பெட்ரூமில் "எல்லை" மீறிய இளைஞர்.. ஆணுறுப்பில் மூன்று முறிவு.. "ஐயோ.." அடுத்து நடந்ததை பாருங்க
தன்சானியா: படுக்கை அறையில் எல்லையைத் தாண்டிய நபரின் ஆணுறுப்பு 3 இடங்களில் முறிந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், அதன் பின்னர் வெறும் ஆறே மாதங்களில் அவர் மீண்டு வந்துவிட்டாராம். அது குறித்துப் பார்க்கலாம்.
உலகில் மருத்துவத் துறையில் பல வினோதமான சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்று தான். ஆனால், இந்தச் செய்தியைப் படிக்கும் பலருக்கும் இது உண்மை என்பதை நம்பவே சில நிமிடங்கள் வரை ஆகிறது.
அப்படி என்ன தான் நடந்தது எனக் கேட்கிறீர்களா.. தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் தனது பாட்னருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது ஆணுறுப்பு 3 இடத்தில் முறிந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

தீவிர சிகிச்சை:
இதனால் அவருக்கு ஆணுறுப்பு பகுதியில் தீவிரமான காயம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வெறும் ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க வகையில் குணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் சர்ஜரி கேஸ் ரிப்போர்ட்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவருக்கு என்ன நடந்தது, அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கியுள்ளனர்.
உடலுறவின் போது அந்த நபரின் ஆணுறுப்பு நழுவி வெளியே வந்துள்ளது. இதை அவர் கவனிக்காமல் உடலுறவைத் தொடர முயன்ற போது, அவருக்குக் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆண்குறியில் வீக்கம் மற்றும் சிறுநீர்க் குழாய் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர் வலியைப் பொறுக்க முடியாமல் கதறியுள்ளார். ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
என்ன நடந்தது:
கிளிமஞ்சாரோ கிறிஸ்டியன் மெடிக்கல் சென்டருக்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.. அங்குச் சிறுநீரக மருத்துவர்கள் குழு காயத்தின் தீவிர தன்மையைக் கணக்கிட்டு சிகிச்சை அளித்தனர். அங்கே அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மோசமான காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது ஆணுறுப்பு சிதைந்திருந்தது.. மேலும் வீக்கம், ரத்தம் உறைதலும் இருந்துள்ளது. ஆண்குறியில் உள்ள இரண்டு பஞ்சுபோன்ற குழாய்களான கார்போரா கேவர்னோசா சேதமடைந்து உள்ளதும் தெரிய வந்தது. இப்படி அவரது ஆணுறுப்பில் ஏகப்பட்ட பாதிப்புகள் இருந்தது தெரிய வந்தது.
ஆப்ரேஷன்:
இதையடுத்து அவருக்குச் சிக்கலான சில ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டன. கார்போரா கேவர்னோசா, சிறுநீர்க் குழாய் ஆகிய பாகங்களில் உடைந்த பகுதிகள் சீர் செய்யப்பட்டது. அங்கே ஏற்பட்ட மூன்று எலும்பு முறிவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆணுறுப்பைச் சுற்றியுள்ள தோல் சிதைந்திருந்த நிலையில், அது அகற்றப்பட்டது.. இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவர் மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு 6 மாதங்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் அவருக்கு ஆணுறுப்பில் ஏற்பட்ட பாதிப்பு மிக வேகமாகச் சீராகியுள்ளது. மின்னல் வேகத்தில் காயம் சீரடைந்த நிலையில், அந்த நபர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இப்போது பாலியல் வாழ்க்கையை மீண்டும் என்ஜாய் செய்ய முடிவதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஆணுறுப்பு பாதிக்கும் அளவுக்கு பாலியல் செயல்களில் ஏன் ஈடுபடக் கூடாது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications