சூரியனில் மழை பெய்கிறதாம்.. பல ஆண்டு மர்மத்திற்கு ஒரு வழியாக பதிலை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!
ஹவாய்: சூரியன் இல்லை என்றால் பூமியே இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் சூரியனில் பல மர்மங்கள் இருக்கும் நிலையில், அது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கிடையே சூரியனில் மழை பெய்ய என்ன காரணம் என்பதை இப்போது ஒரு வழியாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனில் மழையா என நீங்கள் ஷாக் ஆகலாம்.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது இந்தப் பிரபஞ்சம் பல்வேறு மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. நாம் கனவிலும் யோசிக்காத பல விஷயங்கள் இங்கு நடந்து வருகிறது. அந்த மர்மங்களுக்கு விடையைக் கண்டுபிடிக்க நாமும் தீவிரமாக முயன்று வருகிறோம். அப்படியொரு மர்மம் தான் சூரியனில் மழை பெய்வது.. ஏது சுட்டெரிக்கும் சூரியனில் மழையா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. ஆம், மழை தான்..

சூரியனில் மழை
சூரியனில் மழை தான் பெய்கிறதாம்.. இதற்கான ரகசியத்தை இப்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியனில் மழை பெய்யும் ரகசியத்தை ஹவாய் பல்கலைக்கழக வானியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் தான் தற்போது கண்டறிந்துள்ளனர்.
அதேநேரம் நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். சூரியனில் பெய்யும் மழை என்பது நமது பூமியில் பெய்யும் நீர்த்துளிகளைப் போல இருக்காது. அதாவது சூரியனின் நீர் துளிகள் மழையாகப் பெய்யாது. அதற்குப் பதிலாகச் சூரிய மழை அதன் வெளிப்புற அடுக்கான கரோனாவில் ஏற்படுகிறது. இது மிகவும் வெப்பமான பிளாஸ்மா பகுதியாகும்.
சூரிய மழை என்றால் என்ன?
இந்த சூரிய மழை நிகழ்வின்போது குளிர்ந்த மற்றும் அடர்த்தியான பிளாஸ்மா கட்டிகள் கரோனாவுக்கு மேல் எழும்பி, பின்னர் மீண்டும் சூரியனை நோக்கி இறங்குகின்றன. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் சுட்டெரிக்கும் சூரியனின் வெளிப்புறத்தில்.. குளிர்ச்சியான பிளாஸ்மா மேலே எழும்பி மீண்டும் மழையைப் போலச் சூரியனை நோக்கிச் செல்லும். சூரியன் வெப்பம் மோசமாக இருக்கும்போது இந்தச் செயல்முறை எப்படி நிகழ்கிறது என்பது பல ஆண்டுகளாகவே ஆய்வாளர்களுக்குப் புதிராக இருந்தது.
இந்த நீண்டகால மர்மத்திற்குத் தான் இப்போது விடை கிடைத்துள்ளது. வானியலாளர் ஜெஃப்ரி ரீப் மற்றும் லூக் பெனாவிட்ஸ் ஆகியோர் இணைந்து இதற்கான பதிலைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்பு Astrophysical Journalல் வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஆய்வாளர்களைக் குழப்பிய சூரிய மழை குறித்த அத்தியாவசிய விளக்கத்தை இது கொடுக்கிறது.
என்ன காரணம்?
இது தொடர்பாக ஆய்வாளர்கள், "சூரியனின் வெளிப்புறமான கரோனாவில் உள்ள பல்வேறு தனிமங்கள் பல காலமாக அப்படியே இருக்கும் என்றே இத்தனை காலமாக நாம் கருதினோம்.. ஆனால் அது உண்மையல்ல.. இரும்பு போன்ற துகள்கள் காலப்போக்கில் மாறுகிறது. இதன் காரணமாகவே சூரியனில் மழை போன்ற போக்கு ஏற்படுகிறது. இங்கு நாம் மாடலை வைத்து நடத்திய ஆய்வில் இரும்பு துகள்கள் மாறும்போது சூரியனில் ஏற்படுவது போல மழை ஏற்படுகிறது" என்று தெரிவித்தனர்.
ஏன் முக்கியம்?
இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சூரியப் பிழம்புகளின் போது சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது. மேலும், சூரிய பிழம்புகள் பூமியை நோக்கி வரும்போது அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கண்டறியவும் இது உதவுகிறது. இதன் மூலம் நிமிடங்களில் நடக்கும் சூரியப் பிழம்புகள் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.
சூரியன் எப்படி உண்மையில் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுவதாக ஆய்வாளர்கள் கூறினர். அதேநேரம் இதில் கூடுதல் ஆய்வுகளும் செய்ய வேண்டி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications