ஈரான் அதிபரின் இறுதி பயணம்..‘இரட்டை சிறகு வல்லூரு’ பெல்-212.! விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விவரங்கள்
டெஹ்ரன்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் உடல்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இப்ராஹிம் பயணித்த ஹெலிகாப்டரின் வகை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
உலக அளவில் பரபரப்பான சூழலுக்கு இடையே ஈரான் நாட்டின் அதிபர் ஆன இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஈரான் நாட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர் அதிபரான நிலையில் பலியாகியிருப்பது ஈரான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் உலக அளவில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை மேற்கொண்டு வரும் ஈரானுக்கும் இது பலத்த அடியாக இருக்கிறது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததை அடுத்து நாட்டின் பல்வேறு குழப்பமான சூழல்கள் நிலவுகிறது.
இப்ராஹிம் ரைசி: இருந்த போதும் இடைக்கால அதிபர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் உள்நாட்டு பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை. இதற்கிடையே இப்ராஹிம் ரைசி பயணித்தது பெல் 212 ஹெலிகாப்டர் என தெரிய வந்திருக்கும் நிலையில் அதனை குறித்து தெரிந்து கொள்ள பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஹெலிகாப்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெல் 212 ஹெலிகாப்டர்: இப்ராஹிம் ரைசி பயணித்தது பெல் 212 வகை ஹெலிகாப்டர் ஆகும். இது பெல் டெக்ஸ்ட்ரான் inc நிறுவனத்தின் ஒரு பிரிவான டெக்ஸ்ட்ரான் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. 1960களின் பிற்பகுதியில் கனேடிய இராணுவத்திற்காக அசல் UH-1 Iroquois என்ற அட்வான்ஸ் டெக்னாலஜி ஹெலிகாப்டரை உருவாக்கியது இந்த நிறுவனம் உருவாக்கியது. தொடர்ந்து. புதிய வடிவமைப்பில் ஒன்றுக்கு பதிலாக இரண்டு டர்போஷாஃப்ட் என்ஜின்களைப் பயன்படுத்தியது. இது அதிக சுமந்து செல்லும் திறனைக் கொடுத்தது.
வரலாறு: தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு பெல் 212 ஹெலிகாப்டர் 1971-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க இராணுவ பயிற்சி ஆவணங்களின்படி, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளாலும் விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெல் 212 என்பது போக்குவரத்து பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் பயன்பாட்டு ஹெலிகாப்டர் ஆகும். அதாவது மக்களை ஏற்றிச் செல்வது, வான்வழி தீயணைப்பு கருவிகளை அனுப்புவது, சரக்குகளை ஏற்றிச் செல்வது மற்றும் ஆயுதங்களை ஏற்றுவது உள்ளிட்ட அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கும் ஏற்றதாக இந்த பெல் 212 இருக்கும்.
சிறப்புகள்: ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான ஈரானிய மாடல் அரசாங்க பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டது. பெல் ஹெலிகாப்டர் சமீபத்திய வரவான சுபாரு பெல் 412வின் வெர்ஷன் ஆகும், இது போலீஸ் பயன்பாடு, மருத்துவப் போக்குவரத்து, இராணுவ போக்குவரத்து, எரிசக்தித் துறை மற்றும் தீயணைப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சியில் உள்ள அதன் வகை சான்றிதழ் ஆவணங்களின்படி, அதில் பணியாளர்கள் உட்பட 15 பேர் பயணிக்க முடியும்.
பயன்படுத்தும் நாடுகள்: பெல் 212 ஐ பறக்கும் இராணுவம் அல்லாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றனர். ஜப்பானின் கடலோர காவல்படை அடங்கும், அமெரிக்காவில் சட்ட அமலாக்கம், தீயணைப்பு துறை, தாய்லாந்தின் தேசிய போலீஸ், மற்றும் ஈரானில் விமானப்படை மற்றும் கடற்படை என மொத்தம் 10 ஹெலிகாப்டர்களை கொண்டுள்ளது. அமெரிக்க மட்டுமல்லாது தாய்லாந்து, செர்பியா, ஜப்பான், கிரீன்லாந்து கொலம்பியா, குரோசியா, போஸ்னியா உள்ளிட்ட நாடுகளும் இந்த வகை ஹெலிகாப்டரை பல்வேறு பயன்படுகளுக்காக யோகித்து வருகிறது.
விபத்துகள்: பெல்-212 ஹெலிகாப்டரால் ஏற்பட்ட விபத்துகள் என்று பார்க்கும்போது கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டில் கடற்கரையில் தனியாரால் இயக்கப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது என விமான பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்து இருக்கிறது. 2018ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட இதே பெல் 212 ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
200 கீமி வேகம்: சிறப்புகள் என்று பார்க்கும்போது இரட்டை எஞ்சின் இரட்டை சிறகுகள் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் 15 பேர் பயணிக்க முடியும். சுமார் ஆறு மீட்டர் நீளமும் இரண்டரை மீட்டர் உயரமும் கொண்ட இந்த விமானம் அவசர காலங்களில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. மேலும் நிலையான பயணங்களின் போது மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். அது மட்டுமல்லாமல் 2200 கிலோ எடையை சுமந்து செல்லும் ஆற்றலைக் கொண்டது இந்த பெல் 212.
-
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட்












Click it and Unblock the Notifications