"துரோகம்.." அதை மட்டும் மன்னிக்கவே முடியாது.. புதின் யாரை சொல்கிறார்.. மிரண்டு போன நெட்டிசன்கள்
மாஸ்கோ: புதினுக்கு எதிராகக் கலகம் செய்த வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் உயிரிழந்த நிலையில், புதின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
ரஷ்யாவில் இருக்கும் தனியார் மிலிட்டரியான வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின், ஜெட் விமானம் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவர் கடந்த ஜூன் மாதம் தான் புதினுக்கு எதிராகக் கலகம் செய்ய முயன்றார்.

முதலில் கலகம் செய்ய முயன்ற அனைவருக்கும் பொது மன்னிப்பைக் கொடுப்பதாகவே புதின் அறிவித்திருந்தார். இருப்பினும், கொஞ்ச நாட்களிலேயே 62 வயதான ப்ரிகோஜின் இப்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மரணம்: மாஸ்கோவில் இருந்து சென்ற அவரது விமானம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது விமானத்தில் கடைசி 30 நொடிகளுக்கு முன்பு வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை.. திடீரென விமானம் நேராகச் செங்குத்தாகப் பூமியை நோக்கிப் பாய்ந்துள்ளது. எதனால் இப்படி நடந்தது என்பது குறித்துப் பல வித தகவல்கள் பரவி வருகிறது. ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றே பரவலாகச் சொல்லப்படுகிறது.
ப்ரிகோஜின் முன்னெடுத்த கலகத்தால் புதின் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. ப்ரிகோஜினுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், அவரை அப்படியே விட்டால் பலரும் இதேபோல கலகம் எனத் தொடங்கிவிடுவார்கள். இது நமக்குப் பெரிய சிக்கலைத் தரும் என்று புதின் நினைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக புதின் அளித்த உத்தரவின் பெயரில் ப்ரிகோஜின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இணையத்தில் இப்போது வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. இது பழைய வீடியோ தான் என்ற போதிலும் புதின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் சுற்றி இருப்போர் செய்யும் தவறுகளை மன்னிக்க முடியுமா என்று நெறியாளர் கேட்கிறார். ஒரு நொடி யோசிக்கும் புதின் அடுத்துச் சொன்ன பதில் தான் முக்கியமானது.
என்ன சொன்னார்: அதாவது புதின் கூறுகையில், "ஆம்.. ஆனால் அனைத்தையும் மன்னித்துவிட முடியாது. குறிப்பாகத் துரோகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார். கடந்த 2018இல் ஆவணப் படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

ப்ரிகோஜின் தனக்கு எதிராகச் செய்த கலகத்தை புதின் நிச்சயம் துரோகமாகவே கருதியிருப்பார் என்றும் இதன் காரணமாகவே வெறும் சில வாரங்களில் அவரை புதின் திட்டம் போட்டுத் தூக்கியுள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். ப்ரிகோஜின் கடந்த ஜூன் மாதம் புதினுக்கு எதிராகக் கலகம் செய்தார். அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், சில நாட்களிலேயே அவர் திடீரென கலகத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
நெட்டிசன்கள்: மேலும், இதை விட அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் ப்ரிகோஜின் எந்தவொரு வெளிநாட்டிலும் தஞ்சம் புகாமல் நேரடியாக ரஷ்யாவுக்கே வந்தார். புதினை சந்தித்து அவர் தனது தரப்பு நியாயத்தை விளக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அப்போது முதலே மேற்கத்தியத் தலைவர்கள் பலரும் ப்ரிகோஜின் கொலை செய்யப்படுவார் என்றே தொடர்ந்து கூறி வந்தனர். அவர்கள் சொன்னது போலவே இப்போது ப்ரிகோஜினுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications