நம்ம ஊருக்கும் இப்படி ஒரு ஜாலியான எம்.பி. எப்ப கிடைப்பாங்க மக்களே....!
டோரன்டோ: கனடா தமிழ் பெண் எம்.பி.யான ராதிகா சித்சபேசன் நாடாளுமன்றத்துக்கு கோட் சூட்டில் சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு போவதோடு மட்டும் நிற்பதில்லை. மாறாக மக்களுடன் மக்களாக கலந்து, மக்களோடு மக்களாக எப்போதுமே படு கேஷுவலாக இருப்பவர்.
அவ்வப்போது ஏதாவது செய்தபடி இருக்கும் ஒரு "தீயாய் வேலை செய்யும் குமாரி"யாக வலம் வருபவர். சமூக நிகழ்ச்சிகள், அனைத்து மத நிகழ்ச்சிகள், இனக் குழுக்கள் நடத்தும் நிகழ்சிகள் என எதையும் இவர் விடுவதில்லை. எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு முத்திரை பதித்து விடுகிறார்.
ஜாலியாக ஊர்வலம் போகிறார். கார் துடைக்கிறார். கார்னிவெல்லில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார். அட நம்ம ஊர் குத்துப்பாட்டுக்கும் கூட கலக்கலாக டான்ஸ் போடுகிறார்.

கனடா எம்.பி... கலக்கல் எம்.பி.
கனடாவில் வசித்து வரும் ராதிகா சித்சபேசன். இலங்கைத் தமிழச்சி. கனடாவில் எம்.பியாக இருக்கிறார். இவரது தொகுதியின் பெயர் ஸ்கேபோரோ ரோஜ்ரிவர் என்பதாகும்.

இயல்பும், சுறுசுறுப்பும்
இயல்பான செயல்பாடுகளும், சுறுசுறுப்புமே இவரது அடையாளம். தமிழர்கள் என்றில்லாமல் அனைத்து இனக் குழுவினருடனும் சகஜமாக இறங்கிப் பழகுவது இவரது அடையாளமாகும்.

சமூக நலன்
சமூக நலன், அதுதொடர்பான விழிப்புணர்வு ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் ராதிகா சித்சபேசன். இதுதொடர்பான பல நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து போய் வருபவர்.

நாடாளுமன்றத்திலும் கலக்கல்
அதேசமயம், ஒரு எம்.பியாக நாடாளுமன்றத்திலும் கலக்கக் கூடியவர் ராதிகா. தனது தொகுதி பிரச்சினை உள்பட அனைத்துப் பிரச்சினைகளையும் அழுத்தம் திருத்தமாக அழகாக பேசக் கூடியவர் ராதிகா.

மக்களோடு மக்களாக
நம்ம ஊரில் எம்.பி. என்றால் எப்படியாப்பட்ட பந்தாக்களையெல்லாம் நாம் பார்க்கிறோம். ஆனால் அதில் ஒரு துளியைக் கூட ராதிகாவிடம் பார்க்க முடியாது.

பக்கத்து வீட்டு பெண் மாதிரியே
பக்கத்து வீட்டுப் பெண் மாதிரியான தோற்றம் மட்டுமல்ல பழக்கத்திலும் கூட அப்படித்தான் இயல்பாக இருக்கிறார் ராதிகா.

உற்சாகம்.. உற்சாகம்.. உற்சாகம் மட்டுமே
எல்லாவற்றிலும் ஜாலியாக, உற்சாகமாக கலந்து கொள்வதில் இவருக்கு நிகர் இவரே. தான் மட்டுமல்லாமல் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியைும் கலகலப்பாக்கி விடுவதில் அவர் வல்லவர்.

டான்ஸ் - பாட்டு - விளையாட்டு
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கேற்ற முறையில் மாறி விடுவார் ராதிகா. டான்ஸ் புரோகிரோமா சேலையை வரிந்து கட்டிக் குண்டு குத்தாட்டம் போடத் தயங்க மாட்டார். கிரிக்கெட் போட்டியா இறங்கி பேட் பிடிக்க பயப்பட மாட்டார். பாடல் நிகழ்ச்சியா மைக்கைப் பிடித்து பாட்டுப் பாட அஞ்ச மாட்டார்.

எப்போதும் மக்களுடன்..
பெரும்பாலும் மக்களுடன் இருக்கவே இவர் விரும்புகிறார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் ஆளாக ஓடி விடுகிறார். இவரே பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்.
இப்படியும் ஒரு எம்.பியா என்று ஆச்சரியப்பட வைக்கும் ராதிகாவைப் பார்த்தால்.. இப்படி ஒரே ஒரு எம்.பியாவது நமக்குக் கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கமாகத்தான் இருக்கிறது!












Click it and Unblock the Notifications