நவரசம் தாண்டி நாம மொத்தமா 21 வித ரியாக்ஷன்கள் காட்டுறோமாம்... விஞ்ஞானிகள் சொல்றாங்க
வாஷிங்டன்: முகபாவனைகளை ‘நவரசம்' எனக் கூறுவார்கள். ஆனால், அவை மொத்தம் 21 என கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
நமது அன்றாட வாழ்நாளில் நாம் எத்தனையோ விதமான முகபாவனைகளை காட்டுவதுண்டு. இதற்கு முன்னர் அவற்றை ஒன்பது பாவனைகளாக இனம் பிரித்து பட்டியலிட்டிருந்தனர். ஆனால், தற்போது மேலும் பல முக பாவனைகளை மனிதர்கள் காட்டுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அவை என்னென்ன பாவனைகள் என அவர்கள் வரிசையும் படுத்தியுள்ள விஞ்ஞானிகள் அவை எத்தகைய சூழ்நிலையில் வெளிப்படலாம் என விளக்கமும் அளித்துள்ளனர்..

மொத்தம் 21...
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் 21 விதமான முகபாவைனைகளை காட்டுவதாக கூறும் விஞ்ஞானிகள், அதிகபட்சமாக 3 முறை 6 விதமான முகபாவனைகளை காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆதாரப்படங்கள்....
இப்புதிய ஆராய்ச்சியில் மனிதர்கள் வெளிப்படுத்தும் 21 விதமான முகபாவனைகளையும் படங்களாக வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

உணர்வுகளின் சங்கமம்...
மகிழ்ச்சி மற்றும் சோகத்தை வெளிக்காட்டும் மனோநிலையில் கூட அதை மற்ற சில உணர்வுகளோடி பிணைத்து மக்கள் காட்டுவதாக அவர்கள் நிரூபித்துள்ளனர்.

உன்னையறிந்தால் உணரலாம்...
அதாவது, மனிதர்களின் உணர்வுகள் குறித்து நாம் தெரிந்திருந்தால் அதை வகைப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

எளிய உணர்வுகளைத் தாண்டி....
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானி டாகடர் அலெக்ஸ் மார்டின்ஷ் கூறுகையில், ‘நாம் மகிழ்ச்சி, வருத்தம் ஆகிய எளீய உணர்வுகளை தாண்டி சென்று அவர்களின் உணர்வுகளுக்கு உரிய முகபாவனைகளை கண்டறிய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

230 நபர்களிடம் ஆய்வு...
இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்த ஒகியோ மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பரவலாக அறியப்பட்ட மகிழ்ச்சி, துக்கம், பயம், கோபம், ஆச்சரியம் மற்றும் வெறுப்பை. ஆகிய 6 அடிப்படை உணர்ச்சிகளை சித்தரிக்க 230 நபர்களை கேட்டு கொண்டனர்.

எல்லாம் கலந்த கலவை உணர்வுகள்...
அந்த ஆய்வின் அடிப்படையில் கலவை உணர்வுகளாக 21 முகபாவனைகளை வகைப்படுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். அவற்றில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி, வேதனை கலந்த கோபம், வெறுப்பு கலந்த மகிழ்ச்சி என்பன போன்றவை அடங்கும்.

இதுல நீங்க எப்டி பாஸ்....
இதேபோல், விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ள 21 பாவனைகளாவன, மகிழ்ச்சி, வருத்தம், பயம், கோபம், ஆச்சரியம், வெறுப்பு, அதிர்ச்சி, ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி, வெறுப்பு கலந்த மகிழ்ச்சி, திடீர் பயம், திடீர் கோபம், திடீர் ஆச்சரியம், திடீர் வெறுப்பு, எல்லை மீறிய கோபம், எல்லை மீறிய ஆச்சரியம், எல்லை மீறிய வெறுப்பு, ஆச்சரியம் கலந்த கோபம், வெறுப்பு கலந்த கோபம், வெறுப்பு கலந்த ஆச்சரியம், பயம் கலந்த வெறுப்பு, நிலைகுலைதல் என்பனவாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications