சீனாவில் களை கட்டியுள்ள ஆடு புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: ஆடு என்றாலே உற்சாகம்... மகிழ்ச்சி... அதுபோல சீனர்கள் தங்களின் ஆடு ஆண்டுப்பிறப்பை உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

சீனாவில் சந்திரனை அடிப்படையாக கொண்டு 12 ஆண்டுகளாக காலண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் குறிப்பிடப்படுகிறது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 19 முதல் ஆடு ஆண்டு பிறந்துள்ளது. எனவே இந்த புத்தாண்டு பிறப்பினை ‘கொங் சீ ப சாய்' என்று கூறி கொண்டாடி வருகின்றனர் சீனர்கள். 'கொங் சீ ப சாய்' என்றால் சீன புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று அர்த்தமாம். நம்முடைய தமிழ் புத்தாண்டை ஒரே ஒரு நாள் கொண்டாடத்துடன் முடித்துக் கொள்வோம்.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், கிறிஸ்துமஸை தொடர்ந்து அடுத்த நாள் முதல் புத்தாண்டு தினம் வரை உள்ள நாட்களை ‘நியூ இயர் ஈவ்' என்று ஒருவாரம் கொண்டாடுகின்றனர். சீனர்கள் தங்களின் புத்தாண்டு பிறப்பை 15 நாட்கள் கொண்டாடுகின்றனர்.

ஆடு ஆண்டு

ஆடு ஆண்டு

சீனர்கள் தங்களின் புத்தாண்டுக்கு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விலங்கை சிறப்பாக வைத்து ஆண்டிற்கும் அந்த விலங்கின் பெயரையே வைப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு 'ஆடு' தான் சிறப்பு விலங்கு.

கடைகளில் தங்க ஆடுகள்

கடைகளில் தங்க ஆடுகள்

தங்கத்தால் செய்யப்பட்ட ஆடுகள், பொம்மை ஆடுகள், உயிருள்ள ஆடுகள் என காணும் இடங்களில் எல்லாம் ஆடுகள் மயமாக உள்ளது. கடந்த 19ஆம் தேதி தொடங்கி 15 நாட்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சீனாவில் களைகட்டியுள்ளன. லூனார் காலண்டர் படி இவர்கள் கொண்டாடும் பதினைந்து நாள் கொண்டாடத்தின் சிறப்புகள் என்ன என்பதைக் காணலாம்.

பெற்றோர்களிடம் ஆசி

பெற்றோர்களிடம் ஆசி

எல்லாரும் கண்டிப்பாகப் புத்தாடை அணிய வேண்டும். சொர்க்கத்திலிருக்கும் கடவுளர்களைப் பூமிக்கு அழைத்து, அனைத்து நன்மைகளையும் வேண்டிப் பெறுவதற்காக வழிபாடு செய்கிறார்கள். இந்நாளில் அவர்கள் சைவ உணவையே உண்கின்றனர். வீட்டில் உள்ள பெரியோர்களிடத்தில் மன்னிப்பும் ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர்.

முன்னோர்களுக்கு வணக்கம்

முன்னோர்களுக்கு வணக்கம்

மருமகளாக வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்களுடைய பெற்றோருக்கும் தங்கள் குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கும் வணக்கம் செய்கின்றனர்.

மூன்றாம், நான்காம் நாட்களில் மருமகன்களாக வந்தவர்கள் தங்கள் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்கின்றனர்.

கடவுளை வணங்கி

கடவுளை வணங்கி

செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் கடவுளை வணங்கும் நாள். அன்று யாரும் எவர் வீட்டுக்கும் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் விட்டுக்காரர் விருந்தினர் ஆகிய இருவருக்கும் நல்லதல்ல. ஆகவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரவர் வீட்டில் ‘செல்வக் கடவுளை' வரவேற்பார்கள்.

கீரையும் மீனும்

கீரையும் மீனும்

சீனர்களில் கண்தோனிஸ் (Kantonis) பிரிவினர் ‘யீ சாங்' (Yee Sang) எனும் விருந்தில் கலந்துகொள்கின்றனர். பல வண்ணங்களில் இருக்கும் கீரைவகைகளையும் மீன் இறைச்சியையும் சேர்த்து பெரிய தட்டில் வைப்பார்கள். அதைக் (சீனர்கள் உணவு உண்ணப் பயன்படுத்தும்) குச்சிகளைக்கொண்டு கிளறியும் மேலே உயரமாக தூக்கி மீண்டும் தட்டிலேயே கொட்டியும் மகிழ்வார்கள். இப்படி செய்வதால் அவர்களின் வாழ்நாளில் ஓர் ஆண்டு கூடிவிடும் என்கிறார்கள். மேலும், பணமும் செல்வமும் வந்து கொட்டும் என நம்புகிறார்கள்.

கரும்பு கட்டி

கரும்பு கட்டி

சீனர்களில் ஹோக்கியன் (Hokkien) பிரிவினருக்கு மிகவும் முக்கியமான நாளாகும். அதற்கு முதல்நாள் (அதாவது எட்டாம் நாள்) இரவு ‘செட் மாமன்னர்' (King Jed) என்னும் கடவுளரை வணங்குகிறார்கள். இந்த வழிபாட்டின்போது வீட்டு வாசலில் கரும்பைக் கட்டவேண்டும் என்பது கட்டாயமாகும். காரணம், முந்தைய காலத்தில் இன்னொரு சீனப் பிரிவு மக்கள் தாக்குதல் நடத்தியபோது, ஹோக்கியன் இன மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றியது கரும்புதானாம்.

சீனாவின் காதலர் தினம்

சீனாவின் காதலர் தினம்

புத்தாண்டின் நிறைவு நாள். சீனாவின் காதலர் தினமும் இன்றுதான். அன்று ‘தங்யுவன்' (Tangyuan) என்ற ஒரு விருந்து நடக்கும். இரவில் வீடுகளில் 'தங்லுங்' மெழுகு ஒளியணிகளைத் தொங்க விடுவார்கள். சிறுவர்கள் 'தங்லுங்' ஏந்தி ஊர்வலமாகச் செல்வார்கள்.

அதிர்ஷ்டம் இல்லையா

அதிர்ஷ்டம் இல்லையா

என்னதான் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினாலும் ஆடு ஆண்டில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டம் அற்றவர்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. 2003 ஆண்டு ஆடு புத்தாண்டு பிறந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆடு ஆண்டு பிறந்துள்ளது. எனவே கடந்த ஆண்டு கர்ப்பிணிகளாக இருந்த பெண்கள் பிப்ரவரி 19ஆம்தேதிக்கு முன்பே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்.

அதெல்லாம் சும்மா

அதெல்லாம் சும்மா

ஆனால் இது மூடநம்பிக்கை என்கின்றனர் சீன ஜோதிடர்கள். ஆடு என்றால் உற்சாகம், மகிழ்ச்சி தரக்கூடியது. ஆடு ஒரு இடத்தில் கூட அமைதியாக அமர்ந்திருக்காது. உற்சாகமாக துள்ளி குதித்துக்கொண்டிருக்கும் அதுபோல இந்த ஆடு ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருப்பார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+