மியா கலிபா தெரியுமா? அவரோட உண்மையான பெயர் வேறயாமே.. கிறிஸ்துவருக்கு இஸ்லாமிய பெயர் வந்தது எப்படி?
வாஷிங்டன்: ஆபாச படங்கள் மூலம் உலகளவில் பிரபலமான மியா கலிபாவின் உண்மை பெயர் என்ன? ஏன் அவர் பெயரை மாற்றிக்கொண்டார் என்ற விபரத்தை விரிவாக பார்ப்போம்.
ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகளிலேயே உலகளவில் அதிகம் பிரபலமானவர் மியா கலிபாதான். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2014ல் ஆபாச படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 2019 ஆம் ஆண்டு வரை ஏராளமான படங்களில் நடித்தார். தற்போது வரை இவரது வீடியோக்களுக்கு அதிகளவிலான பார்வையாளர்கள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அனைவரும் சொல்வதைபோல் இவரது உண்மையான பெயர் மியா கலிபா இல்லை. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அவர் பிறந்தார். தற்போது 30 வயதை அடைந்துவிட்ட இவர், பெய்ரூட்டில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். தெற்கு லெபனானில் ஏற்பட்ட அமைதியற்ற சூழலை தொடர்ந்து இவரது குடும்பம் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.
அந்நாட்டின் மேரிலாண்டின் குடும்பத்தோடு வசித்து வந்த மியா, அங்குள்ள ஹை ஸ்கூலில் கல்வியை தொடர்ந்தார். அப்போது அவரது நிறத்தை வைத்து சக மாணவர்கள் கேலி செய்வார்களாம். ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற அவர், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிஏ வரலாறு படித்து இருக்கிறார்.

டீல் ஆர் நோ டீல் எனப்படும் ஸ்பானிஷ் டிவி விளையாட்டு நிகழ்ச்சியில் பெட்டியை எடுத்து வரும் பெண்களில் ஒருவராக தனது பணியை தொடங்கினார். அதன் பின்னர் மாடலாக மாறிய அவர் 2014 ஆம் ஆண்டு ஆபாச திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதுவரை மியா கலிபாவின் பெயர் சாரா ஜோ சாமூன் என்பதுதான்.
கத்தோலிக கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த இவருக்கு இஸ்லாமிய பெயர் வர காரணம் அவரது முதல் ஆபாச படம்தான். இவர் மியா என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்து வந்து உள்ளார். அதன் பெயருடன் பிரபல அமெரிக்க ராப் பாடகர் விஸ் கலிபாவின் பெயரை இணைத்து மியா கலிபா என்ற பெயரில் அவரது முதல் ஆபாச படத்தில் நடித்தார்.
ஹிஜாப் அணிந்தபடி அந்த படத்தில் அவர் நடித்தது பிரபலமான நிலையில், அதையே நிரந்திர பெயராக மாற்றிக்கொண்டார். ஆனால், இதற்காக கடும் எதிர்ப்புகளை அவர் எதிர்கொண்டார். இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்தும் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக அரபு நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
அந்த படத்தில் நடித்ததற்காக பெற்றோர் அவரை கைவிடுவதாக அறிவித்தனர். அவருக்கு பல்வேறு கொலை மிரட்டல்களும் இதனால் வந்தன. இந்த எதிர்ப்புகளால் மியா கலிபா என்ற பெயர் பிரபலமடைந்த நிலையில், அதை வைத்தே கோடிகளை ஈட்ட முயன்றது கார்ப்பரேட். எனவே அந்த பெயரையே அவரது நிரந்தர பெயராக மாற்றிவிட்டது. அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் நிஜ பெயரை வெளிப்படுத்தாமல் மியா கலிபா என்றே குறிப்பிட்டது.
காலப்போக்கில் இவரது நிஜப் பெயரே மறக்கடிக்கப்பட்டு கதாபாத்திர பெயரான மியா கலிபா என்பதே நிஜமாகிப் போனது. சாரா ஜோ சாமூன் என்ற உண்மையான பெயரையே பலரும் மறந்துபோயினர். அவரை இஸ்லாமியர் என்று நினைத்து மதரீதியாகவும் பலர் சமூக வலைதளங்களில் துன்புறுத்தி இருக்கின்றனர். அதே நேரம் கதோலிக மதத்தையும் தான் பின்பற்றவில்லை என அவர் 2015 ஆம் ஆண்டில் அறிவித்தார்.
சில ஆண்டுகள் கழித்து ஆபாச பட நிறுவத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார் சாரா ஜோ. ஆனால், மியா கலிபா என்ற பெயர் கொண்ட இணையதளத்தை அந்த நிறுவனமே கைவசம் வைத்திருந்தது. அதை சாரா ஜோவிடமே வழங்க வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர். 2019 ஆம் ஆண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய மியா கலிபா வேறு தொழில்களை செய்து வருகிறார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications