அம்மாடி! கிளியோபாட்ரா சமாதியை தேடி போன இடத்தில்.. ஐயோ.. அப்படியே வியந்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள்
கைரோ: எகிப்தில் கிளியோபாட்ராவின் சமாதியை தேடி சென்ற ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.
உலகின் பழமையான நகரங்களில் ஒன்று எகிப்தில் இருக்கும் Taposiris Magna - தப்போசிரிஸ் மக்னா நகரம். பழமையான கட்டிடங்கள், சிறிய அளவிலான பிரமிடுகள், நீர் நிலைகள் என்று மிகவும் பழமையான நகரம் ஆகும்.
இதேபோல் பல பழமையான நகரங்கள் எகிப்தில் உள்ளன. எகிப்தில் 100க்கும் அதிகமான ராஜா, ராணிகளின் மம்மிகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு இறந்த ராஜாக்கள், ராணிகள், பெரிய நபர்களின் உடல்களை புதைக்காமல், எரிக்காமல் அப்படியே பதப்படுத்தி மம்மியாக மாற்றி வைத்து இருப்பார்கள்.
அங்கு இருக்கும் பிரமிடுகளில் இதுவரை பல மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளது.

எகிப்து
51 to 30 BC நூற்றாண்டுகளில் எகிப்து நாட்டின் அரசியாக இருந்தவராக கருதப்படுபவர் கிளியோபாட்ரா. உலகிலேயே மிகவும் அழகான ராணி, வலிமையான ராணி என்று கருதப்பட்டவர் கிளியோபாட்ரா. இவரின் மறைவிற்கு பின்பே எகிப்து சாம்ராஜ்ஜியம் நொறுங்கி போனது என்று வரலாறு கூறுகிறது. அதன்பின் எகிப்து சாம்ராஜ்ஜியம் ரோமன் அரசின் ஒரு அங்கமாக மாறியது. இந்த நிலையில்தான் ஆராய்ச்சியாளர்கள் பலர் கிளியோபாட்ராவின் சமாதியை இன்னும் தேடிக்கொண்டு வருகிறார்கள். பல நூறு வருடங்களாக கிளியோபாட்ராவின் சமாதியை தேடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எகிப்தில் இருக்கும் அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பகுதியில் கிளியோபாட்ராவின் சமாதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளியோபாட்ரா
இங்கேதான் பல கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் எந்த ஆராய்ச்சியிலும் இதுவரை கிளியோபாட்ராவின் சமாதி கண்டுபிடிக்கப்படவில்லை. மன்னர் மார்க் ஆண்டனி - கிளியோபாட்ரா இருவரும் ஒன்றாக மரணம் அடைந்தனர். இவர்களின் உடல் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இந்த நிலையில்தான் இவர்களின் சமாதியை ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர். 2007ம் ஆண்டுதான் தப்போசிரிஸ் மக்னா நகரம் இதன் காரணமாக கவனம் பெற்றது. வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் கிளியோபாட்ரா இந்த நகரத்தில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கிளியோபாட்ரா சமாதி
இங்கே இருக்கும் கோவில்களில் 27 சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை கிளியோபாட்ரா சமாதி இல்லை. ஆனால் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களின் சமாதி. இந்த சமாதிகளில் கிளியோபாட்ராவின் முகம் பதியப்பட்ட காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் அர்த்தம் அவர்கள் கிளியோபாட்ராவின் சமாதியை நெருங்கிவிட்டனர் என்பதாகும். ஆனாலும் கடந்த 10 வருடங்களாக இந்த சோதனையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் எகிப்தில் கிளியோபாட்ராவின் சமாதியை தேடி சென்ற ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.

புதிய பாதை
தப்போசிரிஸ் மக்னா நகரத்தில் அவர்கள் ஆய்வு செய்து வந்துள்ளனர். அப்போது அங்கு இருக்கும் கோவில் ஒன்றில் சோதனை செய்த போது அவர்கள் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். கட்டிட கலையின் அதிசயம் என்று இதை அவர்கள் புகழ்ந்து உள்ளனர். வித்தியாசமான தோற்றம் கொண்ட, அதிக வேலைப்பாடுகள் கொண்ட, வித்தியாசமான கட்டிட கலை அமைப்புடன் அவர்கள் இந்த பாதையை அமைத்து உள்ளனர். இந்த பாதை 1305 மீட்டர் நீளம் கொண்டது. முழுக்க முழுக்க மணல் கற்கள் மூலம் செய்யப்பட்டது. 2 மீட்டர் உயரம் கொண்டது. இந்த பாதை எதற்காக கட்டப்பட்டு இருக்கும் என்று கேள்வி ஆராய்ச்சியாளர்கள் இடையே எழுந்துள்ளது.

என்ன நடந்தது?
இந்த பாதையை கண்டுபிடித்த காரணத்தால் ஆராய்ச்சியாளர்களுக்கு கிளியோபாட்ராவின் சமாதியை கண்டுபிடித்து விடுவோம் என்ற புதிய நம்பிக்கை பிறந்து உள்ளது. எப்படியும் இந்த பாதைக்கு அருகில்தான் கிளியோபாட்ராவின் சமாதி இருக்கும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். இப்படி ஒரு கட்டிட கலையை நாங்கள் கண்டதே இல்லை. பார்க்கவே வியப்பாக இருக்கிறது. இதில் இருக்கும் குறியீடுகள் பல கிளியோபாட்ராவை குறிக்கிறது. அதுதான் எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. இந்த பகுதியில் பல இடங்கள் நிலநடுக்கம் காரணமாக சேதம் அடைந்துவிட்டது. ஆனால் இந்த சுரங்கம் மட்டும் இன்னும் சேதம் அடையவில்லை. இந்த சுரங்கம் அப்படியே இருக்கிறது. நல்ல உறுதியாக இருக்கிறது. இந்த சுரங்கம் காரணமாக கிளியோபாட்ராவின் சமாதியை கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications