உலக வரலாற்றில் முதல்முறை! சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிபர்கள் சந்திப்பு! என்ன பேசப்போகிறார்கள்?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர்.. அடுத்த வாரம் சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க முதல் முத்தரப்பு உச்சி மாநாட்டை நடத்த உள்ளதாக, அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த சந்திப்பின்போது மூன்று தலைவர்களும் என்ன பேசுவார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ஏழரை சனி! இந்த பஞ்சாயத்தில் ரஷ்யாவும் உள்ளே வந்திருப்பது.. மொத்த உலக மக்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

White House Confirms Trump Xi and Putin

தெற்கு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக.. நவ. 19ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெறும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது.. வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, அணு ஆயுத குறைப்பு மற்றும் ஈரான் போர் ஆகிவை குறித்து விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் தெரிவித்திருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இருப்பினும் இந்த சந்திப்பில் இருந்து, உடனடியாக ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவோ.. அல்லது பேசி முடிக்கவோ வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்காக, டிரம்ப் நவம்பர் 16ஆம் தேதி வாஷிங்டனில் இருந்து புறப்பட்டு.. முதலில் பிலிப்பைன்ஸ் செல்கிறார். அங்கு ஆசியான் மாநாட்டை முடித்துவிட்டு, நவம்பர் 17 அன்று குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் சீனாவுக்கு போகிறார்.

சீனாவில் நாட்டு அதிபருடனான தனிப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் மதிய உணவு சந்திப்பில் டிரம்ப் பங்கேற்பார். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதே சமயம், ரஷ்ய அதிபர் புதினுடன் தனிப்பட்ட இருதரப்பு சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டிரம்பின் சீனப்பயணத்தில், தொழிலதிபர் எலான் மஸ்க் அவருடன் போக இருக்கிறார். மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.

என்விடியா விஷயத்தில் சீன உளவாளி பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. அதேபோல உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்யும் உதவி, ரஷ்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் மூன்று நாட்டு தலைவர்களும் உட்கார்ந்து பேச முடிவெடுத்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+