இதுதான் மேட்டர்.. ஹமாஸ் அமைப்பின் நோக்கம் என்ன? இஸ்ரேலை தாக்குவது ஏன்? பின்னணியில் மெகா பிளான்!

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: நேற்றைய தினம் முதல் நாம் அனைவரும் கேள்விப்பட்டு வரும் வார்த்தை ஹமாஸ்.. வெறும் 30 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியவர்கள் இவர்கள் தான். தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனம் போருக்கு காரணமாக உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் யார்? அவர்களின் சித்தாந்தம் மற்றும் நோக்கம்? என்பது என்ன என்று பார்ப்போம்.

ஹமாஸ்.. நேற்று முதல் அனைவரின் காதிலும் விழுந்து வரும் ஒற்றை சொல். அதோடு ஒட்டுமொத்த நாடுகளின் பத்திரிகைகளிலும் இன்று தலைப்பு செய்தியாக இடம்பிடித்துள்ள வார்த்தை இதுதான். ஒரே நாளில் ஒட்டுமொத்த உலகத்தையும் தன்னை நோக்கி கவனம் செலுத்த தொடங்கிய இந்த ஹமாஸ் நீண்ட நெடிய வரலாற்றை கொண்டவர்கள்.

What Hamas Wants and Why they are fight with Israel? details here

அதாவது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. காசாவை பொறுத்தவரை இது ஒரு அரசியல் கட்சியாகும். காசாவில் இவர்கள் தான் அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள் அண்டை நாடான இஸ்ரேலை காசாவுக்குள் நுழைய விடுவது இல்லை. தங்களுக்கு என்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ள ஹமாஸ் அமைப்பு உள்ளது.

இது இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை. மாறாக காசாவை இஸ்ரேல் கைப்பற்ற துடிக்கிறது. இதனை ஹமாஸ் அமைப்பு விரும்பவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை தீவிரவாதிகள் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும் இருதரப்பும் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று 5 ஆயிரம் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது தற்போது போராக உருவெடுத்துள்ளது. இன்று 2வது நாளாக இருதரப்புக்கும் இடையே யுத்தம் நடக்கிறது. தற்போது வரை 500க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

What Hamas Wants and Why they are fight with Israel? details here

இந்நிலையில் தான் ஹமாஸ் அமைப்பினர் யார்? அவர்களின் சித்தாந்தம் மற்றும் கொள்கை என்ன? எதற்காக திடீரென்று இஸ்ரேல் மீது அவர்கள் நேற்று பயங்கரமான தாக்குதலை தொடர்ந்தனர் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹமாஸ் அமைப்பு என்பது 1987 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ராண்டிசி ஆகியோர் உருவாக்கின்றனர்.

எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒரு அங்கமாக இது செயல்பட தொடங்கியது. ஹரகத் அல்-முகவாமா அல்-இஸ்லாமியா என்பதன் சுருக்கம் தான் ஹமாஸ். மேலும் ஹமாஸ் என்றால் வைராக்கியம் எனவும் பொருள் உண்டு. 1988 ஆம் ஆண்டில் ஹமாஸ் சார்பில் பாலஸ்தீனத்தை சுதந்திரமான நாடாக்குவதும், இஸ்ரேல், காசா மற்றும் மேற்குகரைப்பகுதிகளில் இஸ்லாமிய அரசை அதிகாரத்தில் அமர்த்துவதே இதன் நோக்கமாகும்.

ஹமாஸ் என்பது இஸ்லாமிய கலாசார பிரிவு, தவா மற்றும் ராணுவ பிரிவுகளை வைத்துள்ளது. இதற்கு ஈரான், லெபனான், சிரியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் உதவி செய்கின்றன. நேற்றைய தாக்குதல் வேளையில் ஈரான் ஹமாஸின் செயல்பாட்டை வரவேற்று வாழ்த்து தெரிவித்தது. இதில் இருந்தே ஈரான் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான பந்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம். மத்திய கிழக்கு நாடுகளில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளன.

What Hamas Wants and Why they are fight with Israel? details here

இதனால் தான் பல இஸ்லாமிய நாடுகள் ஹமாஸ் அமைப்பின் பக்கம் இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் குறிப்பிட்டு வருகின்றன. இதற்கிடையே தான் நேற்று கத்தாரும் தற்போதைய மோதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பு அமெரிக்காவின் கொள்கையை முன்பிருந்தே எதிர்த்து வருகிறது. தற்போதும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா பக்கப்பலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேலும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, எகிப்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க பாலஸ்தீனியத்தில் அரசியல் கட்சியாக தற்போது ஹமாஸ் மாற்றமடைந்துள்ளது. இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஃபத்தாவுடன்(பாலஸ்தீனிய விடுதலை இயக்கம்) நேரடி மோதலை தொடங்கிய நிலையில் ஹமாஸ் அரசியலில் கால்பதிக்க தொடங்கியது. 2004ல் ஃபத்தா தலைவர் யாசின் அரபாத் மரணமடைந்த நிலையில் ஹமாஸ் தனது செயல்பாட்டை தீவிரப்படுத்தியது. இதனால் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் மற்றும் ஃபத்தா இடையே 2007 ல் உள்நாட்டு போர் தொடங்கியது.

இதையடுத்து தான் ஹமாஸ் கசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் தொடர்ந்து ஹமாஸ் மற்றும் ஃபத்தா இடையே மோதல் என்பது தொடர்ந்து வருகிறது. ஃபத்தா அரசியல் கட்சியாகவும் உள்ள நிலையில் தற்போது பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியான மஹ்மூத் அப்பாஸ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. ஃபத்தா மதசார்பின்மை கொள்கையுடன் செயல்பட்டும் வரும் நிலையில் ஹமாஸ் இஸ்லாமிய நிலைப்பாட்டுடன் இயங்கி வருகிறது. இத்தகைய சூழலில் தான் காசாவை மட்டுமல்ல.. இஸ்ரேலையும் தன்வசப்படுத்தும் முனைப்பில் ஹமாஸ் தாக்குதலை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+