விசிட் அடித்த ஏலியன்? வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. "ஐய்யோ.." மிரண்டு போன பொதுமக்கள்! பரபர
ரோம்: ஏலியன் குறித்த ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இத்தாலி வானில் திடீரென ஒரு மர்மம் ஏற்பட்டுள்ளது. வானில் ஏற்பட்ட அந்த மாற்றத்தைக் கண்டு மக்கள் மிரண்டு போய்விட்டனர்.
இந்த பிரபஞ்சம் பூமியைப் போலவே நிச்சயம் வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வசிக்க வாய்ப்புகள் மிக அதிகம். வேறு கிரகத்தில் வசிக்கும் உயிரினங்கள் மனிதர்களைப் போல இல்லையென்றாலும், கூட நிச்சயம் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கும் என்பதே ஆய்வாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிரகத்தில் நிச்சயம் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதே அவர்கள் கருத்து. இதற்காக வேற்று கிரகங்கள் குறித்த ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.
வானில் ஏற்பட்ட மாற்றம்: இதனிடையே வானில் ஏற்படும் சில மாற்றங்களும் நமக்கு ஏலியன்கள் நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தாலியில் அப்படித்தான் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் இறுதியில் மத்திய இத்தாலியின் சில பகுதிகளில் வானத்தை மூடும் வகையில் சிவப்பு ஒளியின் மர்ம வளையத்தைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். அந்த வளையம் பார்க்க அப்படியே சினிமாவில் வருவதைப் போலவே இருந்துள்ளது. இது குறித்த படங்களைப் பலரும் எடுத்த நிலையில், அதில் ஒன்று இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இத்தாலிய ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள போசாக்னோ என்ற சிறிய நகரில் தோன்றிய இந்த வினோதமான வளையத்தை பினோட்டோ என்பவர் போட்டோ எடுத்துள்ளார். மத்திய இத்தாலியில் இது தோன்றியபோது, இந்த பெரிய வட்டம் குறைந்தது 360 கிலோமீட்டர் விட்டத்தில் இருந்ததாகவும் ட்ரியாடிக் கடல் வரை அப்பகுதியை நீண்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆய்வாளர்கள் சொல்வது: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இதன் விட்டம் 100 முதல் 600 கிமீ வரை இருக்கும்.. இத்தாலி, பிரான்ஸ், குரோஷியா, ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி நாடுகளில் இதுபோல் தோன்றியுள்ளதை நான் போட்டோ எடுத்துள்ளேன்" என்றார். இப்படி வானத்தில் திடீரென தோன்றிய வளையத்தைப் பார்த்து பொதுமக்கள் குழம்பிவிட்டனர்.
இது ஏலியன்கள் வரும் ஸ்பேஸ் ஷிப்பாக இருக்குமோ என்றும் கூட சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், ஆனால், இது ஸ்பேஸ் ஷிப் இல்லை. இந்த வினோத ஒளிவட்டம் என்பது எல்வ் (Elve) என்று அழைக்கப்படும்.. அதாவது ஒளியின் உமிழ்வு மற்றும் மிகக் குறைந்த அதிர்வெண் இடையூறாகும். தெற்கே 285 கிமீ தொலைவில் உள்ள அன்கோனா அருகே புயலில் ஏற்பட்ட கடுமையான மின்னலால் எல்வ் உருவாகுகிறது.
எல்வ்ஸ் என்றால் என்ன: எல்வ்ஸ் என்பது ஒரு அரிய வகை ஸ்ப்ரைட் ஆகும். இது மழை மேகத்திற்கு மேல் ஏற்படும் பெரிய அளவிலான மின் வெளியேற்றம் ஆகும். மின்னல் ஒன்று மிகவும் வலுவாக இருக்கும் போது அது ஒரு தீவிர மின்காந்த துடிப்பை உருவாக்கியது.. அது பூமியின் அயனோஸ்பியரை தாக்கும் போது சிவப்பு வளையம் ஏற்படுகிறது.
ஒரு சாதாரண மின்னல் என்பது 10 முதல் 30 கிலோ ஆம்பியர் மின்னோட்டத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்த வளையத்தை ஏற்படுத்தும் மின்னல் வழக்கமான மின்னலை விட சுமார் 10 மடங்கு வலிமையானது.
ஏலியன் எல்லாம் இல்லை: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "பல காலமாக நான் இதைப் போட்டோ எடுத்து வருகிறேன். அப்போது முதல் சரியான தருணங்கள் தோன்றும் போதெல்லாம் நான் போட்டோ எடுத்துக் கொள்வேன். ஆனால், இது வலுவான மின்னலால் ஏற்படும் நிகழ்வு. அவ்வளவுதான், இதை ஏலியன் விசிட் என்றெல்லாம் நாம் கருதத் தேவையில்லை" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications