அமெரிக்கா ஓவர்.. அடுத்து கனடா அரசியலில் குதிக்கும் எலான் மஸ்க்? ட்ரூடோ படுதோல்வி உறுதியாம்!
ஒட்டாவா: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்காக பிரச்சாரம் செய்தவர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றுள்ள நிலையில், எலான் மஸ்க் இப்போது திடீரென கனடா அரசில் குறித்தும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறித்தும் சில முக்கிய கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தித் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் தேர்வாகி இருக்கிறார்.

போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப் எளிதாகக் கமலா ஹாரிஸை வீழ்த்தினார். அதற்கு டிரம்ப் முன்வைத்த பிரச்சாரமே காரணமாகும்.
எலான் மஸ்க்: மேலும், இந்தத் தேர்தலில் டிரம்ப் பிரச்சாரத்திற்கு எலான் மஸ்க் கூட பெரியளவில் உதவினார். குறிப்பாகக் களத்தில் இறங்கியும் பிரச்சாரம் செய்தார். இதனால் எலான் மஸ்க் பாலோயர்ஸ் பலரும் டிரம்ப் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். டிரம்ப் வெற்றிக்கு எலான் மஸ்கும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதற்கிடையே எலான் மஸ்க் இப்போது அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் அரசியல் குறித்து சில ஷாக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வீழ்த்தித் தொடங்கிவிட்டதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். அடுத்து நடக்கும் கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி: இது அனைத்தும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த செய்தியாளர் ஒருவரின் ட்வீட்டில் இருந்து தொடங்கியது. அந்த செய்தியாளர், "ஜெர்மனில் உள்ள சோசலிச அரசு சரியத் தொடங்கிவிட்டது.. விரைவில் இங்குத் தேர்தல் நடைபெறப் போகிறது" என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு எலான் மஸ்க், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் முட்டாள் என்றும் அங்குள்ள கூட்டணி அரசு வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிட்டார்.
கனடா அரசியல்: அதற்கு ரிப்ளை செய்த ஒருவர், "கனடாவில் ட்ரூடோவை அகற்ற உங்கள் உதவி தேவை எலான் மஸ்க்" என்று பதிவிட்டிருந்தார். அதற்குச் சற்றும் யோசிக்காத எலான் மஸ்க், "அவர் வரும் தேர்தலில் காணாமல் போய்விடுவார்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதேநேரம் ட்ரூடோவுக்கு எதிராக எலான் மஸ்க் கருத்துச் சொல்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் அவர் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்கிற்கு மொத்தம் 3 நாடுகளில் குடியுரிமை இருக்கிறது. பிறந்த நாடு என்ற அடிப்படையில் தென் ஆப்ரிக்கா, அவரது தாய் கனடா நாட்டை சேர்ந்தவர் என்பதன் மூலம் கனடா நாட்டின் குடியுரிமையையும் பெற்றார். அதேபோல 2002ம் ஆண்டு அவர் அமெரிக்கக் குடியுரிமையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல்முறை இல்லை: கடந்தாண்டு கனடா அரசு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் எல்லாம் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்ற விதியை கொண்டு வந்தார். அப்போது கனடாவில் பேச்சு சுதந்திரத்தை ட்ரூடோ அரசு நசுக்குவதாக எலான் மஸ்க் விமர்சித்து இருந்தார்.
அதற்கு முன்பு 2022ம் ஆண்டு ஹிட்லர் உடனும் ட்ரூடோவை அவர் ஒப்பிட்டு இருந்தார். அதாவது 2022ல் கனடா நாட்டில் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மிகப் பெரிதாக வெடித்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த ட்ரூடோ எமர்ஜென்சியை கொண்டு வந்தார். கனடா வரலாற்றில் எமர்ஜென்சி கொண்டு வரப்படுவது அதுவே முதல்முறையாகும். அப்போது ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications