அம்மாடி.. பிரம்மாண்டமாக அமையும் ஐக்கிய அமீரகத்தின் முதல் இந்து கோயில்.. அடடே இத்தனை சிறப்புகளா

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: ஐக்கிய அமீரகத்தில் முதல் இந்து கோயில் விரைவில் திறக்கப்பட உள்ளது. அந்த கோயிலின் சிறப்புகள் குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய நாடு ஐக்கிய அமீரகம்.. அந்நாட்டு மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருந்த போதிலும், அங்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்குச் சென்று பணிபுரிந்து வருகிறார்கள்.

 What are the Specialties of first Hindu Temple in UAE that will be inaugurated by PM Modi

இதனால் ஐக்கிய அமீரகத்தில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் மக்கள் தொகை இருக்கவே செய்கிறது. இதற்கிடையே துபாய்-அபுதாபியை இணைக்கும் ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது.

முதல் இந்து கோயில்: இந்த கோயிலைப் பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்கிறார். ஐக்கிய அமீரகத்தில் திறக்கப்பட்ட முதல் இந்து கோயிலான இதில் உள்ள சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம். இந்த கோயிலில் பளிங்குக் கற்களால் ஆனது.. சிக்கலான தூண்களைக் கொண்ட இந்த கோயில் கடந்த நான்கு ஆண்டுகளா கட்டப்பட்டு வந்தது. இதில் ராமர் மற்றும் விநாயகர் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன. ராஜஸ்தானில் உள்ள கைவினைஞர்களின் படைப்புகள் இங்கே இடம் பெற்றுள்ளன.

ராஜஸ்தானின் மக்ரானாவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கோயிலுக்கான சிற்பங்களைச் செதுக்கி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், "எங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாகச் சிற்பங்களைச் செதுக்கி வருகிறது. நான் இங்கே செதுக்கிய சிலை அபுதாபியில் உள்ள இந்து கோயிலில் வைக்கப்பட்டுள்ளது உண்மையிலேயே சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அந்த கோவிலுக்கு 83 சிற்பங்களில் நான் வேலை செய்துள்ளேன்" என்றார்.

சிற்பங்கள்: அபுதாபியில் உள்ள கோயிலின் முகப்பில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த திறமையான கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த கோயிலுக்காகக் கணிசமான எண்ணிக்கையிலான பிங்க் மணற்கற்கள் வடக்கு ராஜஸ்தானில் இருந்து அபுதாபிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

எதற்காகக் குறிப்பாக ராஜஸ்தான் மணற்கற்கள் அங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஏனென்றால் இந்த கற்களால் தான் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்க முடியும். ஐக்கிய அமீரக வானிலைக்கு இதுவே ஏற்றதாக இருக்கும். அதேபோல அந்த கோயிலில் இத்தாலிய பளிங்குக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்: மேலும், இதில் இரண்டு டோம்கள் ஏழு ஐக்கிய அமீரக மாகாணங்களைக் காட்டும் வகையில் ஏழு கோபுரங்கள், 12 குவி மாடங்கள் மற்றும் 402 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் ராமாயணம், சிவபுராணம், பகவத்கீதை மற்றும் மகாபாரதத்தின் கதைகளின் காட்சிகள் அப்படியே தத்ரூபமாகச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றைக் காட்டும் ஒரு சிறப்பு குவி மாடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னமான ஒட்டகமும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கோயிலின் உட்புறம் கட்ட 40,000 கன அடி பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோயில் கட்டுமானத்திற்காக 700+ கண்டெய்னர்களில் கற்கள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுவே கோயில் கட்டுமானத்திலும் பயன்படுத்தப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி பிப். இரண்டாவது வாரம் அபுதாபி செல்லும் நிலையில், பிப். 14ஆம் தேதி இந்த கோயிலைத் திறந்து வைக்கிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+