வாகன ஓட்டிகளுக்கு இது வாய்ப்பாக அமையும். ஆனால் இது பார்க்க முட்டாள்தனமாக இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன என்று கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications