கிம் ஜாங் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பக்கத்திலேயே புதின் வேற.. கொந்தளித்த அமெரிக்கா.. என்ன நடந்தது
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அங்கே கூறிய கருத்துக்கள், சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்குலக நாடுகள் இதற்குப் பொங்கி எழுந்துள்ளன.
வடகொரிய நாட்டின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். 39 வயதான கிம் ஜாங் உன் வடகொரியாவை விட்டு வெளியே வருவது ரொம்பவே அரிது. அதேபோல வடகொரியாவுக்கும் பெரும்பாலும் எந்தவொரு உலக தலைவர்களும் செல்ல மாட்டார்கள்.

இதனால் வடகொரியா எப்போதும் உலக நாடுகளில் இருந்து தனிமைப்பட்டே இருக்கும். அதுவும் கொரோனாவுக்கு பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இதற்கிடையே மிகவும் அரிய நிகழ்வாக அதிபர் கிம் ஜாங் வடகொரியாவை விட்டு வெளியே சென்றுள்ளார்.
ரஷ்யா பயணம்: வடகொரிய அதிபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக உருவாக்கப்படும் பச்சை நிற ரயிலில் அவர் மாஸ்கோ சென்றார். குண்டு துளைக்காத இந்த ரயிலில் சுமார் 40 மணி நேரம் பயணித்து அவர் மாஸ்கோ சென்றடைந்தார். கொரோனா பரவல் ஆரம்பித்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் கிம் ஜாங் வெளிநாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீது கிம் ஜாங் ரஷ்யா சென்றுள்ளார்.
மாஸ்கோ சென்ற கிம் ஜாங் நேற்றைய தினம் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்தார். சைபீரியாவில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நீடித்தது. கிம் ஜாங் வருகையை முன்னிட்டு உட்சபட்ச பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போடப்பட்டிருந்தது. இந்த மீட்டிங்கில் கிம் ஜாங் அமரும் சேரை கூட அந்நாட்டு அதிகாரிகள் பல முறை பரிசோதனை செய்தனர். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு குறித்த காட்சிகளையும் ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மீட்டிங்: இந்தச் சந்திப்பில் ராணுவம் தொடங்கி தொழில்நுட்பம், ஆயுதங்கள் எனப் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஆயுதங்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.
அப்போது சாட்டிலைட்களை உருவாக்க வடகொரியாவுக்கு ரஷ்யா உதவத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கிம் ஜாங்கை நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்ததற்கு மகிழ்வதாகத் தெரிவித்த புதின், வட கொரியாவுடன் ராணுவ ரீதியாக இணைந்து பணியாற்ற ரெடியாக உள்ளதாகவும் தெரிவித்தார். ரஷ்யா உடனான உறவு தான் வடகொரியாவுக்கு முக்கியம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் என்ன சொன்னார்: மேலும் கிம் ஜாங், "ரஷ்ய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எப்போதும் முழு மற்றும் நிபந்தனையற்ற ஆதரவைத் தந்துள்ளோம். இப்போதும் அதே நிலைப்பாடு தான்.. நாங்கள் எப்போதும் ரஷ்யாவுடன் இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்யா இப்போது தனது இறையாண்மையைப் பாதுகாக்க மேலாதிக்க சக்திகளுக்கு எதிரான நியாயமான போரில் ஈடுபட்டுள்ளது. அதற்கும் எங்கள் ஆதரவு தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா டென்ஷன்: உலகின் பல நாடுகளும் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், வடகொரிய அதிபரின் இந்தக் கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கிம் ஜாங்கிற்கு மேற்குலக நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருக்கு எதிராகப் பலரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே அமைய உள்ள ராணுவ ஒப்பந்தம் குறித்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "ரஷ்யா, வடகொரிய நாடுகளின் நடவடிக்கை சரியானது இல்லை. ஏற்கனவே இரு நாடுகள் மீது பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இரு நாடுகளும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொண்டால் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ஐநா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது துரதிருஷ்டவசமானது" என்று அவர் தெரிவித்தார்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications