கொசு கடித்தால் உயிரே போகும் ஆபத்து.. உலக நாடுகளை அலறவிடும் வெஸ்ட் நைல் வைரஸ்! ரொம்ப ரிஸ்க்
ரோம்: ஐரோப்பிய நாடுகளை இப்போது வெஸ்ட் நைல் வைரஸ் அலறவிட்டுக் கொண்டு இருக்கிறது. இதுவரை 5க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், ஐரோப்பியச் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இது பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது.. இது எந்தளவுக்கு ஆபத்தான ஒன்று என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலகத்தில் திடீர் திடீரென நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வைரஸ் பாதிப்புகள் திடீரென வேகமாகப் பரவுகின்றன. இவை எங்கு கொரோனா போல ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்திவிடுமோ என்பதே மக்களின் அச்சமாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் ஐரோப்பாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் இப்போது அச்சத்தை அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு
இத்தாலியின் லாசியோ பகுதியில் வசிக்கும் வயதான பெண் ஒருவர் வெஸ்ட் நைல் வைரஸ் (WNV) தொற்றால் உயிரிழந்துள்ளார். அங்கு நாடு முழுவதும் இந்த வைரஸால் ஏற்பட்ட 10ஆவது மரணம் இதுவாகும். இதுவரை ஐரோப்பாவில் 5 நாடுகளில் இந்த வெஸ்ட் நைல் வைரஸ் பரவியுள்ளது. லாசியோ பகுதியைப் பொறுத்தவரை, இது நான்காவது வெஸ்ட் நைல் வைரஸ் மரணம் ஆகும். சிஸ்டர்னா டி லத்தினாவைச் சேர்ந்த அவர், முதலில் வெல்லெட்ரியில் உள்ள சான் பவுலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ரோம் நகருக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
கொசுக்கடி தான் ஆபத்து
வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலெக்ஸ் வகை கொசுக்களின் கடி மூலம் மனிதர்களுக்குப் பரவும் ஒரு நோயாகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகளைக் கடிக்கும்போது, அந்த கொசுக்களில் இந்த வைரஸ் புகுந்துவிடுகிறது. அவை பிறகு மனிதர்களைக் கடிக்கும்போது நமக்கு அந்த பாதிப்பு ஏற்படுகிறது.. மனிதர்களில் இந்த வைரஸ் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுள்ளவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. இருப்பினும், மிதமான அறிகுறிகளாகக் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடிப்புகள் போன்றவை ஏற்படலாம். மூளை வீக்கம் (என்செபலைட்டிஸ்), மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் வீக்கம் (மெனிஞ்சைட்டிஸ்) அல்லது கடுமையான தளர்வு வாதம் போன்ற தீவிர பாதிப்புகளும் கூட ஏற்படலாம்.
சிகிச்சை இல்லை
இப்போது வரை வெஸ்ட் நைல் வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், நாம் அறிகுறிகளுக்குக் கட்டுப்படுத்த மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், இனை நோய் உள்ளவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
இங்கு இந்த நோயால் சமீபத்தில் உயிரிழந்த அனைவருமே 50 வயதைக் கடந்தவர்கள் ஆகும். ஜூலை மாதம் கடைசி ஒரு வாரத்தில் மட்டும் இத்தாலியில் 57 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
20% வரை உயிரிழப்பு
நரம்பு மண்டலத்தைத் தாக்கி முடங்கும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரில் 20% வரை உயிரிழப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது 2024இல் 14 சதவீதமாகவும், 2018இல் 20 சதவீதமாகவும் இருந்தது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு இத்தாலி, கிரீஸ், ருமேனியா, பல்கேரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக இத்தாலியின் லத்தினா மாகாணத்தில் 43 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்கவும் அதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை ஐரோப்பியச் சுகாதார அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications