’தமிழக எழுச்சிக் கழகம்’ கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த தனுஷ்? ரஜினி ஆதரவுடன் களமிறங்குகிறாரா?
சென்னை: விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றதையடுத்து மற்ற நடிகர்களும் அரசியலுக்கு வர தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தி பதிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் சமீபத்தில் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது. ஏனெனில் தனுஷின் செயல்பாடுகள் அனைத்தும் அவர் அரசியலில் களமிறங்குவதற்கான திட்டத்துடன் காய்களை நகர்த்துவதாக பலராலும் பேசப்பட்டது.

தனுஷின் பேச்சும் அதையொட்டியே இருந்தது. இந்த சூழலில்தான், தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தி பதிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இது பற்றி தனுஷ் தரப்பிடம் கேட்ட போது இதை மறுத்தனர்.
பொறுமை காக்க வேண்டும்
அவர்கள் கூறுகையில், 'தனுஷ் கட்சி தொடங்குவது உறுதிதான். ஆனாலும் கட்சியின் பெயரை இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்" என்று கூறினர். ஏற்கனவே ரஜினி அரசியல் கட்சியை ஆரம்பிக்க திட்டமிட்ட நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டார். இதனால், ரஜினியின் ஆதரவுடன் தனுஷ் அரசியலில் குதிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக 2031-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் களமிறங்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருந்தவர் விஜய். திரையுலக வாழ்க்கைக்கு முழுக்கு போட்ட விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினர். கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் ஆட்சியை பிடித்தார்.
சிவகார்த்திகேயன், சூர்யா
விஜய்யின் இந்த வெற்றியால் மற்ற நடிகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர் விட ஆரம்பித்துள்ளது. அதன்படிதான் தனுஷ் புதிய இயக்கம் ஆரம்பிக்க தயாராவதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் சிவகார்த்திகேயனும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அதேபோல, சூர்யாவும் ரசிகர் மன்றத்தினரை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர்களின் இந்த அடுத்தடுத்த நகர்வுகளால் தமிழக அரசியல் களத்தில் இன்னும் பல புதிய கட்சிகளை பார்க்கலாம் என்று பலராலும் சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கி பிரமாண்ட வெற்றி பெற்றார். அவர் ஆட்சியை பிடித்த பிறகு, நடிகர்கள் சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி. ராஜேந்தர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியல் கட்சியை தொடங்கினர். ஆனால், அவர்களால் எம்ஜிஆரை போல் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications
