காலிஸ்தானி ஹர்தீப் சிங்கிற்கு கனடா நாடாளுமன்றத்தில் கவுரவம்! அடுத்து நடந்த பெரிய சம்பவம்.. பரபரப்பு
டொரண்டோ: கடந்தாண்டு கனடாவில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜருக்கு கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படுகிறார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தீப் சிங் உயிருடன் இருந்த வரை கனடா அரசே அவர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில், அவர் உயிரிழந்த பிறகு மட்டும் திடீரென நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றியது ஏன் என்று செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் கடந்த ஓராண்டாகவே பிரச்சினை இருந்து வருகிறது. கனடாவில் இருந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடா மண்ணில் வைத்து கடந்தாண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.

அவரது மரணத்திற்கு இந்தியாவே காரணம் என்று கனடா அரசு ஆதாரமே இல்லாமல் குற்றஞ்சாட்டியது. இதுவே இரு தரப்பிற்கும் இடையேயான பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும். இது பல மாதங்களாகத் தொடரும் நிலையில், மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் கனடாவில் இப்போது நடந்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜர்: அதாவது கனடாவில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜருக்கு கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படுகிறார். ஹர்தீப் சிங் நிஜ்ஜர் உயிரிழக்கும் முன்பே கனடா அரசு அவரது வங்கிக் கணக்குகளை முடக்கி இருந்தது. அவர் விமானங்களில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், அப்படிப்பட்ட ஒருவர் இப்போது கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படுவது ஏன் என்று செய்தியாளர்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
சரமாரி கேள்வி: இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஹர்தீப் சிங்கிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மட்டும் அவர் கவுரவிக்கப்படுவது ஏன் எனச் செய்தியாளர்கள் சரமாரியாக அவரிடம் கேள்வி எழுப்பினர். அரசு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்ற மாற்றத்திற்கான காரணம் என்ன என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குக் கனடா துணைப் பிரதமர் ஃப்ரீலாண்ட் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாகக் கனடா மண்ணில் கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை ஏற்க முடியாது என்றும் அதைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலைக்குப் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சரியான நிலைப்பாட்டையே எடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.. இது சவாலானது என்ற போதிலும் இதுவே அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
ஓராண்டு: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கொலை நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது.. கனடா நாட்டில் வைத்து கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதைக் கண்டிக்கும் வகையிலேயே மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கொலைக்குப் பிறகு பிரதமர் ட்ரூடோ மிகவும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். இது சரியான விஷயம்.. ஆனால் அதைச் செய்வது எளிதான காரியம் இல்லை.
கனடா அரசு சட்டங்களைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கும்.. கனடா மக்களை யார் அச்சுறுத்தினாலும், அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும், அவர்களைப் பாதுகாக்கும். அதைச் செய்வது பிரதமருக்குச் சரியான விஷயமாக இருக்கிறது.. அவர் கனடா மக்கள் பக்கம் நின்றுள்ளனர். கனடா நாட்டவரைக் கொன்றவருக்கு எதிராக நிற்கிறார். அவரது செயல்பாடுகள் கனடா மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுத்துள்ளது" என்றார்.
மறுப்பு: அதேநேரம் நிஜ்ஜார் உயிருடன் இருந்தபோது இதே அரசு அவருக்கு ஏன் கட்டுப்பாடுகளை விதித்தது.. அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்.. அவர் விமானத்தில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன்.. அதேநேரம் அவரது மரணத்திற்குப் பிறகு கனடா அரசு ஏன் நிஜ்ஜருக்கு ஆதரவு தருகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.












Click it and Unblock the Notifications