"பின்னணியில் யார்!" காலிஸ்தானி கொலை விவகாரம்.. மீண்டும் உள்ளே வரும் ட்ரூடோ! இந்தியா குறித்து பரபர
ஒட்டாவா: அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார்.
பஞ்சாபைத் தனியாக காலிஸ்தான் என்ற நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுபோன்ற பிரிவினைவாத இயக்கங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெளிநாடுகளில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை. இதனால் அங்கே இதுபோன்ற பிரிவினைவாதிகள் வெளிப்படையாகவே இயங்கி வருகிறார்கள். சிலர் அங்கிருந்தபடி இந்தியாவில் வன்முறைச் சம்பவங்களும் திட்டமிடுவதாகப் புகார்கள் உள்ளன.
கொல்ல சதி: இதற்கிடையே அமெரிக்காவில் இருக்கும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர், இவரைக் கொல்ல சதி செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிகில் குப்தா இந்திய அரசின் ஊழியர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கள் நாட்டில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் குறித்துக் கூறியுள்ள தகவல்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஹர்தீப் சிங் கொலை விசாரணையில் இந்தியா உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ பேச்சு: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நாங்கள் தொடக்கத்தில் இருந்து இதைத்தான் சொல்லி வருகிறோம். இப்போது அமெரிக்காவின் செய்தியும் அதையேதான் காட்டுகிறது, இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. இந்திய அரசு எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவ வேண்டும்" என்றார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலியும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் கொலை விவகாரம் குறித்துப் பேசியிருந்தார். அதாவது நடந்து வரும் கொலை விசாரணையில் இந்தியா மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்தியா இந்த விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்பதையே கனடா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹர்தீப் சிங்: கடந்த ஜூன் மாதம் கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா என்ற பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டின் முன்பே அடையாளம் தெரியாத நபர் அவரை சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. இந்த கொலை விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ட்ரூடோ கூறியிருந்தார். மேலும், இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்த இந்தியா, இது குறித்து ட்ரூடோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும், ஆதாரங்களை வெளியிட மறுத்த கனடா, தொடர்ந்து இந்தியாவைக் குற்றஞ்சாட்டி மட்டுமே வருகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications