மொத்தமாக முடங்கும் சீனா? திடீரென குழந்தைகளை குறிவைக்கும் நிமோனியா.. அடுத்த பெருந்தொற்றாக மாறுமா

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் இப்போது திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இதற்கு என்ன காரணம்.. இது அடுத்த பெருந்தொற்றாக மாறும் அபாயம் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை எல்லா நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

 What is the real reason behind sudden pneumonia outbreak in China

மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகே நாம் கொரோனா பாதிப்பைக் குறைத்துள்ளோம். இதற்கிடையே கொரோனா இப்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் மற்றொரு பாதிப்பைச் சமாளிக்கப் போராடி வருகிறது.

சீனா: அங்குள்ள பள்ளிகளில் திடீரென மாணவர்களுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணத்தில் இப்போது இந்த பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. நிமோனியா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில், அங்கே சில பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்குப் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது.

கொரோனா குறித்து முன்கூட்டியே எச்சரித்த சர்வதேச நோய் கண்காணிப்பு தளமான ப்ரோமெட் என்ற அமைப்பும் கூட இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல உலக சுகாதார அமைப்பும், சீனாவில் அதிகரித்துள்ள மூச்சுத்திணறல், குழந்தைகள் மத்தியில் பரவும் நிமோனியா பாதிப்பு ஆகியவை குறித்த விரிவான தகவல்களைக் கோரியுள்ளது. அதேநேரம் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் வந்த முதல் குளிர் காலம் இது என்பதாலேயே வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

என்ன காரணம்: மேலும், சில அறியப்படாத நோய்க் கிருமிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சீனா கூறியுள்ளது. இந்த திடீர் நிமோனியா பாதிப்பு வேகமாகப் பரவும் நிலையில், சுவாச நோய்ப் பாதிப்பிற்கான அபாயத்தைக் குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சீனா மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்த பாதிப்பு திடீரென அதிகரிக்க என்ன காரணம் என்று தெளிவாகத் தெரியாத போதிலும், 'வாக்கிங் நிமோனியா' என்றும் அழைக்கப்படும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா காரணமாக பாதிப்பு அதிகரித்திருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அங்கே திடீரென பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

நிமோனியா என்றால் என்ன: நிமோனியா என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு வகையான தொற்று பாதிப்பாகும். நிமோனியா பாதிப்பு ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நுரையீரலையும் பாதிக்கலாம். இதனால் நமது நுரையீரல் திரவம் அல்லது சீழ் கொண்டு நிரப்பும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளும் கூட நிமோனியா பாதிப்பை ஏற்படுத்தும். இது மிக மோசமான பாதிப்பைக் கூட ஏற்படுத்தும்.

சளி, இருமல், காய்ச்சல், குளிர் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். வயது, உடல் ஆரோக்கியம், நோய் காரணம் ஆகிய காரணங்களை வைத்தே நிமோனியாவின் தீவிரத்தன்மை இருக்கும். இவை வழக்கமான அறிகுறிகள் என்ற போதிலும், சீனாவில் ஏற்பட்டுள்ள நிமோனியா பாதிப்பில் சில விஷயங்கள் வித்தியாசமாக இருக்கிறது. அதாவது அங்கே காய்ச்சல் மற்றும் நுரையீரல் எரிச்சல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. அதேநேரம் அங்கே யாருக்கும் இருமல் இருப்பதில்லை.

சிகிச்சை எப்படி: நிமோனியாவுக்கு ஆன்ட்டி வைரல், ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகளை அளித்து சிகிச்சை அளிக்கலாம். அதேநேரம் இந்த சிகிச்சை செயல்முறை பல வாரங்கள் வரை கூட நீடிக்கும். சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை வைத்துப் பார்க்கும் போது, அது அதிக காய்ச்சலை ஏற்படுத்தும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பால் ஏற்பட்டது போலத் தெரிவதாக டாக்டர் துஷார் தயல் தெரிவித்தார்.

அடினோவைரஸ், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், என்டோவைரஸ், ரைனோவைரஸ் அவ்வளவு ஏன் கொரோனா வைரஸ்கள் கூட இந்த பாதிப்பை ஏற்படுத்துமாம். மேலும், பல பாக்டீரியாக்கள் மற்றும் ஸ்பைரோசீட்ஸ் மற்றும் லெப்டோஸ்பைரா ஆகியவையும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

சீனாவில் இப்போது தான் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் இது கொரோனாவை போல பெருந்தொற்றாக இருக்குமா என்று சொல்வது கடினம். அதேநேரம் மாஸ்க் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது ஆகியவற்றை பின்பற்றினால் எந்தவொரு பாதிப்பும் வராது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+