ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. மக்களுக்கு பணமழை தான்! இந்த நாடுகளில் பிறந்தாலே ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு வருமான வரி தான் பெரிய சுமையாக இருக்கிறது. இப்போது அதில் சற்று உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டாலும் கூட ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை வருமான வரிக்குச் செலுத்த வேண்டியே இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் மக்கள் ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தத் தேவையில்லையாம். அது எந்த நாடுகள்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தக் காலத்தில் மிடில் கிளாஸ் மக்களுக்கு வருமான வரி தான் பலருக்குச் சுமையாக இருக்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் வந்தால் அதில் கணிசமான தொகையை நாம் வரியாகவே செலுத்த வேண்டி இருக்கும். இதுவே மிடில் கிளாஸுக்கு ஒரு சுமை தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது, வருமான வரி என்பது முக்கியமானதாக இருக்கிறது.

What are the Top Tax-Free Countries in 2025 Keep 100 of Your Income

இந்தியாவில் வருமான வரி

இந்தியாவில் வருமான வரி விகிதம் அதிகபட்சமாக 39% வரை இருக்கிறது. அதாவது அதிகபட்ச வரி மற்றும் சர்சார்ஜ் எல்லாம் சேர்த்தால் அதிக வருமானம் ஈட்டுவோர் 39% வரை வரி செலுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், எல்லா நாடுகளிலும் இதுபோல இருப்பதில்லை. சில நாடுகளில் தனிநபர்கள் தங்கள் வருமானம் முழுவதையும் வைத்துக்கொள்ளலாம். இந்த வரி இல்லாத நாடுகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகளைத் தான் வரி இல்லாத நாடுகளின் சொர்க்கம் என்றே சொல்கிறார்கள். பூஜ்ஜிய வருமான வரியைக் கொண்ட நாடுகளில் வளைகுடா நாடுகள் தான் பிரதானமாக இருக்கிறது. ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் குவைத் போன்ற நாடுகள் வருமான வரி இல்லை. அதாவது இந்த நாடுகளில் தனிநபர் தங்கள் பெறும் ஊதியத்தை அப்படியே வைத்துக் கொள்ளலாம். அதன் மீது அரசு எந்தவொரு வரியையும் விதிப்பதில்லை.

எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள், வளர்ந்து வரும் சுற்றுலாத் துறை மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) போன்ற மறைமுக வரிகள் மூலம் கணிசமான வருவாய் ஈட்டுவதால் அந்த நாடுகளின் அரசுகள் தனியாக வருமான வரி விதிப்பதில்லை. அந்த நாடுகளின் மக்கள் இதன் மூலம் உண்மையான வரி இல்லாத வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இதன் மூலம் செலவழிக்கக் கூடுதல் வருமானம் அவர்கள் கைகளில் இருக்கிறது.

ஐக்கிய அமீரகம்

இந்த வளைகுடா நாடுகளிலும் ஐக்கிய அமீரகம் ஒரு சிறந்த உதாரணமாகத் தனித்து நிற்கிறது. எண்ணெய் மற்றும் செழிப்பான சுற்றுலாத் துறையால் ஐக்கிய அமீரகத்திற்கு அதிகபட்ச வருவாய் கிடைக்கிறது. இதனால் அவர்கள் மக்களிடம் தனியாக வருமான வரி எதுவும் விதிப்பதில்லை. இது ஐக்கிய அமீரகத்தை ஒரு சர்வதேச மையமாக மாற்றியுள்ளது. வருமான வரி மட்டுமின்றி, வேறு பல சலுகைகளும் இருப்பதால் உலகம் முழுவதிலுமிருந்து பலரும் ஐக்கிய அமீரகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதர நாடுகள்

அதேநேரம் வளைகுடா நாடுகளில் மட்டும் இந்தப் பூஜ்ஜிய வரி இருக்கிறது எனச் சொல்ல முடியாது. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில சிறிய மற்றும் வலிமையான நாடுகளிலும் இந்தப் பூஜ்ஜிய வருமான வரி முறை இருக்கிறது. இங்குள்ள புரூணை, மொனாக்கோ, நௌரு மற்றும் பஹாமாஸ் போன்ற சிறிய வளமான நாடுகளும் இந்த வாய்ப்பை வழங்குகின்றன.

காரணங்கள் என்ன!

புரூணையின் வலுவான எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருக்கிறது. நௌரு மற்றும் பஹாமாஸின் செழிப்பான சுற்றுலாத் துறைகள் அரசுக்குப் போதுமான வருவாயைத் தருகிறது. இதனால் இந்த நாடுகள் தனிநபர் வருமான வரியைத் தனியாக வசூலிப்பதில்லை.

இந்த நாடுகளின் நிதி வலிமைக்கு முக்கிய காரணம் அந்நாடுகளில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான இயற்கை வளங்களும் சக்திவாய்ந்த சுற்றுலாத் துறைகளும் தான். அதேநேரம் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இங்கு வருமான வரி தான் இல்லையே தவிர, அரசு செலவுகளை ஈடுகட்ட மதிப்புக் கூட்டப்பட்ட வரி மற்றும் பிற வரிகளை விதிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+