Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் குடும்பம் எது? வாயை பிளக்க வைக்கும் மதிப்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்றால், எலான் மஸ்க் என்பார்கள். இந்தியாவில் என்று கேட்டால், முகேஷ் அம்பானியையும், அதானியையும் காட்டுவார்கள். இந்த உலகத்திலேயே அதிக நிலம் மற்றும் சொத்து வைத்துள்ளவர்கள் யார் என்பது பலருக்கும் தெரியாது.. அவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்தை மட்டுமல்ல உலகத்தையே ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.. இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு தான் மிகப்பெரிய அளவில் சொத்து உள்ளது.


உலகிலேயே அதிக சொத்து உடைய குடும்பம்

உலகின் மிகப்பெரிய நில உரிமையாளர் என்ற பட்டத்தை ஒரு குடும்பம் தன்வசம் வைத்திருக்கிறது. ஒரு காலத்தில், அவர்கள் தான் இந்த உலகத்தையே ஆண்டார்கள். அவர்களின் அதிகாரம் 1950கள் வரை உலகம் முழுவதும் பரவியிருந்தது. இன்றும்கூட, உலகின் மொத்த நிலப்பரப்பில் 16% நிலம் அவர்களுக்குத்தான் சொந்தமானது. இவர்களது சொத்துக்கள் கனடா முதல் இங்கிலாந்து வரை பல நாடுகளில் பரவி உள்ளது. இதில் ஒரு பெரும் பகுதி ஆஸ்திரேலியாவில் தான் உள்ளது. ஏன் நியூசிலாந்து மற்றும் பல சிறிய தீவுகளில் கூட இவர்களுக்கு நிலங்கள் உள்ளன. கடற்பகுதிகள் மீதும் இவர்களுக்கு சில உரிமைகள் இருக்கிறது. இந்த நிலங்களை அவர்கள் நினைத்த நேரத்தில் விற்றுவிட முடியும் என்று தோன்றினாலும், அதன் பின்னணியில் உள்ள நடைமுறைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கிறது.

Which family owns the most land and property in the world A mind-blowing valuation

அப்படியானால், இந்த செல்வாக்கு மிக்க குடும்பம் யார்? அவர்களால் ஏன் தங்கள் சொத்துக்களை சுதந்திரமாக விற்க முடியாது தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்,

பிரிட்டிஷ் அரச குடும்பம்

The British Royal Family என்று ஆங்கிலத்தில் மிக உயர்வாக அழைககப்படும் பிரிட்டிஷ் அரச குடும்பம் ஒரு காலத்தில் உலகின் எல்லையில்லாத அதிகாரத்தைக் கொண்டிருந்தது; வரலாற்று ரீதியாக உலகின் பாதி நாடுகள் இவர்களது ஆட்சியின் கீழ் இருந்து வந்தன. இன்றும் பல நாடுகள் இவர்களைத் தங்கள் நாட்டின் தலைவராக அங்கீகரித்துள்ளன. இந்த குடும்பம் வேறு யாருமல்ல, மூன்றாம் சார்லஸ் மன்னர் தலைமையிலான பிரிட்டிஷ் அரச குடும்பம்தான்.

16 சதவீத நிலப்பரப்பு

உலகின் மிகப்பெரிய சொத்து உடையவர்களாக கருதப்படும் இந்தக் குடும்பம், உலகின் தோராயமாக 16% நிலப்பரப்பைத் தன்வசம் வைத்திருக்கிறார்கள் இவர்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் பண்ணைகள் நிலங்கள், காடுகள், நகரஙகளில் பல்வேறு வீடுகள் அடங்கிய சொத்துக்கள் மற்றும் கடற்கரைகளும் உள்ளன. இவை அனைத்தும் 'தி கிரவுன் எஸ்டேட்' (The Crown Estate) என்ற நிறுவனத்தின் மூலம் உலகளவில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து மக்களால் இன்று உயர்வாக போற்றப்படும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, மன்னர் சார்லஸ் இந்த உலகளாவிய சொத்துக்களின் உரிமையையும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், அவர் இந்தச் சொத்துக்களைக் கட்டுப்படுத்தினாலும், அவை அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் கிடையாது. அவர் ஆட்சியில் இருக்கும் வரை அவை அவரிடம் அறக்கட்டளை (Trust) அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

'இன்சைடர்' மற்றும் பிறஆன்லைன் தளங்கள் வெளியிட்ட தகவலின் படி, மன்னர் சார்லஸ் உலகம் முழுவதும் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரது கட்டுப்பாட்டில் தான் சொத்துக்கள் உள்ளன.

