நானும் எலக்ட்ரானிக்ஸ்தான் பாஸ்... சுந்தர் பிச்சைக்கு 'ஸ்வீட் ஷாக்' கொடுத்த ஷாருக்
கலிபோர்னியா: கூகுள் நிறுவன புதிய தலைமை செயலதிகாரியாக உயர்ந்துள்ள சுந்தர் பிச்சைக்கும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கும் இடையிலான ஒரு சுவாரஸ்யமான சம்பாஷனை இது.
இது நடந்தது கடந்த ஆண்டு. கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவன தலைமையகத்தில் வைத்து இந்த உரையாடல் நடந்தது. அப்போது சுந்தர் பிச்சையும், ஷாருக்கனும் இதில் பங்கேற்றனர். கூகுள் ஊழியர்களும் பெருமளவில் (பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) திரண்டு வந்திருந்து ஷாருக் பேச்சைக் கேட்டனர்.
2014, அக்டோபரில் நடந்த இந்த உரையாடலின்போது ஷாருக் கான் கூறிய தகவல்கள், சுந்தர் பிச்சையை ஆச்சரியப்படுத்தின. ஷாருக் கான் பேச்சிலிருந்து...

நான் முட்டாள் இல்லை
என்னைப் பார்ததால் முட்டாள் போல இருக்கும். ஆனால் அப்படி இல்லை. உண்மையில் நான் ஒரு புத்திசாலிதான், நம்புங்கள்.

எலக்ட்ரானிக்ஸ் படித்தவன்
நானும் எலக்ட்ரானிக்ஸ்தான் படித்துள்ளேன். அதுவும் 98 சதவீத மதிப்பெண்களுடன் படிப்பை முடித்தவன். அப்படீன்னா புத்திசாலிதானே...!

ஐஐடி என்ட்ரன்ஸ் கூட எழுதினேன்
அது மட்டுமல்ல ஐஐடி நுழைவுத் தேர்வு கூட எழுதினேன். அது இப்போது உள்ளது போல சிப்ஸ் உலகம் அல்ல. டயோடுகளும், டிரையோடுகளும் புழங்கிய உலகம் அது.

சாப்ட்வேர் என்ஜீனியர் ஆக ஆசைப்பட்டேன்
நானும் கூட சாப்ட்வேர் என்ஜீனியர் ஆகவே ஆசைப்பட்டேன். ஆனால் நடிகராகி விட்டேன். உண்மையில் நடிகராக நான் விரும்பியதே கிடையாது என்றார் ஷாருக்.

இப்ப சொல்லுங்க வர்றீங்களா..!
ஷாருக் இப்படிக் கூறியபோது குறுக்கிட்ட சுந்தர் பிச்சை. இப்போது கூட தாமதம் ஆகவில்லை. வேலையை மாத்திக்க ரெடின்னா சொல்லுங்க என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு ஷாருக்கிடமிருந்து வந்த பதில் பெரிய சிரிப்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications