5 மணி நேரம் ரூம் ரூமாக ஓடிய அதிகாரிகள்.. அமெரிக்க தலைவர்களின் ரூமிற்கே வர மறுத்த ஈரான்! பரபர தகவல்
இஸ்லாமாபாத்: உலகமே உற்றுநோக்கிய அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை, மர்ம நாவலைப் போல விறுவிறுப்பாகத் தொடங்கி, இறுதியில் தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானில் சொகுசு ஹோட்டலில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முதல் சில மணி நேரம் இரு தரப்பும் ஒரே ரூமிற்கு கூட வரவில்லையாம்.. பேச்சுவார்த்தை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
வளைகுடாவில் வெடித்த மோதல் ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு 15 நாட்கள் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது மட்டுமின்றி பேச்சுவார்த்தைக்கும் வந்துள்ளது. பாகிஸ்தானில் சுமார் 21 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பில் அதிபர் வேன்ஸ், ஈரான் தரப்பில் டாப் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேரடியாக நடக்கவில்லை
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தை முதல் பல மணி நேரம் நேரடியாக நடக்கவில்லையாம். பிராக்சிமிட்டி டாக்ஸ் (proximity talks) மூலமாகவே நடந்ததாம்.. அதென்ன பிராக்சிமிட்டி டாக்ஸ்.. இது எப்படிச் செயல்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்! நேரடியாகப் பேசிக்கொள்ள முடியாத அளவுக்குப் பகையும் ஈகோவும் முற்றியுள்ள இரு தரப்பினரை, மூன்றாவது நபர் மூலம் பேச வைப்பதுதான் இந்த 'பிராக்சிமிட்டி டாக்ஸ்'.
எளிமையாகச் சொன்னால், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு ஒரு அறையில் இருக்கும். ஈரான் பிரதிநிதிகள் மற்றொரு அறையில் இருப்பார்கள். அமெரிக்கத் தரப்பு தனது கருத்துகளையும் நிபந்தனைகளையும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சொல்லும். உடனே அந்த அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி, ஈரான் குழு இருக்கும் அறைக்குச் சென்று அதைத் தெரிவிப்பார்கள். ஈரானின் பதிலை மீண்டும் அமெரிக்கத் தரப்பிடம் கொண்டு வருவார்கள். இப்படி 'தூது' செல்பவராகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் செயல்பட்டது.
மாறி மாறி ஓடிய அதிகாரிகள்
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த அறையிலிருந்து அந்த அறைக்கு ஓடிக்கொண்டே இருந்தனர். அமெரிக்கா முன்வைத்த அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் மற்றும் ஈரான் கேட்ட முடக்கிய சொத்துக்கள் விடுவிப்பு போன்ற கோரிக்கைகள் இப்படித்தான் கைமாறின. சுமார் சில மணி நேரங்கள் இப்படித் தூதுவர்களின் வழியாகப் பேச்சுவார்த்தை நடந்த பிறகு, ஒரு கட்டத்தில் இது வேலைக்காகாது என்பதை உணர்ந்து இரு தரப்பும் நேரடியாகப் பேச ஒப்புக்கொண்டன. ஆனால், அது நல்ல விதமாக முடியவில்லை.
பிடிவாதம்
அமெரிக்கா மற்றும் ஈரான் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்தபோது, பழைய கசப்புகளும் பிடிவாதங்களும் மேலோங்கின. அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்காவிட்டால் அடுத்த வினாடியே இங்கிருந்து கிளம்புவோம் என ஜே.டி. வேன்ஸ் தரப்பு கறாராகத் தெரிவிக்க, ஈரான் தரப்போ மிரட்டல்களுக்கு அடிபணிய முடியாது எனத் மறுத்துவிட்டது. சில மணி நேரங்கள் நீடித்த இந்த நேரடி விவாதம், இறுதியில் எந்த முடிவும் எட்டப்படாமல் முறிந்து போனது.
முடியாத மோதல்
வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு என வர்ணிக்கப்பட்ட இந்த நிகழ்வு, இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த விரிசலை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. ஒரே ஹோட்டலில் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தும் இரு நாடுகளும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை இணையவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த கையோடு ஜே.டி. வேன்ஸ் குழுவினர் உடனடியாக இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு விரைந்து அமெரிக்கா திரும்பினர்.
பாகிஸ்தான் அதிகாரிகள் நடந்து நடந்து அவர்கள் காலணிகளுக்குத் தேய்ந்தது தான் மிச்சம்.. அமெரிக்காவும் ஈரானும் ஒரே ஹோட்டலில் இருந்தார்களே தவிர, ஒரே நேர்க்கோட்டில் இல்லை என்பது மட்டும் உறுதி!
-
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது! -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்யும் சீனா.. ஆனா ரூட்டு வேற.. கொந்தளிக்கும் அமெரிக்க உளவுத்துறை! -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
ஈரான் போரால் ஐரோப்பாவுக்கு புது சிக்கல்.. 3 வாரம் தான் கெடு! -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை












Click it and Unblock the Notifications