வேலையை காட்டும் சீனா.. எல்லையில் கட்டும் பாலம்.. வெளியானது சேட்டிலைட் போட்டோ.. எகிறும் ராகுல்காந்தி
பாங்காங் ஏரி குறுக்கே 2வது பாலம் கட்டி வருகிறதாம் சீன ராணுவம்
லடாக்: பாங்காங் டிசோ ஏரியில் சீனா, 2வது பாலம் கட்டி வருகிறது.. சீன ராணுவம் கட்டி வரும் அந்த பாலத்தின் செயற்கைக்கோள் போட்டோவும் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.. இந்த பாலம் கட்டுவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது..!
Recommended Video
கடந்த 2 வருடத்துக்கும் மேலாக மேலாக கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பதட்டம் நீடித்து வருகிறது..
இப்படிப்பட்ட சூழலில், கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியான பாங்காங் டிசோ ஏரியை சுற்றியுள்ள பகுதியில், சீனா 2து பாலத்தை நிர்மாணித்து வருகிறது..

இன்னொரு பாலமா?
இந்த பாலம் கட்டப்பட்டு வருவது செயற்கைகோள் படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இது தொர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: பாங்காங் ஏரி பகுதியில், ஏற்கனவே இருந்த பாலத்துக்கு அருகே இன்னொரு பாலத்தை சீனா கட்டி வருவதாக நமக்கு தகவல்கள் வந்தன..

ஆக்கிரமிப்பு
ஆனால், அந்த 2 பாலங்களுமே கடந்த 1960-களில் இருந்து தொடர்ந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் அமைந்துள்ளன... நமக்கு சொந்தமான பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொள்வதை நாம் என்றுமே ஏற்று கொண்டது இல்லை.. கொஞ்சம்கூட நியாயமே இல்லாமல், ஆக்கிரமிப்பு செய்து கொள்ளும் சீனாவின் எந்த கட்டுமான பணிகளையும் நாம் ஏற்றுக்கொள்வதும் இல்லை.. ஆனால், அனைத்தையும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம். காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா எத்தனையோ முறை உறுதிபட சொல்லி உள்ளது..

பேச்சுவார்த்தை
தேச பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, கடந்த 2014-ல் இருந்தே எல்லை அருகே சாலைகள், பாலங்கள் ஆகிய கட்டுமானங்களை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது... தேச பாதுகாப்பு தொடர்பாக அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்.. இது தொடர்பாக சீனத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்..

காங்கிரஸ்
ஆனால், இதற்கு காங்கிரஸ் தரப்பு முக்கிய கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா இதை பற்றி சொல்லும்போது, பிரதமர் தன்னுடைய சுயகவுரவத்தை, மறந்து விட்டு, நாட்டை பற்றியும், எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும்.. "சீன ஆக்கிரப்பில் உள்ள பகுதி" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறிய வார்த்தைகள் பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கோழைத்தனம்
அதேபோல, இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.. அதில், "சீனா முதல் பாலத்தை கட்டியபோதே, மத்திய அரசு சூழ்நிலையை கவனித்துக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னது... சீனா 2வது பாலத்தை கட்டியபோதும் மத்திய அரசு சூழ்நிலையை கவனித்துக் கொண்டு இருக்கிறோம் என சொல்கிறது... நாட்டின் பாதுகாப்பும் எல்லையின் பாதுகாப்பும் சமரசத்திற்கு அப்பாற்பட்டது. கோழைத்தனமும், பணிந்து போகுதலும் எதற்கும் உதவாது... பிரதமர் நாட்டைப் பாதுகாக்க வேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications