வந்துருச்சு “வாட்ஸ் சிம்” – ரோமிங் கட்டணமே இல்லாமல் உலகம் முழுவதும் ”யூஸ்” பண்ணலாம்!
ரோம்: உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளமான வாட்ஸ் அப்க்கு உலகெங்கும் 700 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்காக தற்போது வாட்சிம் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது இத்தாலியை சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம்.

ரோமிங் இன்றி வாட்ஸ் அப் சேவை:
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மனுவல் ஜினுல்லா கூறுகையில், "இந்த சேவையின் மூலம் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது அதிக அளவிலான ரோமிங் கட்டணங்கள் செலுத்தவோ, இலவச வை-பை கிடைக்கும் இடத்தை தேடி அலையவோ தேவையில்லை.

150 நாடுகளில் உபயோக வசதி:
வாட்சிம்மை பயன்படுத்தி 150 நாடுகளில் வாட்ஸ் அப்பை எல்லையின்றி உபயோகித்து நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம்" என்றார்.

ரொம்ப ரொம்ப கம்மிதான்:
இந்த வாட்சிம்மின் விலையாக 10 யூரோவும் (714 ரூபாய்) உலகம் முழுவதுற்கும் அனுப்பி வைப்பதற்கு ஒரே கட்டணமாக 5 யூரோவும் (350 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கே தொடர்பு கொள்க:
இந்த சிம் கார்டை பெறவும், ரீசார்ஜ் செய்யவும் வாட்சிம் நிறுவனத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பரப்ப திட்டம்:
தற்போது இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த சிம் கார்டை, உள்ளுர் விநியோகஸ்தர்கள் மூலம் 100 நாடுகளில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஜீரோ மொபைல் திட்டமிட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications