இன்னுமா அது கெட்டு போகல.. 8600 ஆண்டு பழைய ரொட்டி.. ஏசு காலத்திற்கும் முந்தையது! மிரண்ட ஆய்வாளர்கள்
துருக்கி: சுமார் 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வாளர்களால் நம்பவே முடியவில்லை. அந்த ரொட்டி எங்கே எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது நாம் பயன்படுத்தும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று ரொட்டி... போர் போன்ற காலங்களிலும் சரி, உடம்பு சரி இல்லாமல் போனாலும் சரி எப்போதும் ரொட்டியைத் தான் தருவார்கள். உலகின் அனைத்து நாடுகளிலும் ரொட்டி பயன்படுத்தப்பட்டே வருகிறது.

ரொட்டியை சரியான முறையில் தயாரித்துப் பயன்படுத்தினால் அதை நீண்ட காலம் அப்படியே பாதுகாக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எத்தனைக் காலம் அப்படிப் பாதுகாக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் வரும்.
பழமையான ரொட்டி: இந்த கேள்விக்குப் பதிலாகத் துருக்கி நாட்டில் ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர் துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் உலகின் பழமையான ரொட்டியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரொட்டி ஏதோ சில மாதங்கள் மட்டும் பழமையானது இல்லை. இது ஏசு கிறிஸ்துவுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாம்.
இந்த ரொட்டி கிமு 6600க்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். தெற்கு துருக்கி நாட்டில் உள்ள கொன்யா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமான கேடல்ஹோயுக் என்ற பகுதியில் இந்த பழமையான ரொட்டியை கண்டுபிடித்துள்ளனர்.
எங்கே: பழங்கால மண் செங்கல் வீடுகளால் சூழப்பட்ட "மேகன் 66" என்ற பகுதியில் பாதி சேதமடைந்த நிலையில் இருந்த மைக்ரோவேவ் அவன் அருகில் இந்த ரொட்டி எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரொட்டி வட்டமாகவும் பஞ்சு போலவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பிரெட்டை ஆய்வு செய்ததில் அது 8,600 ஆண்டுகள் பழமையான, சமைக்கப்படாத, புளிக்கவைக்கப்பட்ட ரொட்டி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து துருக்கியிலுள்ள அனடோலு பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி உமுட் துர்க்கான் கூறுகையில், "கேடல்ஹோயுக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரொட்டி தான் உலகின் மிகப் பழமையான ரொட்டி.. அந்த ரொட்டியின் மிகச் சிறிய அளவு மட்டும் இப்போது வரை இருக்கிறது. இந்த ரொட்டியின் நடுப்பாகத்தில் விரல் அழுத்தம் இருக்கிறது. அந்த ரொட்டி சமைக்கப்படவில்லை. ஆனால் அது புளிக்கவைக்கப்பட்டு, உள்ளே மாவுச்சத்துகள் இருப்பதால் இப்போது வரை நன்றாக இருக்கிறது. இதுநாள் வரை இதுபோன்ற ஒன்றை யாரும் கண்டுபிடித்ததே இல்லை" என்றார்.
ஆய்வுகள்: இதை மைக்ரோஸ்கோப் மூலமாகவும் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஸ்கேனிங்கில் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் படங்கள் மாதிரியில் காற்று இடைவெளி இருப்பது தெரிகிறது. மேலும் ஸ்டார்ச் துகள்களும் அதில் உள்ளது. இதன் மூலம் அந்த ரொட்டி பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிறது. மாவையும் தண்ணீரையும் இணைத்து இதைச் செய்துள்ளனர். அடுப்புக்கு அருகில் இதைக் கொஞ்ச நாட்கள் அப்படியே வைப்பதே அவர்கள் திட்டமாக இருந்துள்ளது.
இது துருக்கிக்கும் உலகிற்கும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ரொட்டியின் மேலே களிமண்ணின் மெல்லிய அடுக்கு இருந்துள்ளது. அதுவே இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ரொட்டியை பாதுகாத்து வந்துள்ளது. இத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ரொட்டி நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications