சீனாவுடன் "நெருக்கம்.." ஜெர்மனி போடும் மாஸ்டர் பிளான்! இடையில் இந்த ரஷ்யா வேற.. குழம்பும் உலக நாடுகள்
பெய்ஜிங்: ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தனது டாப் அதிகாரிகளுடன் இப்போது சீன தலைநகர் பெய்ஜிங்கில் முகாமிட்டு உள்ளது உலக நாடுகளுக்கு முக்கிய மெசேஜை உணர்த்துகிறது.
உக்ரைன் போருக்குப் பின், சர்வதேச பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்களே நிலவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த போரால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கிறது.
இந்தச் சூழலில் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தொடங்கி முக்கிய அதிகாரிகள் பலரும் பெய்ஜிங் சென்றுள்ளனர். அங்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங்கை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஜெர்மனி
இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாகவும் சரி, பிஸ்னஸ் ரீதியாகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி வோக்ஸ்வேகன் உள்ளிட்ட ஜெர்மனியின் டாப் 12 நிறுவனங்களின் சிஇஓக்களும் உடன் சென்றுள்ளனர். அடுத்தகட்டமாக அவர்கள் சீன நிறுவனங்களையும் ரகசியமாகச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சீனாவில் கொரோனாவல் ஜீரோ கோவிட் கொள்கை உள்ள போதிலும், தனிமைப்படுத்துதல் இல்லாமல் அவர்கள் டாப் அதிகாரிகளைச் சந்தித்து உள்ளனர்.

ஜி ஜின்பிங்
இருந்த போதிலும், அவர்களுக்கு பெய்ஜிங் விமானத்திலேயே வைத்து கோவிட் டெஸ்ட் எடுக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் ஜி ஜின்பிங்கை சந்தித்து உள்ளனர். தற்போது சர்வதேச அளவில் சிக்கலான சூழல் இருக்கும் போதிலும், ஜெர்மனியும் சீனாவும் ஒன்றிணைந்து செயல்பட ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். மேலும் இந்த பயணம் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும் சீன-ஜெர்மன் உறவுகளின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

3 ஆண்டுகளில் முதல்முறை
கடந்த 3 ஆண்டுகளில் ஜி7 நாடுகளின் தலைவர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். இது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் எந்தளவுக்கு ஜெர்மனியை சார்ந்து உள்ளது என்பதையே காட்டுகிறது. உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவில் இருந்து எரிவாயு உள்ளிட்ட எரிசக்திகளைப் பெறுவதை ஜெர்மனி நிறுத்திக் கொண்டது. அதேநேரம் ரஷ்யாவுடனான நட்புக்கு எந்தவொரு வரம்பும் இல்லை என்று சொல்லும் சீனாவை இந்தளவுக்கு நம்பி இருப்பது சரியானது இல்லை குறித்து ஆளும் கட்சியினரே சந்தேகம் எழுப்புவதும் இங்கு கவனிக்கத்தக்கது.

அழுத்தம்
சமீபத்தில் ஜெர்மனியின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஹம்பர்க் துறைமுகத்தில் உள்ள நான்கு டெர்மினல்களில் ஒன்றின் ஆப்ரேஷனில் 35% பங்குகளை வாங்கச் சீன அரசு கப்பல் நிறுவனமான கோஸ்கோ ரெடியாக இருந்தது. இருப்பினும், இதற்கு ஜெர்மனியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த முதலீடு 24.9% ஆகக் குறைக்கப்பட்டது. சீனா மீது இந்தளவுக்கு நம்பியிருந்தால், ஜெர்மனிக்குச் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது சீன நிறுவனங்களுக்கு ஏற்றபடி கான்டிராக்டை மாற்றச் சொல்லி சீனா அழுத்தம் தந்தால் அதற்குக் கட்டுப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம்.

மந்த நிலை
இருந்தாலும், கூட ஏற்கனவே ரஷ்யாவுடன் ஜெர்மனி உறவைத் துண்டித்து உள்ளதால், மற்றொரு பெரிய நாடான சீனாவை அவர்களால் இழக்க முடியாது. பெரிய பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஜெர்மனிக்குச் சீனா உடனான வணிகம் முக்கியம். சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டால், அது ஜெர்மனிக்குத் தான் பொருளாதாரத்திற்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இதனால் ஜெர்மனி பொருளாதாரம் 1 சதவிகிதம் வரை குறையும் என மதிப்பிடப்படுகிறது.

