ஜோ பைடனுக்கு ப்ரோஸ்டேட் கேன்சர்! பூரண நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து!
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பூரண நலம் பெற்று தனது மக்கள் பணிகளை தொடர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜோ பைடனுக்கு புற்றுநோய் என்பதை கேள்விப்பட்டதும் நான் மிகுந்த கவலைக்குள்ளாகினேன். அவர் விரைவாகவும் பூரண நலம் பெறவும் வாழ்த்துகிறேன். ஜில் பைடன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றிருந்தார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். முன்னதாக அவர் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது, 2009 ஆம் முதல் 2017 ஆம் ஆண்டு வரை துணை அதிபராக பதவி வகித்து வந்தார்.
ஜோ அதிபரானதும் துணை அதிபராக கமலா ஹாரீஸ் பதவியேற்றார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று 47 ஆவது அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
ஜோ பைடன்
இந்த நிலையில் ஜோ பைடனுக்கு சில நாட்களாக சிறுநீர் பாதையில் சில அறிகுறிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து 82 வயதாகும் ஜோ பைடன் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றிருந்தார்.
ப்ரோஸ்டேட் கேன்சர்
அப்போது அவருக்கு புரோஸ்டேட் கேன்சர் இருப்பதாக தெரியவந்துள்ளது. ப்ரோஸ்டேட் கேன்சர் என்பது ஆண்களுக்கு வரக் கூடியது. விந்துவை உற்பத்தி செய்யும் பகுதியில் உள்ள திசுக்களை இந்த ப்ரோஸ்டேட் கேன்சர் பாதிக்கும். இது ஆண் குறிக்கும், சிறுநீர் பைக்கும் இடையே இருக்கும்.
உற்பத்தியாகும் கட்டி
இது பல ஆண்டுகளாக உற்பத்தியாகும் ஒரு கட்டி. இது வெளியே தெரியாது. கேன்சர் செல்கள் தீவிரமடைந்தால் மட்டுமே அறிகுறிகள் ஏற்படும். இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீரை அடக்கி வைக்கும் போது பிரச்சினை ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது விட்டுவிட்டு கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல், சிறுநீரில் ரத்தம் வருதல் உள்ளிட்டவைகள் அறிகுறியாக சொல்லப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் ஆண்களுக்கு அதிகளவில் வரும் கேன்சர் என்றால் அது ப்ரோஸ்டேட்தான். இந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் பேருக்கு இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாழ்நாளில் 8 ஆண்களில் ஒருவருக்கு ப்ரோட்ஸ்டேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்
ஆனால் 80 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த ப்ரோஸ்டேட் கேன்சர் வருவது அரிதுதான். ஜோ பைடனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜோ பைடனின் மருத்துவ அறிக்கையில் கிலியாசன் ஸ்கோர் என குறிப்பிட்டு 9 என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேன்சர் செல்கள்
அப்படியென்றால் என்னவென்பதை பார்க்கலாம். அதாவது கேன்சர் செல்கள் எத்தனை வீரியத்தில், வேகத்தில் உடலில் பரவி வருகிறது என்பதை குறிப்பதுதான் கிலியாசன் ஸ்கோர் ஆகும். கேன்சர் திசுக்களை மைக்ரோஸ்கோபியில் பார்க்கும் போது அதன் அளவுகோல் என்பது 6 முதல் 10 வரை மாறும்.
ஹார்மோன்
ஜோ பைடனுக்கு 9 என இருப்பதால் அவருக்கு வந்துள்ளது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கேன்சர் ஆகும். ஜோ பைடனுக்கு வந்த கேன்சர் hormone sensitive என அழைக்கப்படுகிறது. அதாவது கேன்சர் செல்கள் வளர்வதற்கு ஹார்மோன்களை பயன்படுத்திக் கொள்ளும். இது போன்ற கேன்சர் வகைகளை ஹார்மோன் சுரப்பதன் எண்ணிக்கையை குறைப்பதற்கோ அல்லது சுரப்பதை தடுப்பதற்கோ மருந்து கொடுத்து கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஜோ பைடனுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை பொருத்தே அந்த மருந்து வேலை செய்யும் திறன் குறித்து சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications