உள்ளே வந்த பின்லாந்து.. மாறும் ஐரோப்பிய அரசியல்.! அது என்ன நேட்டோ.. ரஷ்யா இதை கண்டு மிரள்வது ஏன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பின்லாந்து இப்போது அதிகாரப்பூர்வமாக நேட்டோவில் இணைந்துள்ளது. இது ஐரோப்பியப் பிராந்தியத்தின் நடவடிக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும். நேட்டோ என்றால் என்ன, இது சர்வதேச அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ரஷ்யாவுடன் பின்லாந்து மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப் பின் உடனடியாக அவர்கள் உடனடியாக நேட்டோ படையில் சேர விண்ணப்பித்தனர்.

உக்ரைன் போருக்குப் பின் சுமார் 81% பின்லாந்து மக்கள் நேட்டோவில் இணையவே ஆர்வம் காட்டினர். இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், இப்போது நேட்டோவில் பின்லாந்து அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

 நேட்டோ என்றால் என்ன?

நேட்டோ என்றால் என்ன?

நேட்டோ - North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கமே நேட்டோ ஆகும். இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் பலம்வாய்ந்த நாடாக இருந்தது அனைவருக்கும் தெரியும். சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிச கொள்கைகளே இருந்தன. சோவியத் மற்ற நாடுகள் மீது படையெடுப்பதைத் தடுக்கவே நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரான்ஸ் என 12 இணைந்து இந்த அமைப்பை 1949இல் உருவாக்கியது. நேட்டோ ஒப்பந்தத்தின்படி ஒரு நேட்டோ உறுப்பு நாடு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால் மற்ற நாடுகள் வந்து உதவும்.

 ரஷ்யா

ரஷ்யா

1991இல் சோவியத் யூனியன் சரிவுக்குப் பிறகு, வார்சா ஒப்பந்தத்தில் நட்பு நாடுகளாக இருந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் நேட்டோ உறுப்பினராகின. . கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைவது என்பது அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றே ரஷ்யா (முன்பு சோவியத் ஒன்றியத்தில் முக்கிய பகுதி) நீண்ட காலமாகக் கூறி வருகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்புவதாகச் சொன்னதற்கு ரஷ்யா மிகக் கடுமையாக எதிர்த்தது. நேட்டோ படைகள் மிக அருகே வந்துவிடும் என்பதே இதற்குக் காரணமாகும்.

பின்லாந்து

பின்லாந்து

பின்லாந்து ரஷ்யாவுடன் 1,340 கிமீ எல்லையைப் பகிர்கிறது. 1948இல், சோவியத் யூனியனுடனான "நட்பு ஒப்பந்தத்தின்" ஒரு பகுதியாக நடுநிலை நாடாக இருக்கப் பின்லாந்து ஒப்புக்கொண்டது. ஆனால், சோவியத் யூனியன் சரிந்த நிலையில், பின்லாந்து நேட்டோவுடன் நெருக்கமாகி, 1994இல் இதன் அதிகாரப்பூர்வ பாட்னர் ஆனது. ஆனால், உறுப்பினராகாமலேயே இருந்தது. ஆனால், உக்ரைன் போரால் அஞ்சி பின்லாந்து மட்டுமின்றி மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்வீடனும் நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. இப்போது பின்லாந்து 31ஆவது நாடாக நேட்டோவில் இணைந்துள்ளது.

 புதிய நாடு இணைய

புதிய நாடு இணைய

புதிய நாடு நேட்டோ கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்றால் அதற்கு ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ஒரே நேரத்தில் தான். விண்ணப்பித்தன, ஆனால் துருக்கி மற்றும் ஹங்கேரி ஸ்வீடனுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது அப்படியே நிற்கிறது. பின்லாந்தைக் கூட கடைசியாக அங்கீகரித்த நாடு இவை தான். துருக்கி மார்ச் 30ஆம் தேதியும், ஹங்கேரி மார்ச் 27ஆம் தேதியும் அங்கீகரித்தது. குர்திஷ் பயங்கரவாதிகளை ஆதரித்ததாகச் சொல்லி துருக்கி அரசு பின்லாந்து சேர அனுமதிப்பதைத் தாமதப்படுத்தியது. துருக்கியின் எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக அவர்கள் இன்னுமே ஸ்வீடனை எதிர்த்து வருகிறார்கள்.