ஏன் முக்கியம்
ரஷ்யா உடனான உறவு இப்போது இல்லாத சூழலில், ஏற்றுமதிக்கு மற்றொரு மார்கெட்டை ஜெர்மனி பிடிக்க வேண்டும். கடந்த 2020 ஆண்டில் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சீனாவுடன் தான் ஜெர்மனி அதிகம் வர்த்தகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சந்தையும் வேண்டும் சரக்குகளும் வேண்டும் என்பதாலேயே சீனாவுடனான உறவை ஆழப்படுத்த ஜெர்மனி விரும்புகிறது. அதேநேரம் இதற்கு அழுத்தமும் ஜெர்மனியில் ஏற்கவே கிளம்பிவிட்டது.

மனித உரிமை மீறல்
அதேபோல சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கையும் பல நிறுவனங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதை விடச் சீனாவில் உள்ள மோசமான மனித உரிமை நிலையைச் சுட்டிக் காட்டி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் சீனா செல்லக் கூடாது என்று வலியுறுத்தி 70க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் கடிதம் எழுதின. இருப்பினும், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜெர்மனி அரசு, சீனா தான் முக்கிய பொருளாதார பார்டனர் என்பதால் அதை முறித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது.

பிரித்துப் பார்க்க முடியாது
தற்போதைய சூழலில் அரசியலையும் பொருளாதாரத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சீனா இதை நன்றாகவே பயன்படுத்துகிறது. சீனா அரசியல் நிலைப்பாட்டிற்காக வர்த்தக விதிகளை உடைக்க ஒரு போதும் தயங்குவதில்லை. இதற்கு ஒரு உதாரணம் லிதுவேனியா! அந்நாட்டின் அதிகாரிகள் ஒருவர் தைவானுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார் என்பதற்காக சீனா பல வர்த்தக தடைகளை உருவாக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் லிதுவேனியா தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்க முயன்றதாகக் கூறிவிட்டது சீனா!

துண்டிக்க முடியாது
இந்த ஆபத்துகள் எல்லாம் இருப்பது ஜெர்மனி தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்த போதிலும், அவர்களால் சீனா உடனான உறவை உடனடியாக துண்டிக்க முடியாது. ஏனென்றால், பல்வேறு துறைகளில் ஜெர்மனி சீனாவைச் சார்ந்தே இருக்கிறது. கடந்த ஆண்டு மொத்த இறக்குமதியில் சுமார் 12% சீனாவில் இருந்து வந்துள்ளது. இது குறைவாகத் தெரிந்தாலும் சில குறிப்பிட்ட துறைகளில் சீனாவை ஜெர்மனி முழுமையாக நம்பி இருக்கிறது. லேப்டாப் இறக்குமதியைப் பொறுத்தவரை சுமார் 80% சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல மொபைல்களில் 70%க்கு மேல் சீனாவில் இருந்து தான் வந்துள்ளது.

அடுத்து என்ன
இது மட்டுமின்றி ஆட்டோமொபைல், கெமிக்கல், மின்சாரத் தொழில்களும் சீனாவையே ஜெர்மனி அதிகம் நம்பி உள்ளது. வோல்க்ஸ்வேகனின் ஏற்றுமதியில் 40% சீனாவில் இருந்து மட்டும் தான் கிடைக்கிறது. பேட்டரிகள் உள்ளிட்ட சில பொருட்களில் சீனாவை ஓவராக நம்பி இருப்பதைக் குறைக்க புதிய வர்த்தக கொள்கையை உருவாக்க உள்ளதாக ஜெர்மன் பொருளாதார மந்திரி ராபர்ட் ஹேபெக் கூறி இருந்தார். அவர் இப்படிச் சொன்னாலும் கூட இன்று ஜெர்மனி அதிபர் தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள் அங்குச் சென்றுள்ளது ஜெர்மனி சீனா உடனான உறவை விடத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. வரும் காலங்களிலும் சீனாவில் ஜெர்மனி நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications