பிரான்ஸ் அதிபர் முகத்தில் "பளார்" விட்ட மனைவி.. வீடியோவை வைத்து விளையாடும் ரஷ்யா! உண்மையில் நடந்தது இதுதான்
பாரீஸ்: வியட்நாமில் பிரான்ஸ் அதிபர் மக்ரோனை அவரது மனைவி அறைந்ததாகவும் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் சொல்லி இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன. இதற்கிடையே இது தொடர்பாக அவரே முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். மேலும், பிரான்ஸ் அதிபர் குறித்து இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுவது ஏன்.. இதன் பின்னணியில் யார் என்பது குறித்தும் அந்நாட்டு அதிபர் மாளிகை சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.
இப்போது பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மக்ரோன் இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு முதலே இவர் தான் பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். தீவிர வலதுசாரியான இவர், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே நேற்று முதல் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டானது.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன்
இப்போது மக்ரோன் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் முன்பு அவரது மனைவி அவரை அறைவது போன்ற வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அதாவது அவர் கீழே இறங்க ரெடியாவதற்குள் விமானத்தின் கதவு திறந்துவிட்டது. அப்போது அவரை மனைவி அறைவது போன்ற காட்சிகள் வெளியானது. அதன் பிறகு அவர் அப்படியே சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போல அந்த காட்சிகள் இருந்தது.
நெட்டிசன்கள்
இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது. பலரும் பிரான்ஸ் அதிபர் மாக்ரோனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் அறையப்பட்டதாக எல்லாம் தகவல்கள் பரப்பின. மேலும், அவரது மனைவியை அந்த வீடியோவில் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அவர் கோபமாகவே அறைந்ததாகக் கூட சிலர் குறிப்பிட்டனர். இதனால் இந்தச் சம்பவம் பேசுபொருள் ஆனது. இதற்கிடையே பிரான்ஸ் அதிபர் மாக்ரோன் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் விளக்கம்
இருவரும் ஜோக் செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷயமாகும் என நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நானும் என் மனைவியும் சும்மா ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் ஜோக் செய்து கொண்டு இருந்தோம். ஆனால், அதை இப்படியெல்லாம் சொல்வார்கள் எனத் துளியும் நினைக்கவில்லை" என்றார்.
பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் (47) மனைவி பிரிஜிட் (72) ஆவார். கடந்த 2007ம் ஆண்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக பிரிஜிட் பணியாற்றிக் கொண்டு இருந்தபோதே மக்ரோன் அவரை சந்தித்தார். இருவருக்கும் இடையே கிட்டதட்ட 25 வயது வித்தியாசம் இருந்த போதும், அதையும் தாண்டி காதல் மலர்ந்தது. திருமணத்திற்குப் பிறகு மக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன
அதேநேரம் பிரான்ஸ் அதிபர் குறித்து இதுபோன்ற தகவல்கள் பரவுவது இது முதல்முறை இல்லை. ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற தகவல்கள் பரபரப்பாகிறது. உக்ரைன் மோதலில் ரஷ்யாவைக் கண்டித்ததால் அவர்களே இதுபோன்ற பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருவதாக பிரான்ஸ் அதிபர் மாளிகை கூறுகிறது.
சமீபத்தில் தான் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸுடன் இணைந்து மாக்ரோன் உக்ரைன் சென்றிருந்த போது அவர் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதாகக் கூட இணையத்தில் தகவல்கள் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications