"லிப் லாக்.. " வரான், கிஸ் பண்றான், போறான்! ரிப்பீட்டு! சீனாவில் திடீரென டிரெண்டாகும் மவுத் பட்டீஸ்
பெய்ஜிங்: சீனாவை இப்போது கொரோனா வைரஸ் அலறியடித்துக் கொண்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கொரோனாவுக்கு நடுவிலும் அங்கு கிஸ் பட்டீஸ் என்ற ஒன்று புதிதாக டிரெண்டாகி வருகிறது.
சீனாவில் இப்போது கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அங்கு ஜீரோ கோவிட் பாலிசி கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், அது ஒரே அடியாக நீக்கிக் கொள்ளப்பட்டதால், கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்தது.
இது ஒரு பக்கம் இருக்க கொரோனாவை தாண்டியும் இப்போது அங்கு ஒன்று டிரெண்டாகி வருகிறது. மவுத் பட்டீஸ் எனப்புடம் இந்த புதிய டிரெண்டில் அங்குள்ள இளைஞர்கள் பலரும் ஐக்கியமாகி வருகின்றனர்.

சீனா
சீனாவில் இப்போது வினோதமான புதிய டேட்டிங் கலாச்சாரம் ஒன்று டிரெண்டாகி வருகிறது. அங்கு கொரோனா பரவல் இப்போது உச்சமடைந்துள்ள நிலையில், அதற்கு நடுவே இந்து புதிய டேட்டிங் கலாச்சாரமும் டிரெண்டாகி வருகிறது. இதில் முன்பின் தெரியாத ஆண்களும் பெண்களும் ஆன்லைனில் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். பிறகு ஒரு பொது இடத்தில் சந்தித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். பொது இடத்தில் நேரில் சந்தித்துக் கொள்ளும் அவர்கள் முத்தங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

மவுத் பட்டீஸ்
இதை மாண்டரின் மொழியில் 'zui you' என்று அழைக்கிறார்கள். அதாவது ஆங்கிலத்தில் இதற்கு 'மவுத் பட்டீஸ்' என்று அர்த்தம். அங்கு இப்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், ஒரு பக்கம் இந்த டிரெண்டும் வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் இப்படி யாரென்றே தெரியாத நபர்களுக்கு முத்தம் கொடுக்க ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், அங்குள்ள வயதானவர்கள் பலரும் இது தவறான போக்கு என்று இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

மவுத் பட்டீஸ் என்றால் என்ன
'மவுத் பட்டீஸ்' என்று அழைக்கப்படும் இவர்கள் முத்தம் தர மட்டுமே ஆகும். இதற்குப் பிறகு அவர்களுக்கு இடையே உடலுறவு எதுவும் நடக்காது. மேலும், காதல் போன்ற உறவிலும் இவர்கள் இருக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே அங்குள்ள பெண்கள் இந்த 'மவுத் பட்டீஸுக்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்துள்ளனர். யாரென்றே தெரியாத நபர் என்பதால் அதற்குப் பிறகு மீட் செய்தாலும் சங்கடம் எதுவும் இருக்காது என்பதாலே 'மவுத் பட்டீஸ்' இப்போது அங்கு டிரெண்டாகி வருகிறது.

செம வரவேற்பு
இது குறித்து பல்கலைக்கழக மாணவர் குவான் லி கூறுகையில், "இப்படி பலரும் மீட் செய்து முத்தம் கொடுத்து வருகிறார்கள்.. ஒருவரையொருவர் முத்தமிட்ட சிலரை எனக்குத் தெரியும்.. ஆனால் அவர்கள் காதலர்களாக மாறவில்லை. எனவே முத்தமிடுவது பெரிய விஷயம் இல்லை.. என்னைப் பொருத்தவரை நிகழ்காலத்தை அனுபவிப்பது தான் முக்கியம். மவுத் பட்டீஸை முத்தமிடும் போது எனக்கு நான் எனது காதலரையே முத்தமிடும் ஒரு உணர்வு ஏற்படுகிறது" என்றார்.

பெண்கள்
அதேபோல அங்கிருந்த ஆராய்ச்சி மாணவி தனக்குக் காதலிக்க நேரமில்லை என்பதால் இந்த 'மவுத் பட்டிஸ்" முறையை டிரை செய்து பார்த்தாக தெரிவித்தார். அதேபோல பாலியல் உறவைக் காட்டிலும் முத்தமிடும்போது, உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நமக்கு ஆறுதல் தரும் உணர்வு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அங்குள்ள மாணவர்கள் பாலியல் உறவைக் காட்டிலும் இப்படி அடையாளம் தெரியாதவர்களை முத்தமிட விரும்புகின்றனர்.

எச்சரிக்கை
அதேநேரம் இதிலும் ஆபத்து இருப்பதாக அங்குள்ள சிலர் எச்சரிக்கின்றனர். அதாவது அடையாளம் தெரியாத நபர்களை முத்தமிட்டால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர். இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "முத்தம் கொடுப்பதில் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முத்தம் மூலம் பாக்டீரியா உட்பட மில்லியன் கணக்கான கிருமிகளைப் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, குறைந்தது முத்தத்திற்கு முன்பு உங்கள் மவுத் பட்டீஸை வாயைச் சுத்தம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications