"பயங்கர கருப்பு.." அதிபர் புதின் கைகளை பார்த்தீங்களா.. பின்னால் மறைந்திருக்கும் மர்மம்.. பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் உடல்நிலை குறித்து வெளியாகி உள்ள புதிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகமே எதிர்த்தாலும் கூட சத்தமின்றி உக்ரைன் போரைத் தொடர்ந்து நடத்தி வருபவர் தான் புதின், ரஷ்யா அதிபராக உள்ள புதின் எப்போதுமே மர்மங்கள் நிறைந்த மனிதனாகவே அறியப்படுகிறார்.

எதிரிகள் அதிகம் என்பதால் அவரது குடும்பம் குறித்த தகவல்களை எப்போதும் ரகசியமாகவே வைத்துக் கொள்வார். அவர்கள் எங்கே உள்ளனர் என்பது புதின் உள்ளிட்ட வெகு சிலருக்கு மட்டுமே தெரியுமாம்.

 புதின்

புதின்

அதேபோல புதின் உடல்நிலை குறித்தும் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு மிகவும் அரிதான ரத்த புற்றுநோய் உள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர் அவரசப்பட்டு உக்ரைன் போரைத் தொடங்கியதாகவும் கூட சிலர் குறிப்பிட்டனர். இந்தச் சூழலில் உக்ரைன் அதிபர் புதின் உடல்நிலை குறித்து மேலும் சில தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

 ரொம்பவே கருப்பு

ரொம்பவே கருப்பு

புதின் உடல்நிலை குறித்த ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி லார்ட் டானட் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து உள்ளார். சமீபத்தில் வெளியான புதினின் உடல்நிலை அவருக்குக் கடுமையான நோய்ப் பாதிப்பு இருப்பதைக் குறிப்பாகத் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "புதின் உடல்நிலை குறித்து இங்குத் தொடர்ந்து விவாதம் நடக்கிறது. அவரது கைகளில் மேற்பகுதி கருப்பாக இருக்கிறது.

 என்ன காரணம்

என்ன காரணம்

அந்த குறிப்பிட்ட பகுதியில் அதிகப்படியான மருந்துகளை ஊசி மூலம் செலுத்துவதையே இது குறிக்கிறது. உடலில் வேறு எங்கும் ஊசி போட முடியாத சூழல் இருக்கும்போது இப்படி ஏற்படும். அவர் பூரண உடல்நிலையுடன் தான் இருக்கிறாரா எனச் சொல்வதே கடினம் அவரது உடல்நிலை இப்போது மோசமாகக் கூட பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே, நாம் இதைக் கவனிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

 ரத்த புற்றுநோய்

ரத்த புற்றுநோய்

அமெரிக்க உளவுத் துறை ரிப்போர்டுகளிலும் புதின் மோசமான ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது. இந்தாண்டு மே மாதம் புதினுக்கு நெருக்கமாக உள்ள தொழிலதிபர் ஒருவர் புதின் ரத்த புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வருவதாகக் கூறும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. மேலும், உக்ரைன் போருக்கு சில நாட்கள் முன்பு, ரத்த கேன்சருக்காக ஆப்ரேஷன் செய்ததாகவும் அந்த தொழிலதிபர் கூறி இருந்தார்.

 பகீர் தகவல்

பகீர் தகவல்


இன்னும் சிலர் ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் கூட கூறி வருகின்றனர். இதற்கு ஆதரவாக புதின் பேசுவது போல வெளியாகும் வீடியோக்கள் 'ஹாலோகிராம்' ஆக இருக்கலாம் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகமும் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது. அதாவது ரஷ்யா வெளியிடும் வீடியோக்களில் புதின் போன்ற ஹாலோகிராமை பயன்படுத்தி இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

 தனி கவனம்

தனி கவனம்

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "சமீப காலமாகவே புதின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் தெரிகிறது. அவர் எப்போதும் இல்லாத வகையில் ஆராய்ச்சி துறையில் தனிக் கவனம் செலுத்துகிறார். எனவே, இப்போது நாம் காணும் புதின் என்பவர் ரஷ்ய பாதுகாப்புத் துறை உருவாக்கிய ஹாலோகிராமாக கூட இருக்கலாம். இதையெல்லாம் நாம் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

 ரத்த குளியல்

ரத்த குளியல்


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோலத் தான் சில தகவல்கள் கசிந்தன. கடந்த 2016 முதல் 2020 வரை மருத்துவர்கள் 35 முறை புதினை சந்தித்துள்ளனர். அதிக நாட்கள் புதின் மருத்துவமனையில் செலவழித்து உள்ளார். ரத்த புற்றுநோயைச் சரி செய்ய வேண்டும் என்று புதின் மான் கொம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையில் திரவத்தில் கூட குளித்ததாகவும் எல்லாம் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+