டோஸ்டட் பிரட்டுல சான்ட்விச் செய்யலாம்!.. பிரட் ஆம்லெட்டும் ஓகே.. ஆனால் இதென்ன புதுஸா இருக்கு!
டோக்கியோ: ஒரு பிரட் துண்டில் தத்ரூபமாக பல ஓவியங்களை வரைந்துள்ளார் ஜப்பான் நாட்டு கலைஞர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் டிரென்டாகி வருகிறது.
உணவு வகைகளை ருசியாக சமைப்பதை விட அதை பரிமாறுவதும் அதை காட்சிக்கு வைப்பதும் மிகவும் முக்கியமானது என்பார்கள். பல டிவி ஷோக்களில் சமையல் போட்டிகளின் போது டேஸ்டை விட பிரசன்டேஷன் மிகவும் முக்கியம் என்பதால் அதை கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
உணவு சமைப்பது தனி கலை என்றால் அதில் கைவண்ணத்தை காண்பிப்பது அதை விட பெரியது. இது பார்த்தவுடனேயே சாப்பிட தூண்டிவிடும். இதைத்தான் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் பின்பற்றுகிறார்கள்.

ஜப்பான்
இந்த நிலையில் ஜப்பானை சேர்ந்த மனாமி சசாகி என்பவர் டோஸ்ட் செய்யப்பட்ட பிரெட் ஸ்லைஸ்களில் அற்புதமான கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகளின் போட்டோக்கள் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்ஸ்டாவில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ப்ரீடா முதல் கார்ட்டூன் வரை
அந்த பிரட்டில் ஃப்ரிடா கஹ்லோ முதல் அழகிய நிலப்பரப்புகள் வரை, கார்ட்டூன்கள் முதல் ஜப்பானிய பெண்கள் வரை அனைத்தையும் பிரெட்டில் பெயிண்ட் செய்து பிரபலமடைந்து உள்ளார் இவர். அவர் தனது டோஸ்ட்களை டாப் அப் செய்ய மென்மையாக வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்தியுள்ளார்.

வைரல்
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். கொரோனா லாக்டவுன் நேரத்தில் ஜப்பானில் நிறைய கலைஞர்கள் இப்படி வித்தியாசமான படைப்புகளை படைத்துள்ளார்கள். அவை வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஓவியர் பேட்டி
இதுகுறித்து அந்த ஓவியர் கூறுகையில் லாக்டவுனின் போது அதிகாலையில் எழுந்து என்னை உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக ஒரு வழக்கத்தை உருவாக்க விரும்பினேன். அப்போதுதான் காலை உணவுக்கான டோஸ்ட் ஆர்ட்டை நான் செய்யலாம் என முடிவு செய்து அதை செய்து முடித்தேன் என்கிறார் மனாமி.












Click it and Unblock the Notifications