Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதவியேற்று ஒரு வருஷம் கூட ஆகலயே.. பிரிட்டன் மன்னருக்கு கேன்சர்.. அடுத்து என்ன! அவரது வாரிசு யார்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு கேன்சர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அரச பணிகள் என்னவாகும்.. அவருக்குப் பிறகு அங்கே வாரிசு யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இதனால் அவருக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 What happens when a ruling monarch is ailing as King Charles cancer diagnosis

பிரிட்டன் மன்னர் அந்நாட்டின் அரசியலமைப்பு தலைவராக இருக்கும் நிலையில், அந்த பணிகளை அவர் தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மற்ற அரச கடமைகளில் இருந்து அவர் விலகியுள்ளார். அவர் மிக விரைவில் முழுமையாக அரச கடைமைகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் கடந்த மே 2023இல் தான் முடிசூடினார். பிரிட்டனில் கடந்த 70 ஆண்டுகளாகத் தலைமை பொறுப்பில் இருந்த ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து சார்லஸ் மன்னராகப் பொறுப்பேற்றார். சுமார் 100 உலகத் தலைவர்கள் மற்றும் 2,000 விருந்தினர்கள் திரள மிகச் சிறப்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது. சார்லஸின் தலையில் 360 ஆண்டுகள் பழமையான செயின்ட் எட்வர்ட் கிரீடம் வைக்கப்பட்டது.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்று நோய் பாதிப்பு.. பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

இப்போது மன்னர் சார்லஸுக்கு கேன்சருக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடுத்து அங்கே என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம். அதற்கு முன்பு முதலில் மன்னராக அவருக்கான கடமைகள் என்ன என்று பார்க்கலாம். பிரிட்டனின் அதிகாரப்பூர்வ தலைவரான அவர், அரசியல் ரீதியாக நடுநிலை வகிப்பார். தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், பெரும்பான்மை பெற்ற தலைவரை ஆட்சி அமைக்க அழைக்கும் பொறுப்பும் மன்னருக்குத் தான் இருக்கிறது.

பணிகள்: நாடாளுமன்றம் மன்னரின் உரையுடன் தான் தொடங்கும். மன்னரின் உரையில் அரசின் திட்டங்கள் விளக்கப்படும். மேலும், ஒரு மசோதா நிறைவேறும் போது அதைச் சட்டமாக ஒப்புதல் தருவதும் மன்னர் தான். வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் தூதர்கள் சந்திப்பதும் இவரது பொறுப்பு. இப்போது மன்னர் சார்லஸுக்கு கேன்சர் சிகிச்சை தரப்படும் நிலையில், அவரது அனைத்து திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதேநேரம் அவரது மனைவி கமிலா திட்டமிட்டபடி தனது பணிகளை மேற்கொள்வார். அது சரி இப்போது சார்லஸுக்கு பிறகு மன்னராக யார் பொறுப்பேற்கவுள்ளார். அவரது வாரிசாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

 What happens when a ruling monarch is ailing as King Charles cancer diagnosis

இளவரசர் வில்லியம்: சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவின் மூத்த மகன் இளவரசர் வில்லியம், கடந்த செப்டம்பர் 2022இல் ராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு, இவர் வேல்ஸ் இளவரசர் மற்றும் கார்ன்வால் டியூக் ஆனார். இவரது மனைவி கேத்தர்.. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ்.

இளவரசர் ஹாரி: சார்லஸ் மற்றும் டயானாவின் இளைய மகன் மற்றும் சசெக்ஸின் டியூக் தான் இளவரசர் ஹாரி.. ஆனால், இவர் ஏற்கனவே தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹாரி. இந்த தம்பதிக்கு இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்

இளவரசர் ஆண்ட்ரூ: இவர் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்பின் இரண்டாவது மகன். அதாவது தற்போதைய மன்னர் சார்லஸின் தம்பி.. இருப்பினும், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு இவர் மீது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து இவரும் அரச கடமைகளில் விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+