 உக்ரைனுக்கு உதவிய நேட்டோ

உக்ரைனுக்கு உதவிய நேட்டோ

பல நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை வழங்கியுள்ளன. அமெரிக்கா 31 ஆப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்பியுள்ளது. அதேபோல இங்கிலாந்து 14 சேலஞ்சர் 2 டாங்கிகளையும், ஜெர்மனி 14 லெப்பார்ட் 2 டாங்கிகளையும், நார்வே எட்டு லெப்பார்ட் 2 டாங்கிகளையும் அனுப்பியுள்ளது. அமெரிக்கா அதன் ஸ்ட்ரைக்கர் மற்றும் பிராட்லி போன்ற கவச போர் வாகனங்களையும் அனுப்பியுள்ளது.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

இது மட்டுமின்றி, அமெரிக்காவும் இங்கிலாந்தும் உக்ரைனுக்கு ஹிமார்ஸ் போன்ற நீண்ட தூர ஏவுகணைகளையும் அனுப்பியுள்ளன. ரஷ்யாவின் முன் வரிசை படைகளைத் தாண்டி பின்னால் இருக்கும் முக்கிய இலக்குகளைத் தாக்க இது உதவுகிறது. துருக்கி உக்ரைனுக்குப் பல பைரக்டர் TB2 ட்ரோன்களை வழங்கியுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்த அமெரிக்காவும் மற்ற நாடுகளும் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளன. இது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன

 இது மட்டும் தர முடியாது

இது மட்டும் தர முடியாது

2022இல் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் ரஷ்யா முன்னேற்றத்தைத் தடுப்பதில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் வழங்கிய ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தது. போலந்தும் ஸ்லோவாக்கியாவும் உக்ரைனுக்குச் சோவியத் கால மிக் போர் விமானங்களை அனுப்பியுள்ளன. ஆனால், நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் அதிநவீன F-16 விமானங்களை இன்னும் அனுப்பவில்லை. F-16 விமானங்கள் சென்றால் போரில் உக்ரைனுக்கு மிகப் பெரிய திருப்பம் இருக்கும். ஆனால், இந்த விமானங்களை வைத்து ரஷ்யாவுக்குள் சென்று உக்ரைன் தாக்குதல் நடத்தினால், இது போரை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளும் என்பதால் நேட்டோ நாடுகள் இதைத் தரவில்லை.

 எச்சரிக்கையாக இருக்கும் நேட்டோ

எச்சரிக்கையாக இருக்கும் நேட்டோ

அதேபோல உக்ரைன் வான்வெளியைப் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாகவும் நேட்டோ அமைப்பு அறிவிக்கவில்லை. மேலும், நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் படைகளை அனுப்பவில்லை. ரஷ்யாவுடன் இது நேரடி மோதலை தூண்டிவிடும் என்ற அச்சம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளன. இருப்பினும், நேட்டோ நாடுகள் கிழக்கு ஐரோப்பாவில் - லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய உறுப்பு நாடுகளில் 40,000 பேரை நிறுத்தியுள்ளது. மேலும், ஐரோப்பாவில் 3,00,000 பேரை ஹை அலர்ட் மோடில் நிறுத்தியுள்ளது.

 நிராகரிப்பு ஏன்

நிராகரிப்பு ஏன்

கடந்த 2008இல் உக்ரைன் வேண்டுமென்றால் நேட்டோ அமைப்பில் சேரலாம் என்று நேட்டோ கூட்டமைப்பு கூறியது. ஆனால், அதன் பிறகு உக்ரைன் இதற்கான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. போர் ஆரம்பித்தவுடன் நேட்டோவில் விரைவாக இணைய ஒப்புதல் தர உக்ரைனின் கோரிக்கையை நேட்டோ நிராகரித்தது. ஏனென்றால், நேட்டோ விதி 5படி ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அனைத்து உறுப்பினர்களும் அதன் பாதுகாப்பிற்கு வர வேண்டும். உக்ரைன் இப்போது உறுப்பினரானால், நேட்டோ நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுடன் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே நேட்டோ உக்ரைன் கோரிக்கையை நிராகரித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+