உலகளாவிய நில உரிமைகள்

பிரிட்டிஷ் மன்னரின் நிலங்கள் கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா மற்றும் பிற நாடுகளில் பரவி உள்ளது. இது உலகின் மொத்த நிலப்பரப்பில் 16.6% ஆகும். 'தி கிரவுன் எஸ்டேட்' இந்த நிலங்களை நிர்வகிக்கிறது. இது தவிர, பிரிட்டிஸ் அரச குடும்பம் நேரடியாக 250,000 ஏக்கர் நிலத்தை இரண்டு 'ராயல் டச்சிகள் மூலம் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறது. மன்னரின் சொத்துக்கள் மிகவும் பெரியவை மற்றும் பல சொத்துகக்கள் அவர்களே நினைத்தாலும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. கண்ணுக்கு எட்டிய தூரம் பூமியில் எங்கு திரும்பினாலும் இவர்களின் சொத்துக்களை பார்க்க முடியும்.

மொத்தம் 115,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ளன. இதுதவிர சில்லறை விற்பனை நிலையங்கள், குடியிருப்புகள் மற்றும் அலுவலக இடங்கள் உள்ளிட்ட நகர்ப்புற நிலங்கள் உள்ளன. அதேபோல் பல்வேறு கடற்கரைகள், பல்வேறு வணிக சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் அரச குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளன. இதுதவிர மணல், சரளைக்கல், சுண்ணாம்பு, கிரானைட், நிலக்கரி மற்றும் களிமண் போன்ற இயற்கை வளங்களும் கணக்கு வழக்கே இல்லாமல் அரச குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளன.

இவை மட்டுமின்றி 'டச்சி ஆஃப் லான்காஸ்டர்' என்ற 18,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தனியார் எஸ்டேட்டும் பிரிட்டிஸ் அரச குடும்பத்திற்கு உள்ளது. மத்திய லண்டனில் உள்ள இதன் மதிப்பு சுமார் £654 மில்லியன் ஆகும். இந்திய மதிப்பில் 7884 கோடியாகும். இது ஆண்டுக்கு சுமார் £20 மில்லியன் வருமானத்தை ஈட்டுகிறது. இந்திய மதிப்பில் 241 கோடி வருமானம் இந்த ஒரு சொத்தில் இருந்து மட்டும் அரச குடும்பத்திற்கு கிடைக்கிறது.


நிர்வாகம் மற்றும் மதிப்பு

செப்டம்பர் 2022-ல் அரியணை ஏறியபோது, மன்னர் சார்லஸ் $46 பில்லியன் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் பேரரசைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். 'தி கிரவுன் எஸ்டேட்' நிறுவனம் மட்டும் 2022-ல் $490.8 மில்லியன் வருவாய் ஈட்டியது. பிரிட்டிஷ் முடியாட்சியின் உலகளாவிய சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் $15.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 'தி கிரவுன் எஸ்டேட்' என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனமே சொத்துக்களை பராமரிக்கிறது. இவை மன்னரின் பொதுச் சொத்தாக கருதப்படுகின்றன; இவை அரசாங்கச் சொத்தோ அல்லது மன்னரின் தனிப்பட்ட சொத்தோ அல்ல. இது இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் தனித்தனியாக நிர்வகிக்கப்படுகிறது.

சவுதி அரேபிய அரச குடும்பம்

பிரிட்டிஷ் முடியாட்சிக்கு அடுத்தபடியாக, நில உரிமையில் சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் 830,000 சதுர மைல் நிலப்பரப்பை ஆட்சி செய்கிறார். சவுதி அரேபியாவின் அபரிமிதமான எண்ணெய் வளம், அந்த அரச குடும்பத்தை உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+