"போர் நிறுத்தம் செய்ய ரெடி!" ஆனால் ஏகப்பட்ட கண்டிஷன்களை லிஸ்ட் போட்ட புதின்! கண்கள் சிவந்த உக்ரைன்
இஸ்தான்புல்: உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர 2 ஆப்ஷன்களை வழங்கியிருக்கிறது. ஆனால், அந்த இரண்டையுமே ஏற்கும் மனநிலையில் உக்ரைன் இல்லை. உக்ரைனுக்கு ரஷ்யா விதித்த நிபந்தனைகள் என்ன! இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
ரஷ்யா உக்ரைன் இடையே பல ஆண்டுகளாகப் போர் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகத் துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாகத் தீவிர ஆலோசனை நடந்தது.ஆனால், ரஷ்யா பேச்சுவார்த்தையில் பிடிகொடுக்கவில்லை.

ரஷ்யா
தனது நாடு நீண்டகால தீர்வுகளை எட்டவே முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்காலிகமாகப் போர் நிறுத்தம் என்பது தனது திட்டம் இல்லை என ரஷ்யா கூறியிருக்கிறது. இருப்பினும் புதின் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்றே உக்ரைன் சாடியுள்ளது. மேலும், இம்மாத இறுதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள உக்ரைன், ஜெலென்ஸ்கி மற்றும் புதின் நேரடியாகச் சந்தித்தால் மட்டுமே பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறது.
கண்டிஷன் 1
இதற்கிடையே இந்த மீட்டிங்கில் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா போட்டுள்ள கண்டிஷன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ல் கிரீமியா என்ற பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்தது. அது ரஷ்யாவின் பகுதிதான் என்பதற்குச் சர்வதேச அங்கீகாரம் வேண்டும் என ரஷ்யா வலியுறுத்துகிறது. இது மட்டுமின்றி உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய நான்கு பிராந்தியங்களை ரஷ்யா உரிமை கோரும் நிலையில், அதுவும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் உக்ரைன் தனது படைகள் அனைத்தையும் அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்யப் பிரதிநிதிகள் மேலும் கூறுகையில், "உக்ரைன் ஒரு நடுநிலை நாடாக இருக்க வேண்டும். நேட்டோவில் இணையக்கூடாது.. மேலும், உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி பேசுபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக ரஷ்ய மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக உக்ரைன் அறிவிக்க வேண்டும்.. நாஜிசத்தை புகழ்வதை எல்லாம் சட்டப்பூர்வ தடை விதிக்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மறுப்பு
இதில் நாஜி குற்றச்சாட்டை அபத்தமானது என்று உக்ரைன் நிராகரிக்கிறது. தங்கள் நாட்டில் நாஜி ஆதரவாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனக் கூறியிருக்கிறது. மேலும், ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு எந்தவொரு பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்றும் மறுத்துள்ளது.
கண்டிஷன் 2
உக்ரைன் இதைச் செய்ய விரும்பவில்லை என்றால் ஆப்ஷன் 2 என இன்னொரு ஆப்ஷனையும் செய்யலாம் என ரஷ்யா வேறு சில கண்டிஷன்களையும் போட்டிருந்தது. உக்ரைன் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவிட்டு, வெளிநாட்டு ராணுவ உதவி, தகவல் தொடர்பு மற்றும் உளவுத்துறை உதவிகளைப் பெறுவதை நிறுத்த வேண்டும். உக்ரைனில் இப்போது ராணுவ சட்டம் அமலில் இருக்கும் நிலையில், அதை உடனடியாக நீக்கிவிட்டு அடுத்த 100 நாட்களில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும். இவை எல்லாம் 2வது ஆப்ஷனாக இருக்கிறது.
உடன்பாடு இல்லை
ஆனால் இரண்டிற்குமே உக்ரைன் பெரியளவில் உடன்படவில்லை என்றே தெரிகிறது. எந்தவொரு சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகும் தனது ராணுவ பலத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகள் மீதான இறையாண்மையைச் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கக் கூடாது என்பதிலும் உக்ரைன் உறுதியாக இருக்கிறது. இப்படி இரு நாடுகளும் நேர் எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் மோதல் முடியுமா என்பதிலேயே கேள்வி எழுந்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications