சீனாவில் தீவிரமாக பரவி வரும் HMPV வைரஸ்.. இந்த அறிகுறிகளை நோட் பண்ணுங்க.. ரொம்ப முக்கியம்!
பெய்ஜிங்: சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் கொரோனா போன்ற வைரஸ் வந்துவிட்டது.. நிலைமை மோசமாக போகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் போஸ்டுகள் வர தொடங்கி உள்ளன. HMPV வைரஸ் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள் தீவிரமாக பரவி வருகின்றன. ஆனால் உண்மையில் இந்த வைஸ் எவ்வளவு ஆபத்தானது.. என்று இங்கே பார்க்கலாம்.
HMPV வைரஸ் என்பது human metapneumovirus என்பதை சுருக்கம் ஆகும்.. அதாவது மனித மெட்டாப்நிமோவைரஸ். இதுவும் கொரோனா போலவே.. மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். அதாவது இதுவும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவுகிறது.

முக்கியமாக இளம் வயது.. அதாவது 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக HMPV வைரஸ் தாக்குகிறது. சீன அதிகாரிகளும், உலக சுகாதார மையமும் பயப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை.. இதை பார்த்து கொரோனா போல அச்சப்பட வேண்டாம். இது சாதாரண மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் HMPV என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
HMPV வைரஸ் அங்கே ஏற்கனவே பரவி வரும் influenza A, Mycoplasma pneumoniae மற்றும் லேசான Covid-19 வைரசுக்கு இடையே இந்த HMPV வைரஸ் பரவி வருகிறது. எங்கள் நாட்டிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானது.. இதனால் பாதிப்பு இல்லை என்று சீனா கூறி வருகிறது. ஆனால் கொரோனாவிற்கும் இப்படிப்பதான் சீனா கூறியது.
HMPV வைரஸ் என்றால் என்ன?:
HMPV 2001 இல் கண்டுபிடிக்கப்பட்டது. HMPV ஆனது நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த குடும்பத்து வைரசுகள் பொதுவாக சுவாசம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். பொதுவான சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டு இருக்கும். மூச்சு விடுவதில் அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.
இது அனைத்து வயதினரையும் பாதிக்கும். சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே இணை நோய் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று CDC தெரிவித்துள்ளது.
HMPV இன் அறிகுறிகள்:
HMPV அறிகுறிகள் பின்வருமாறு: இருமல், மூக்கில் சளி வருதல், மூக்கில் அடைப்பு, காய்ச்சல், தொண்டை புண், மூச்சுத்திணறல் அல்லது கடுமையான சந்தர்ப்பங்களில் ஆக்சிஜன் பிரச்சனை. சில சந்தர்ப்பங்களில், மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா அல்லது ஆஸ்துமா ஏற்படும்.
யாருக்கு ஆபத்து அதிகம்?:
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், குறிப்பாக கைக்குழந்தைகள், முதியவர்கள், குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாச நிலைமைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
HMPV காரணமாக இப்போது தொற்று அதிகம் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். என்றாலும் கூட இது ஒரு புதிய வைரஸ் அல்லது உடனடி தொற்று அச்சுறுத்தல் அல்ல. பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான். இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications