இது ஒன்றுதான் புரியவில்லை! ரஷ்ய படைகள் பற்றி யு.கே உளவுத்துறை பரபரப்பு ரிப்போர்ட்.. குழப்பும் புடின்
மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பற்றி யு.கே நாட்டு அரசின் உளவுத்துறை முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 32வது நாளை எட்டி இருக்கிறது. இதுவரை இரண்டு பக்கங்களிலும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். உக்ரைனின் முக்கியமான நகரங்களை ரஷ்யா குறி வைத்து தாக்கி வருகிறது.
முக்கியமாக கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாடு கிட்டத்தட்ட பல வருடம் பின்னோக்கி செல்லும் அளவிற்கு மோசமான சேதங்களை சந்தித்துள்ளது.

யு.கே
இந்த போரில் ஐரோப்பா நாடுகளில் ஒன்றான யு.கே உக்ரைனை ஆதரித்து வருகிறது. உக்ரைனுக்கு யு.கே தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதேபோல் பொருளாதார ரீதியாகவும் உக்ரைனுக்கு யு.கே உதவி செய்கிறது.ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை யு.கே விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போக உக்ரைனுக்கு உளவு தகவல்களையும் அளித்து யு.கே உதவி வருகிறது.

ஆயுதங்களை பயன்படுத்தும்
இந்த நிலையில் யு.கே உளவுத்துறை அறிக்கை ஒன்றை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்ய அரசு பெரும்பாலும் தரைவழி தாக்குதல்களை நடத்தும். இல்லையென்றால் ஏவுகணை தாக்குதல்களை நடத்தும். ரஷ்யா ஆயுதங்களை பயன்படுத்தியே தாக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த போரில் ரஷ்யா விமானப்படையை அதிகம் பயன்படுத்தவில்லை .

விமானம் இல்லை ஏன்?
இனியும் விமானப்படையை ரஷ்யா பயன்படுத்தும் வாய்ப்புகள் குறைவு, குறைவான விமானங்களை மட்டுமே ரஷ்யா பயன்படுத்தும். உக்ரைனின் வான் பாதுகாப்பு ஆயுதங்களை பார்த்து ரஷ்யா அஞ்சுகிறது. உக்ரைன் உள்ளே புகுந்தால் ரஷ்யாவின் போர் விமானங்கள் நொடியில் சுட்டு வீழ்த்தப்படும். இதனால் அந்த போர் விமானங்களை ரஷ்யா பயன்படுத்த மறுப்பு தெரிவித்து வருகிறது. ரஷ்யாவிடம் இது தொடர்பாக அச்சம் உள்ளது.

ஆயுதங்கள் குறைவாக உள்ளது
அதேபோல் ரஷ்யாவசம் போதிய ஆயுதங்களும் இல்லை. தற்போது கைவசம் மிச்சம் இருக்கும் ஆயுதங்களை வைத்தே பயன்படுத்தி வருகிறது. விமானங்களை பயன்படுத்தாத நிலையில் கைவசம் இருக்கும் ஏவுகணைகள், குண்டுகளை நம்பி இருக்க வேண்டிய நிலையில் ரஷ்ய படைகள் உள்ளன. ஆனால் ரஷ்யாவின் ஏவுகணைகளும் துல்லியமாக இல்லை. அவை 60 சதவிகிதம் தவறான இலக்குகளை தாக்குகிறது.

மக்கள் அதிகம் உள்ள இடங்களில் தாக்கும்
ரஷ்யாவிடம் இருந்த நவீன ஏவுகணைகள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது. அதே சமயம் ரஷ்யா இதற்காக தாக்குதலை நிறுத்தும் வாய்ப்புகள் இல்லை. ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தும். முக்கியமாக மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை ரஷ்யா தாக்கும். அங்குதான் ரஷ்யா இதுவரை தாக்குதல் நடத்தி உள்ளது. அது மேலும் தொடரும் என்று யு.கே தெரிவித்துள்ளது.

குழப்பம் புடின்
ரஷ்ய விமானப்படையை புடின் இதுவரை பயன்படுத்தாதது யு.கே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை குழப்பி உள்ளது. ரஷ்யாவின் விமானப்படை மிகவும் பலம் வாய்ந்தது. ஆனாலும் இதுவரை ரஷ்ய அதிபர் புடின் விமானப்படையை களமிறக்கவில்லை. உக்ரைன் ஏவுகணைகளுக்கு பயந்து ரஷ்யா இப்படி செய்கிறதா இல்லை புடினிடம் வேறு திட்டம் இருக்கிறதா என்று தெரியாமல் மேற்கு உலக நாடுகள் குழம்பி போய் உள்ளன.












Click it and Unblock the Notifications