காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.. உலக நாடுகள் வரவேற்றது.. பாங்காக்கில் பிரதமர் மோடி பேச்சு!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகள் வரவேற்று இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பாங்காக்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகள் வரவேற்று இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.அங்கு இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றாார். சவஸ்திபிஎம்மோடி என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
அந்த விழாவில் திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார். இது பெரிய வரவேற்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.

மோடி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் இந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், வரலாற்றில் முதல் முறையாக 60 கோடி வாக்காளர்கள். மக்களுக்கு எங்கள் அரசு மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 130 கோடி இந்தியர்களும் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறார்கள்.

தாய்லாந்து எப்படி
இது தாய்லாந்திற்கு என்னுடைய முதல் அரசு முறை பயணம். இந்தமுறை இங்கு நான் நிறைய இந்தியர்களை பார்க்கிறேன். உலகமே இந்த முறை தீபாவளி கொண்டாடியது. இங்கும் அந்த நிலை இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது.

காஷ்மீர் அந்தஸ்து
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மிகவும் துணிச்சலான நடவடிக்கை. தீவிரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் ஊற்றுக்கண்ணாக இருந்த சட்டத்தை நாங்கள் அகற்றி இருக்கிறோம். இந்த முடிவு மிக மிக சரியானது.

மக்கள் முடிவு
ஒரு முடிவு சரியாக இருக்கும் போது, அதற்கான எதிர்வினைகளும் சரியாக இருக்கும். உலகம் முழுக்க எங்கள் முடிவை எல்லோரும் வரவேற்றார்கள். தற்போது தாய்லாந்திலும் எங்கள் முடிவை எல்லோரும் வரவேற்று பேசுகிறார்கள், என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications