காதல் என்பது.... இணையத்தில் ஹிட்டடிக்கும் 6 வயது சிறுமியின் விளக்கம்
லண்டன்: காதல் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் அவரது கோணங்களில் இருந்து விளக்கம் கூறலாம். ஆனால், 6 வயது சிறுமி ஒருவர் அளித்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதள வாசகர்களால் விரும்பிப் படிக்கப் பட்டு வருகிறது.
காதலின் சின்னமாக தாஜ்மஹால் மற்றும் இதய வடிவம் குறிக்கப்படுகிறது. காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். சிலர்
காவியங்களாகவே படைத்துள்ளனர். இன்னும் சிலர் தங்களது அனுபவங்களுடன் கற்பனைகளை கலந்து எழுத்தோவியங்களாக தீட்டியுள்ளனர்.
ஆனால், எம்மா என்ற 6 வயது சிறுமி தனது கோணத்தில் காதல் குறித்து தெரிவித்துள்ள வரிகள் இணையத்தில் பிரபலமாகியுள்ளது.

மழலை எழுத்துக்கள்....
உண்மையில் இது சிறுமி எழுதியது தானா என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. நோட்டுப் புத்தகத்தில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதம் போன்ற ஒன்றில் மழலையான எழுத்தில் எழுதப் பட்டுள்ளது.

காதல்னா என்ன..?
அப்பேப்பரின் தொடக்கத்தில் ‘காதல் என்றால் என்ன ?' என ஆங்கிலத்தில் ஒரு கேள்வியும், அதன் கீழே எம்மா.கே, வயது 6 எனவும் எழுதப்பட்டுள்ளது.

பல் விழுந்தாலும் புன்னகை...
அதற்கும் கீழே காதல் என்றால் என்ன என்பதற்கு எம்மா கூறும் விளக்கமாக, ‘காதல் என்பது உங்கள் பற்களில் சில காணாமல் எப்பொழுது போகிறதோ அப்பொழுதும் நீங்கள் புன்னகைப்பதற்கு பயப்படாமல் இருப்பது.

தொடரும் காதல்...
ஏனெனில் உங்களில் சில காணாமல் போனாலும் உங்களை உங்களது அன்பர் காதலிப்பார் என உங்களுக்கு தெரியும் என்பதால் என எழுதப்பட்டுள்ளது.

இதயம்...
கடைசியில் காதலின் குறியீடான இதயம் வரையப் பட்டுள்ளது. இவை அனைத்தும் பென்சிலால் எழுதப்பட்டுள்ளது.

காதல் என்பது...
யார் எழுதினார்கள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் வார்த்தைகளில் உள்ள வசீகரம் காரணமாக பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வருகிறது இந்த எம்மாவின் ‘காதலின் பொருள்'.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications