Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போப் பிரான்சிஸ் மரணத்திற்கு என்ன காரணம்! மருத்துவர்கள் சொல்வது என்ன! வெளியான முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

வாடிகன்: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவு உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களுக்குச் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே போப் பிரான்சிஸ் எப்படி மரணமடைந்தார்.. அதற்கு மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ள காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உலகின் அதிக பின்பற்றும் மதங்களில் ஒன்றான கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். குறிப்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் அவரது உடல்நிலை மிக மோசமான நிலைமைக்குச் சென்றது. இதனால் அவர் மருத்துவமனையிலும் கூட அனுமதிக்கப்பட வேண்டி இருந்தது.

What is the reason for Pope Francis s Cause of Death Revealed Vatican Doctor Shares Insights

போப் பிரான்சிஸ் மரணம்

அங்குத் தீவிரச் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. நிமோனியாவால் அவதிப்பட்ட போப் பிரான்சிஸ் 38 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த நிலையில் அவர் கடந்த மார்ச் 23ம் தேதி தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தில் அவர் பொதுமக்களையும் சந்தித்தார். இந்தச் சூழலில் தான் திடீரென நேற்று திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் அவர் மறைந்ததாக வாடிகன் அறிவித்தது.

போப் மரணத்திற்கு என்ன காரணம்

இதற்கிடையே அவரது மரணத்திற்கு மருத்துவர்கள் கூறியுள்ள காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை அதிகாலையில் உயிரிழந்ததாகவும் அவர் பக்கவாதம் மற்றும் இதயச் செயலிழப்பு காரணமாக இறந்ததாக வாடிகன் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வெளியிட்ட இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 88 வயதான போப் திங்கள்கிழமை அதிகாலையில் இறப்பதற்கு முன்பு கோமா நிலைக்குச் சென்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் சோகம்

கத்தோலிக்கத் திருச்சபையில் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து போப்பாக தேர்வான முதல் தலைவர் என்ற சாதனையைப் படைத்தவர் போப் பிரான்சிஸ். இந்த ஆண்டு இரட்டை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அதில் இருந்து மீண்டபோதும் உடல்நிலை முழுமையாகச் சீராகவில்லை. இருந்தாலும் வீல் சேரில் இருந்தபடி ஞாயிற்றுக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் மக்களைச் சந்தித்திருந்தார். அவர் உடல்நிலை சீராகி வருவதாக மக்கள் கருதிய நிலையில், எதிர்பாராத விதமாகக் காலமானார்

போப் மரணத்தை உறுதி செய்து, கார்டினல் கெவின் ஃபாரெல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நமது புனிதத் தந்தை பிரான்சிஸின் மரணத்தை நான் மிகுந்த வருத்தத்துடன் அறிவித்துக் கொள்கிறேன். (திங்கள்) காலை 7:35 மணிக்கு ரோம் பிஷப் பிரான்சிஸ் நம்மை விட்டுப் பிரிந்தார்" என அறிவித்திருந்தார்.

போப் இறுதிச் சடங்கு எப்போது

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கிற்குத் தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இருப்பினும், இன்னும் இறுதிச் சடங்கிற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பாரம்பரியமாக வெள்ளிக்கிழமை, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு நாள் இறுதி சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது. இன்று இது குறித்த முடிவு எடுக்கப்படவுள்ளது.

போப் பிரான்சிஸ் விருப்பப்படி எளிமையான இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குறிப்பாக அவர் எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளும் இல்லாமல்.. சாதாரணமாக அடக்கம் செய்ய விரும்பினார். அதன்படி இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது. அவர் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் லத்தீன் மொழியில் போப் பிரான்சிஸ் என்று பொறிக்கப்படும்

போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் கடந்த 2013ம் ஆண்டு ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். போர்களுக்கு எதிராகவும் உலக அமைதிக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். எப்போதும் மக்களுடன் நெருக்கமாக இருந்த போப்பாக பிரான்சிஸ் அறியப்படுகிறார். இதனாலேயே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே அவர் மக்களையும் நேரில் சந்தித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+